Headlines

இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண் டென்மார்க்கின் துணை விமானியானார்

இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான அர்ச்சனா செல்லத்துரை என்பர் டென்மார்க் நாட்டின் முதலாவது தமிழ்ப் பெண் துணை விமானியாக கற்றுமுடித்திருப்பதாக தனது முகப்புத்தகத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம் வல்லையைச் சேர்ந்த அர்ச்சனா செல்லத்துரை, டென்மார்க்கில் வாழ்ந்து வருகின்றார். ஆஸ்திரியா சென்று இதற்கான விசேட கல்வியை பெற்று டென்மார்க் திரும்பியியுள்ள அர்ச்சனா செல்லத்துரை, வர்த்தக விமான சேவையில் தமிழ் பெண்கள் விமான ஓட்டிகளாக வருவதற்கான வாய்ப்புக்களை நோக்கி எமது கனவுகள் விரிவடைய வேண்டும் என்றும், அடுத்து போயிங், எயார் பஸ்…

Read More

தற்காலிகமாக மூடப்படும் யால வனவிலங்குகள் சரணாலயம்!

யால தேசிய வனவிலங்குகள் சரணாலயம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வரை இது மூடப்படுவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விலங்குகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் சரணாலயம் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள விலங்குகளின் இயற்கை நடத்தைகள் குறுக்கீடு இல்லாமல் இடம்பெறுவதற்கும் யால வனவிலங்குள் சரணாலம் மூடப்படுவதாக வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை ஒவ்வொரு வருடமும் குறித்த காலப்பகுதியில், யால சரணாலயத்தை தற்காலிகமாக…

Read More

நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் – மஹிந்த

நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்புகின்றனர். அதன் வெளிப்பாடு பாதயாத்திரை ஊடாக உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பாதயாத்திரையை குழப்புவதற்கு முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் கொழும்பை நோக்கி செல்வதை யாராலும் தடுத்துவிட முடியாது. பொதுமக்கள் எம்முடன் உள்ளமை உலகிற்கு வௌிப்பட்டுள்ளது. ஆகவே தடைகளை கடப்பது கடினமான விடயமல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.

Read More

அரசாங்க மருத்துவப்பரீட்சை எழுதுவதற்கு தயார்!

தாம், உயர்கல்வி அமைச்சு நடத்துகின்ற மருத்துவ பரீட்சைக்கு தோற்றுவதற்கு தயாராகவே இருப்பதாக மாலபே தனியார் மருத்துவக்கல்லூரியின் மாணவர்கள் அறிவித்துள்ளனர். மாலபே மருத்துவக்கல்லூரியில் பயின்று வெளியேறியுள்ள முதலாம் ஆண்டு மாணவர்கள் சார்பில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த, மாணவர்கள் இந்த கருத்தை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் மூலம் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பெற தவறும் 82 வீதமான மாணவர்கள், அவர்களின் மருத்துவர்களாக வரும் கனவை எப்படி நிறைவேற்றிக்கொள்வது என தமது தனியார் கல்லூரியை எதிர்ப்போரிடம் மாணவர் தலைவர் தரிந்து ருவன்பதிரங்கே கேள்வி…

Read More

டைம்ஸ் நவ் ஊடகத்திற்கு எதிராக 500 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் – ஷாக்கீர் நாயக் களத்தில் குதிப்பு

பிரபல ஆங்கில செய்தி சேனலான ‘டைம்ஸ் நவ்’ நிறுவனத்தின் தலைமை செய்தி ஆசிரியர் தன்னை தொடர்புப்படுத்தி, தொடர்ந்து வெறுப்பு பிரசாரம் செய்வதாககூறியும், அவரிடம் இருந்து இழப்பீடாக ரூ.500 கோடி கேட்டும் இஸ்லாமிய பிரசாகரான ஜாகிர் நாயக் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Read More

ஹிலாரி கிளின்டனின் இணையத்துக்கு சைபர் தாக்குதல்!

