Headlines

தரக்குறைவாக பேசிய பிலிப்பைன்ஸ் அதிபருடன் ஒபாமா திடீர் சந்திப்பு

அமெரிக்க அதிபர் ஒபாமாவை தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக தாக்கிப் பேசிய பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே-வை ஒபாமா சந்தித்துப் பேசியதாக தெரியவந்துள்ளது. லாவோஸ் நாட்டில் வியன்டியான் நகரில் 14-வது ஆசியன் மற்றும் 11-வது கிழக்கு ஆசிய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே-வை கடந்த 6-ம் தேதி அமெரிக்காவின் லாவோஸ் நகரில் சந்தித்துப் பேச முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பின்போது, பிலிப்பைன்ஸ் நாட்டில்…

Read More

சைபீரியாவில் சிவப்பாக உருமாறிய நதி

சைபீரியாவின் வட பகுதியில் பெரும்பாலான மக்களுக்கு பாசன வசதி மற்றும் குடிநீர் ஆதாரமாக அமைந்துள்ள நதி டல்டிகான். இந்த நதியில் இருந்துதான் இப்பகுதியில் உள்ள பெருவாரியான ரசாயன ஆலைகளும் தண்ணீர் சேகரித்து வருகின்றன. மட்டுமின்றி அந்த ஆலைகளின் கழிவுகளும் இந்த நதியிலேயே கொட்டப்படுவதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பனிக்காலத்தில் மட்டுமே பெருக்கெடுத்து ஓடாத இந்த நதியானது திடீரென்று ரத்தச் சிவப்பாகியுள்ளது. இதன் முக்கிய காரணமாக அப்பகுதியில் அமைந்துள்ள நிக்கல் ரசாயன ஆலையை…

Read More

மரம் கைது!

பிரித்தானிய இராணுவ அதிகாரியொருவர் மது அருந்திய நிலையில், மரமொன்றை கைது செய்ய உத்தரவிட்டமையால் குறித்த மரம் 118 வருடங்களாக சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. குறித்த மரம் பாகிஸ்தானில் காணப்படுகின்றது. பிரித்தானிய ஆட்சியில் இந்தியா இருந்த காலத்தில், 1898 ஆம் ஆண்டு ஜேம்ஸ் ஸ்குய்ட் எனும் பிரித்தானிய இராணுவ அதிகாரியே அம்மரத்தினை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். அதிக மதுபோதையில் காணப்பட்ட குறித்த இராணுவ அதிகாரி மரம் நகர்ந்து செல்வதாக கூறி அம்மரத்தினை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து,…

Read More

கட்டாரில் பொதுமன்னிப்பு  காலம் அறிவிப்பு!

கத்தார் நாட்­டுக்கு சென்று  சட்­ட­வி­ரோ­த­மான முறையில் தங்­கி­யி­ருக்கும் வெளி­நாட்­ட­வர்கள் அங்­கி­ருந்து வெளி­யே­று­வ­தற்­காக 3 மாத பொது­மன்­னிப்பு காலம் வழங்­கப்­பட்­டுள்­ளது. செப்­டெம்பர் 1 ஆம் திக­தி­யி­லி­ருந்து டிசெம்பர் 1ஆம் திகதி வரை இப்­பொது மன்­னிப்பு காலம் நடை­மு­றையில் இருக்கும் என வெளி­நாட்டு வேலaை­வாய்ப்பு பணி­யகம் தெரி­வித்­துள்­ளது. இதன்­படி கத்­தா­ருக்கு தொழி­லுக்­காக சென்று வீஸா காலா­வ­தி­யான நிலையில் அதனை புதிப்­பிக்­காது சட்­ட­வி­ரோ­த­மான முறையில் தங்­கி­யி­ருப்­ப­வர்­க­ளுக்கு இந்தப் பொது மன்­னிப்பு காலத்­தினுள் தத்­த­மது தாய் நாட்­டுக்கு செல்­லக்­கூ­டி­ய­தாக இருக்கும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை,…

