Headlines

துருக்கி விமான நிலையத்தில் ராக்கெட் தாக்குதல்

துருக்கியில் உள்ள டியார்பகிர் விமான நிலையத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டில் உள்ள டியார்பகிர் நகரில் செயல்படும் விமான நிலையத்தில் இருந்து பெருமளவில் உள்நாட்டு விமான சேவை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், டியார்பகிர் விமான நிலையத்தில் வி.ஐ.பி. அறைக்கு வெளியே உள்ள போலீஸ் சோதனை சாவடியில் நேற்றிரவு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமான நிலையத்தை நோக்கி ஏவப்பட்ட நான்கு ராக்கெட்டுகள்…

Read More

சிங்கப்பூரில் 41 பேர் ஜிகா வைரஸால் பாதிப்பு

தென்அமெரிக்காவின் முக்கிய நாடான பிரேசில் நாட்டை கொடூர வைரஸ் நோயான ‘ஜிகா’ கதிகலங்க வைத்தது. இந்த நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இந்த வைரஸ் பெண்களை தாக்கினால், அந்த பெண்களின் கருவில் இருக்கும் குழந்தைகளை பாதித்து குறைபாடு உடன் பிறக்கும் என்பதால் பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்தனர். ஜிகா வைரஸ் தாக்கும் என்ற  பயத்தால் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ரியோ ஒலிம்பிக்கில் சில வீரர்கள் கலந்து கொள்வில்லை. இந்நிலையில் இந்த கொடூர வைரஸ் சிங்கப்பூரில் பரவ தொடங்கியுள்ளது. சிங்கப்பூரில்…

Read More

80 மில்லியன் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் நன்கொடை

உலக சுகாதார நிறுவனத்தால் நான்கு நடமாடும் வைத்தியசாலைகள் உட்பட 80 மில்லியன் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள் சுகாதார அமைச்சிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன்படி அவசர அனர்த்த நிலைமைகளை சமாளிக்க தேவையான வகையில் நடமாடும் வைத்தியாலை மற்றும் வைத்திய உபகரணங்களுமே இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Read More

முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்கக் கூடாது – ஜனாதிபதி

முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்கக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் போது பாதுகாப்புத் தரப்பு பிரதானி ஒருவர் புர்காவை தடை செய்ய வேண்டுமென யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். எனினும் இந்த யோசனைக்கு ஜனாதிபதி எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ஐ.எஸ் தீவிரவாதிகள் உள்ளிட்ட தீவிரவாத செயற்பாடுகளினால் நிலவும் அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறு தடை விதிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது இந்த குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் உண்டா என ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். ஐரோப்பாவின்…

Read More

கலவரங்களின் பின்னணியில் செயற்பட்ட அரசு

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற கலவரங்களின்போது அப்போது இருந்த அரசாங்கங்கள் அதனை தடுக்காமல் அதற்கு பின்னணியாக இருந்து செயற்பட்டுள்ளன என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். அத்துடன் இனப்பிரச்சினைக்கு தீர்வாக புதிய அரசியலமைப்பினூடாக அனைவருக்கும் சமஉரிமை வழங்கப்படவேண்டும் எனவும் தெரிவித்தார். 2014ஆம் ஆண்டு அளுத்கமவில் இடம்பெற்ற கலவரம் தொடர்பாக புத்திஜீவிகள் கலந்துகொண்ட கலந்துரையாடல் சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read More

இலங்கை அணி மீது தாக்குதல் : 4 பேர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 4 தீவிரவாதிகள் இன்று அந்நாட்டு பொலிஸாரால் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் ரஹ்மான், அப்துல் வகாப், அர்ஷாட் மற்றும் சுபைர் அலைஸ் நைக் முகமட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது இடம்பெற்ற தாக்குதலில் 9 பேர் காயமடைந்திருந்தனர். லாகூர் நகரில் உள்ள கடாபி விளையாட்டு மைதானத்தில் இலங்கை கிரிக்கெட் அணி பங்கேற்ற போட்டியின் போது இந்த தாக்குதல்…

Read More

விபத்தில் 12 பேர் காயம்

ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் நாவலபிட்டியிலிருந்து வட்டவளை நோக்கி வந்த வானும் கினிகத்தேன- கடவள பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் பஸ்ஸில் பயணித்த 9 பேரும் வானில் பயணித்த 3 பேரும் காயமடைந்த நிலையில், கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் பஸ் தவறான…

Read More

புதிய அரசியலமைப்புக்கான பிரேரணை

பல்லின, பல சமய, பல கலாசாரத்தை அடையாளமாக கொண்டுள்ள இலங்கை மக்களின் தேவைகளை உணர்ந்து அரசியலமைப்பு உருவாக்கப்படாமையே கடந்த இரு குடியரசு அரசியலமைப்புகளும் தோல்வியடைந்தமைக்கு காரணமாக அமைந்துள்ளது. நல்லாட்சி அரசாங்கம் அதே தவறை மீண்டும் செய்யாது நாம் அனைவரும் ஒருமித்து வாழ்வதற்கான அடிப்படைகளை புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். மேலும் புதிய அரசியலமைப்புக்கான பிரேரணையை 2017 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட விவாதத்துக்கு நடைபெறுவதற்கு முன்னர் பாராளுமன்றில் சமர்ப்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அதற்கான…

Read More

சிங்கள மக்கள் இனவாதிகள் அல்ல: பிரதமர்

-க.கிஷாந்தன் – தமிழ், சிங்களம், முஸ்லீம் என மூவின மக்களும் இலங்கையில் ஒற்றுமையாக வாழும் ஒரே பிரதேசம் நுவரெலியா மாவட்டமாகும். இலங்கையில் உள்ள சிங்கள மக்களை இனவாதிகளாக வெளிநாட்டவர்கள் வர்ணித்து கேள்வி கேட்கின்றார்கள். ஆனால் இலங்கையில் ஒரு சில சிங்களவர்களே இனவாதிகளாவர். அனைத்து சிங்களவர்களும் அல்ல என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அட்டனில் தெரிவித்தார். மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மையான அங்கத்துவத்தினை பெற்றுக் கொள்ளும் முகமாக ஐ.தே.கட்சியின் தலைவரும், நாட்டின் பிரதமமந்திரியுமான ரணில்…

Read More

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் நியமனம்

இலங்கைக்கான  இந்திய உயர்ஸ்தானிகராக டரான்ஜித் சிங் சந்து நியமிக்கப்ப ட்டுள்ளார். வை.கே.சிங்ஹா பிரிட்டனுக்கான  தூதுவராக நியமிக்கப்படவுள்ள நிலையில், புதிய இந்திய உயர்ஸ்தானிகராக டரான்ஜித் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளதாக நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் கொன்சூ லராக அவர் செயற்பட்டிருந்தார் 2002 ஆம் ஆண்டு தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தை காலத்திலும் டரான்ஜித் சிங்…

Read More

ஃபெபெட்ஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி

ஃபெபெட்ஸ் ஸ்ரீலங்கா மாணிக்கக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் கண்காட்சி எதிர்வரும் வியாழக்கிழமை 26ஆவது தடவையாக ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கண்காட்சி நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது.

Read More