Headlines

அல்லாஹ்வின் அருள் வளம்

– ஜெஸிலா பானு – அல்லாஹ்வின் அருள் கொண்ட வளம் பொருந்திய குழந்தையை எடுத்து வந்திருப்பதாக ஹலீமாவும் அவருடைய கணவரும் நம்பினார்கள். தாய் ஆமினா மற்றும் தாத்தா அப்துல் முத்தலிபிடமிருந்து குழந்தை முஹம்மது (ஸல்) அவர்களை, செவிலித்தாய் ஹலீமா பெற்றுக் கொண்டார். கிராமத்திலிருந்து வந்தவர்கள் அன்றிரவு நகரத்தில் தங்கி மறுநாள் காலையில் அவர்களின் ஊருக்குத் திரும்புவதாக இருந்தனர். குழந்தையை எடுத்து ஹலீமா அவருடைய மடியில் கிடத்தியதும் அவருடைய மார்புகளில் பால் சுரந்தது. அவராலேயே நம்ப முடியாத அளவுக்கு…

Read More

கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை!

தென்னமெரிக்கா மற்றும் பல நாடுகளில், சீகா வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுவதால், கர்ப்பிணிப் பெண்கள், வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித மஹிபால எச்சரிக்கை விடுத்தார். சுகாதாரக் கல்விப் பணிமனையில், நேற்று திங்கட்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘கர்ப்பிணிப் பெண்ணொருவர், சீகா வைரஸால் பாதிக்கப்படுவாராயின், அது அவருடைய வயிற்றிலுள்ள சிசுவின்  வளர்ச்சியில் தாக்கம் செலுத்தும். இதனால், குறித்த சிசுவுக்கு, நரம்பியல் சம்பந்தமான…

Read More

மின்னலும் பின்னலும்

கடந்த 18.09.2016 ஆம் திகதி மாலை சக்தி தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட “மின்னல்” நிகழ்ச்சியில் பத்தரமுல்லை சீலரத்ன தேரர் கலந்து கொண்டார். வழமையாக தமிழ்மொழியில்  நடைபெறும் இந்நிகழ்ச்சி சிங்களத்தில் நடைபெற்றதோடு, ஒரு பௌத்த பிக்குவை மாத்திரம் வைத்து நடத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். “மஹிந்த அரசாங்கத்தில் வடபகுதியில் பாரிய அபிவிருத்தி வேலைகள் செய்தபோதிலும் தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கு தவறிவிட்டனர்” இது பற்றி உங்கள் கருத்து என்னவென்று நிகழ்ச்சி தொகுப்பாளரான ஸ்ரீ.ரங்கா  அவர்களால் கேட்கப்பட்டது.  இக்கேள்விக்கான பதிலை தரக்கூடியவர் வடபுல…

Read More

அரச பணத்தை விரயமாக்காதீர்கள் – ஜனாதிபதி

அரச பணத்தை விரயமாக்கும் வகையில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுற்று நிருபம் ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளார். தேவையற்ற வகையில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். இது தொடர்பில் விசேட சுற்றுநிருபம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பொதுமக்கள் பிரதிநிதிகள், அமைச்சின் செயலாளர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள் எவ்வித பயனும் இல்லாது வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும்…

Read More

 சீகா வைரஸ்; இலங்கையில் இல்லை!

சீகா வைரஸ் காய்ச்சல், இதுவரை இலங்கையில் எவருக்கும் தொற்றவில்லை என்று தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பீ.ஜி.மஹிபால ஹேரத், சிலாபம் – நல்லரசன்கட்டு பகுதியில் உயிரிழந்த இரு மூதாட்டிகளும், ஒருவகை வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளனர் என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் கூறினார். சுகாதாரக் கல்விப் பணிமனையில், நேற்றுத் திங்கட்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ‘வெளிநாடுகளுக்குச் சென்று வருபவர்களாலேயே, நாட்டுக்குள் சீகா வைரஸ் பரவக்கூடிய அபாயம் உள்ளது….

Read More

பிலிப்பைன்சில் போதை பொருள் கடத்தல்காரர்களை முற்றிலும் சுட்டுக்கொல்ல உத்தரவு: அதிபர் அதிரடி

பிலிப்பைன்சில் இன்னும் 6 மாதத்தில் கடத்தல்காரர்கள் அனைவரையும் சுட்டுக்கொல்ல அதிபர் உத்தரவிட்டுள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபராக ரோட்ரிகோ டுடெர்ட் பதவி வகிக்கிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் அவர் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்பு இவர் மேயர் ஆக பதவி வகித்தார். இவர் அதிபராக பதவி ஏற்றவுடன் பிலிப்பைன்ஸ் நாட்டில் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டினார். முன்னதாக போதை பொருள் கடத்தல்காரர்களை எதிர்த்து பொது மக்கள் போராட வேண்டும்….

