ஜக்கரிய்யா (அலை) அவர்களின் பிரார்த்தனையும் ஏக இறைவனின் அருளும்
நபி ஜக்கரிய்யா (அலை) அவர்களுக்கு நீண்ட காலமாகக் குழந்தை இல்லை. தன்னுடைய திருப்பணியைத் தொடர்வதற்குத் தனக்கு ஒரு வாரிசு வேண்டுமென்று விரும்பினார்கள் ஜக்கரிய்யா (அலை). அல்லாஹ்விடம் சிரம் தாழ்த்தி, தாழ்ந்த குரலில் மிக உருக்கமாக அழுது வாரிசு வேண்டி பிரார்த்தித்தார்கள். “அல்லாஹ்! மனதால் உறுதியுடன் இருக்கும் எனக்கு, தலைமுடிகள் நரைத்துவிட்டன, எனது எலும்புகள் பலஹீனமடைந்துவிட்டன. மனதில் இருக்கும் தெம்பு உடலில் இல்லை. எனக்குப் பின்னர் என் உறவினர்கள் வழி்கெட்டு விடுவார்களோவென்று நான் அஞ்சுகிறேன். நான் செய்து கொண்டிருக்கும்…
