Headlines

புர்காவுக்கு தடைவிதிக்க முடியாது – பிரதமர் ரணில்

இலங்கையில் புர்காவுக்கு தடைவிதிக்க முடியாது – அடியோடு நிராகரித்த பிரதமர் ரணில் Believe it or not! The National Security Council (NSC) recently considered a proposal by a top Defence Ministry official to impose a ban on Muslim women in Sri Lanka wearing the burqa or niqab. The burqa is the full body dress, usually black, with a mesh…

Read More

தெல்தெனிய தீ விபத்து

தெல்தெனிய நகரத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து சம்பவத்தில், அந்நிலையத்துக்கு எரிபொருள் ஏற்றிவந்த இரண்டு பெளஸர்களும், வீடொன்றும் சேதமடைந்துள்ளன என தெரிவித்த தெல்தெனிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Read More

பெரியவெங்காயத்துக்கான தீர்வை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கான, கிலோகிராம் ஒன்றுக்கான இறக்குமதி தீர்வை, 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் இதுவரையில் 25 ரூபாயாகவிருந்த கிலோகிராம் ஒன்றுக்கான இறக்குமதி தீர்வை 40 ரூபாய் என்றும் நிதியமைச்சு அறிவித்துள்ளது.

Read More

மக்காவில் இலங்கையர் வபாத்

-எம்.எம்.அஹமட் அனாம் – ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியாவிலுள்ள மக்காவுக்குச் சென்ற இலங்கையர் ஒருவர், மாரடைப்புக் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு, வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பகுதியைச் சேர்ந்த எஸ்.எல்.ஹயாத்து முஹம்மட் (வயது 67) என்பவர் மார்க்கக் கடமையில் ஈடுபட்டிருந்தபோதே, உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். இவர் தனது மனைவியுடன் மக்காவுக்கு கடந்த வாரம் சென்றிருந்தார். இவரது ஜனாஸா நல்லடக்கம் மக்காவில் இடம்பெறவுள்ளதாக உறவினர்கள் கூறினர்.

Read More

நானும் இராஜினாமா செய்வேன்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஹோமாகம அமைப்பாளர் பதவியிலிருந்து தான் விலகிக்கொள்ள போவதாக அறிவித்துள்ளார்.

Read More

குழந்தையை விற்க முயன்ற தாய் நாடு கடத்தப்பட்டார்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தனது இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை விற்க முயன்ற இலங்கை பிரஜையான பெண் ஒருவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குழைந்தையை வாங்கும் நபராக சென்று பொலிஸார்  குறித்த பெண்ணை கைதுசெய்துள்ளனர். வாழ்க்கைச் செலவிற்கு பணம் இல்லாமையினால் குழந்தையை விற்க முயன்றதாக குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். குறித்த பெண் சார்ஜா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றம் பெண்ணை நாடுகடத்த உத்தரவிட்டுள்ளது.

Read More

தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

நாட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க தீ்ர்மானித்துள்ளதாக மருத்துவ பீட மாணவர்கள் குழு குறிப்பிட்டுள்ளது. 13 மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுடன் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என மருத்துவ பீட மாணவர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ரயான் ஜயலத் தெரிவித்துள்ளார். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் ஆரம்பிக்கப்படும் எனவும் மருத்துவ பீட மாணவர்கள் குழு தெரிவித்துள்ளது.

Read More

19 வருடகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள 3000 முறைப்பாடுகள்

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் சுமார் 3000 முறைப்பாடுகள் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சிங்கள வார இதழொன்று சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த முறைப்பாடுகள் சுமார் 19 வருட காலமாக விசாரிக்கப்படாமல் இவ்வாறு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளுக்கு போதியளவான அதிகாரிகள் நியமிக்கப்படாமையே இதற்கு காரணமென குறிப்பிடப்படுகின்றது. இதனால் முறைப்பாட்டாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில், விரைவில் ஒப்பந்த அடிப்படையிலான அதிகாரிகளையாவது நியமித்து தேங்கிக் கிடக்கும் முறைப்பாடுகளை விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென மனித உரிமை ஆணைக்குழுவின்…

Read More

சிங்கப்பூரின் வெளிவிவகார கொள்கையை பின்பற்றவுள்ளது இலங்கை!

சிங்கப்பூர் அரசாங்கத்தின் வெளிவிவகார சேவை கொள்கைகளை முன்மாதிரியாகக் கொண்டு22 நாடுகளுக்கு வதிவிடமற்ற தூதுவர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வதிவிடமற்ற தூதுவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாறு நியமிக்கப்படும் தூதுவர்கள் இலங்கையில் தங்கியிருந்து, தமது சேவைகளை மேற்கொள்ள உள்ளனர். ஓராண்டுக்கு சில தடவைகள் குறித்த நாடுகளுக்கு சென்று தமது பணிகளை மேற்கொள்ள உள்ளனர். வீசா…

Read More

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. 2959 பரீட்சை நிலையங்களில் இந்தப்பரீட்சை நடத்தப்படவுள்ளது. இந்தப்பரீட்சையில் 350701 மாணவர்கள் தோற்றுகின்றனர். முற்பகல் 9.30க்கு முதலாம் வினாத்தாள் பரீட்சை ஆரம்பமாகும். 75 நிமிங்களுக்கான இரண்டாம் வினாத்தாள் பரீட்சை முற்பகல் 10.45க்கு ஆரம்பமாகும். இந்தநிலையில் மாணவர்கள் தமது பரீட்சை சுட்டெண்களை, தமது ஆடையின் இடதுபக்கத்தில் பொறித்திருக்குமாறு கோரப்பட்டுள்ளனர். பரீட்சை நேரத்தில் மாணவர்களின் பெற்றோர் பரீட்சை நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இதேவேளை, பரீட்சை தொடர்பான ஏதாவது முறைப்பாடுகள் இருப்பின், அவற்றை…

Read More