Read More

ஒபாமாவின் மனைவியை கவிதையால் நெகிழவைத்த தமிழ்ப் பெண்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது உணர்ச்சிகரமான தமிழ் கவிதையால் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவியை நெகிழவைத்த தமிழ்ப் பெண்ணுக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது. சிறுவர், சிறுமியர் இடையே கவிதை இயற்றும் ஆற்றலை ஊக்குவிக்க அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் கவிதை வாசித்தல் நிகழ்ச்சி கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், நேற்று நடைபெற்ற கவியரங்க நிகழ்ச்சியில் பலர் தாங்கள் எழுதிய கவிதைகளை வாசித்தனர். சென்னையில் இருந்து சென்று அமெரிக்காவில்…

Read More

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை

மனிதக்கொலை தொடர்பில் குற்றச்சாட்டப்பட்ட மூவருக்கு நுவரெலியா மேல்  நீதிமன்றம் இன்று (09) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குறித்த உத்தரவினை நுவரெலியா மெல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க பிறப்பித்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு தலவாக்கலை டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரை வெட்டிக்கொலை செய்தமை தொடர்பில் குறித்த மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மஹிந்தவுக்கு எதிராக மலேசியாவில் 400 முறைப்பாடுகள்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்சவிற்கு எதிராக மலேசியாவில் சுமார் 400 முறைப்பாடுகள் செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மலேசிய பொலிஸார் நேற்று இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக போலியான முறையில் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மலேசியாவிற்கு விஜயம் செய்வதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக நான்கு பொலிஸ் நிலையங்களில் இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அந்த முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மஹிந்தவை கைது செய்யுமாறு…

Read More

கார் விபத்து : வைத்தியர் படுகாயம்

புத்தளம் குருநாகல் வீதியில் கொட்டுக்கச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள குளத்திற்கு அருகாமையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கார் ஒன்று விபத்திற்குள்ளாகியதில்  வைத்தியர் ஒருவர் படு காயமடைந்து புத்தளம்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

டில்சான் ரி20 போட்டிகளிலிருந்து ஓய்வு

இலங்கை அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது ரி20 போட்டி இன்று இரவு 7மணிக்கு கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இப்போட்டியை தொடர்ந்து திலகரத்ன டில்சான் ரி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவகாக அறிவித்துள்ளார். 79 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ள திலகரத்ன டில்சான் ஒரு சதம் மற்றும் 13 அரைச்சதங்களைப் அடங்கலாக 1888 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

Read More

நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த நாகப்பாம்பினால் பதற்றம்

இலங்கை நாடாளுமன்ற வளாகத்திற்கு நேற்று காலை விசேட விருந்தினர் ஒருவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்கு முன்னரே விசேட விருந்தினராக நாகப்பாம்பு ஒன்று வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அமைச்சர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பிரதான நுழைவாயிலில் இந்த நாகப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக பிடிக்கப்பட்ட நாகப்பாம்பு, வனவிலங்கு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னர் பல வகையிலான பாம்புகள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

 யாழில் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பொருட்டு, இன்று வெள்ளிக்கிழமை (09) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் வந்தடைந்தார். பலாலிக்கு விமானம் மூலம் வந்த ஜனாதிபதி, அங்கிருந்து உலங்கு வானூர்தியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தைச் சென்றடைந்தார். யாழ்ப்பாணம் திறந்தவெளி அரங்கில் நடைபெறும், போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி, தொடர்ந்து துரையப்பா விளையாட்டரங்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தை திறந்து வைக்கின்றார்.

Read More

வழமைபோன்று செயற்படும் கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் எந்தவித இடையூறுகளும் இன்றி இடம்பெறுவதாக விமான நிலைய செயற்பாட்டு அதிகாரி கூறினார். வழமை போன்று நாளாந்த விமான போக்குவரத்து செயற்பாடுகள் இடம்பெறுவதாக அவர் கூறினார். இலங்கை விமான நிறுவனத்தின் விமானிகள் மேலதிக வேலைகளில் இருந்து தவிர்ந்து கொள்வதற்கு தீர்மானித்துள்ளார்கள். விமானிகள் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற பொதுவான விசாரணை சாதாரண முறையில் இடம்பெறக் கூடியதல்ல என்பதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை விமான நிறுவனத்தின் விமானிகள் அமைப்பு கூறியுள்ளது. அவர்களின்…

Read More