Read More

ஜேர்­ம­னில் நடந்த தேர்­தலில் ஏஞ்­சலா மேர்­கலின் கட்சிக்கு வர­லாற்று தோல்வி

ஜேர்­ம­னியின் பெர்­லின் நடை­பெற்ற தேர்­தலில் ஜேர்­ம­னிய சான்சலர் ஏஞ்­சலா மேர்­கலின் கிறிஸ்­தவ ஜன­நா­யக கூட்­டணி வர­லாற்று  தோல்­வி­யடைந்­துள்­ளது. ஜெர்மனியின் சான்சலர் ஏஞ்­சலா மேர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக கூட்டணியானது, 17.6 சத­வீத ஆத­ர­வையே பெர்லின் தேர்­தலில் பெற்­றுள்­ளது. இத­னி­டையே வலது சாரி குடியேறிகள் எதிர்ப்பு கட்சியான எ.எவ்.டி 14 ச­த­வீ­த மக்களின் ஆதரவை வென்றிருக்கிறது. இதனால், பெர்லின் உட்பட மொத்தமுள்ள 16 பிராந்திய நாடாளுமன்றங்களில் 10இல் அதற்கு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது. பொது தேர்தல்களுக்கு ஓராண்டுக்கு முன்னால் அறிவிக்கப்பட்ட குடியேறிகளை…

Read More

சிறைக்கூண்டுகளுக்கு சி.சி.டி.வி கமெரா

சிறைச்சாலைகளில் அண்மையில் இடம்பெற்ற தற்கொலைச் சம்பவங்கள் மற்றும் வேறு சில சம்பவங்களையடுத்து, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சி.சி.டி.வி கமெரா பொருத்தப்படவுள்ளதாக, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைப்பு, நேற்றுத் திங்கட்கிழமை (19) அறிவித்துள்ளது. இவ்வாறு அனைத்து சிறைச்சாலைகளிலும் சி.சி.டி.வி கமெரா பொருத்துவதன் மூலம், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் நடவடிக்கை குறித்து பொலிஸாரால் அவதானமாக இருக்க முடியும் என்று குறித்த அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இவை சிறைக்கூண்டுக்குள்ளேயே பொருத்தப்படல்…

Read More

தேரர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டி ஒன்றை வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்படும் உடுவே தம்மாலோக்க தேரர் மீதான வழக்கு விசாரணையினை எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன ஒத்திவைத்துள்ளார். குறித்த உத்தரவு இன்று (20) பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேரர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கை இளநீருக்கு ஐரோப்பிய நாடுகளில் கிராக்கி

வெளிநாடுகளில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் இளநீருக்கு நல்ல கிராக்கி உள்ளதாக அண்மைய தரவு தெரிவிக்கின்றன. இந்நிலையில் நடப்பாண்டின் மே மாதம் வரையிலான காலப்பகுதில் 16 இலட்சத்திற்கும் அதிகமான தெங்கு உற்பத்தியான இளநீர், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. குருணாகல் மாவட்டத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட இளநீராக கிடைக்கப்பட்ட வருமானம் ஒரு மில்லியன் ரூபாவை தாண்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 30 இலட்சம் இளநீர் காய்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தென்னைப் பயிர்ச்செய்கைச் சபை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அதன் ஊடாக…

Read More

ராம்குமார் தற்கொலை காட்சி கமெராவில் பதிவாகவில்லை: இது திட்டமிட்ட செயலா?

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், மின் கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் அறையில் கண்காணிப்பு கமெரா உள்ளது. ஆனால், அது பழுதாகி இருப் பதால் தற்கொலை சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்று சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்தக் கமெரா எப்படி பழுதானது? திட்டமிட்டே அது பழுதாக்கப்பட்டதா என்பன போன்ற பல சந்தேகங்களை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு முதல் சிறைகளில்…

Read More

பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் வெளியானது – இங்கே பாருங்கள்

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. குறித்த வெட்டுப்புள்ளிகளின் முடிவுகளைhttp://www.ugc.ac.lk/ என்ற  இணையத்தளத்தில் பார்வையிட முடியும். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் மாவட்ட ரீதியாக  இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை இம்முறை 27 ஆயிரத்து 603 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவுசெய்யப்படவுள்ளதாக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த வருடத்தை விட 10…

Read More