அமெரிக்கா ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஹிலாரி கிளின்டனின்இணையத்தளத்துக்கு சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்தெரிவித்துள்ளன. அத்துடன் ஜனநாயக்கட்சியின் பல இணையதளங்களுக்கும் இவ்வாறு சைபர் தாக்குதல்மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த சைபர் தாக்குதலுக்கு ரஸ்யாவே காரணமாக இருக்கலாம் என அமெரிக்காசந்தேகம் வெளியிட்டுள்ளது. எனினும் இந்தக் குற்றச்சாட்டை ரஸ்யா மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

விதை நெல் உற்பத்தியாளர் சங்கம் அமைச்சர் றிஷாத்துடன் சந்திப்பு

சாய்ந்தமருது விதை நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் முக்கியஸ்தர்கள் கொழும்பில் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனை சந்தித்து அந்தப் பிரதேசத்தின் நெல் உற்பத்தி தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டிருந்தனர். தமது சங்கம் விதை நெல் உற்பத்தியாளர்களின் நன்மை கருதி மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை விபரித்த அவர்கள், தமக்கு நெல் சுத்திகரிப்பு இயந்திரமொன்றை பெற்றுத்தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை அமைச்சர் ஏற்றுக் கொண்டார். இந்த சந்திப்பில் சங்கத்தின் தலைவர் யு. எல். ஏ. வஹாப், செயலாளர் எஸ்….

Read More

வாழைச்சேனையில் இலவசக் கருத்தரங்கு

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 01.08 .2016 திங்கட்கிழமை அன்று பி.ப.02.00 pm தொடக்கம் 07.30pm மணிவரை நடைபெறவுள்ளது. வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை அஸ்கர் வித்தியாலய ஆராதணை மண்டபத்தில் மிக பிரமாண்டமான முறையில் ஆசிரியரும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபண முஸ்லிம் சேவையில் அறிவுக் களஞ்சிய நிகழ்ச்சியின் அறிவிப்பாளரும் பாணந்துறை அல் பஹ்ரியா மத்திய மகா வித்தியாலய அதிபர் ARM ஜிப்ரி அதிபர் அவர்களின் வழிகாட்டலில் நடைபெறவுள்ளது….

Read More

நிலாவில் கால் பதித்த மூன்று பேர் ஒரே நோயால் உயிரிழந்தனர்: அது எது தெரியுமா?

1969ம் ஆண்டு அப்போலோ-11 என்ற விண்கலத்தில் நிலவுக்கு பயணமானார் நீல் ஆம்ஸ்ட்ராங். அவருடன் எட்வின் ஆல்ட்ரின் என்பவரும் உடன் சென்றார். இருதய அறுவை சிகிச்சை சிக்கல்களால் பாதிக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் 2012-ம் ஆண்டு தனது 82-வது வயதில் உயிரிழந்தார். அதேபோல், ஜேம்ஸ் இர்வின் என்பவர் அப்போலோ 15 விண்கலத்தில் 1972-ம் ஆண்டு நிலாவுக்கு சென்றார். நிலாவிற்கு சென்று வந்த இரண்டாவது வருடத்தில் இர்வினுக்கு 43 வயது இருக்கையில் முதன் முதலில் நெஞ்சு வலி ஏற்பட்டது. அதன் பிறகு அவரது…

Read More

என்னையும் விட ஹிலாரி தகுதி வாய்ந்தவர்: ஒபாமா

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக பெண் அதிபர் வேட்பாளராக, ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பிலடெல்பியாவில் நடந்த ஜனநாயக கட்சியின் மாநாட்டில் பேசிய அதிபர் ஒபாமா, அமெரிக்க அதிபராகும் தகுதி மற்றவர்களை விட ஹிலாரி கிளிண்டனுக்கு அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில் ‘‘ஹிலாரி வெள்ளை மாளிகைக்கு செல்ல அனைவரும் வாக்களிக்க வேண்டும். அவர் மக்களுக்கு உரிய மதிப்பளிக்கும் தன்மை கொண்டவர். ஹிலாரி தமது கொள்கையில் இருந்து பின்வாங்கியதில்லை. என்னை விடவும்,…

Read More

அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்த சீனத் தூதர்

அஸ்கிரிய மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய ஞானரத்ன தேரரை இலங்கைக்கான சீனத் தூதர் எச்.ஈ. ஈஜான்லியாங்  சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பு கண்டியில் இடம்பெற்றுள்ளது. அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கராக தெரிவுசெய்யப்பட்டமைக்கு தூதர் வாழ்த்துத் தெரிவித்ததுடன்  சீனாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். இதன் போது இரு நாடுகளுக்கிடையிலான பௌத்த உறவுகள் தொடர்பில் பேச்சுவார்ததை நடத்திய சீனத் தூதர், தலதா மாளிகைக்கான கழிவறைத் தொகுதியை நிர்மாணிக்க சீனா உதவியளிப்பதாகவும் தெரிவித்தார்.

Read More

வற் சட்டமூலம் மீது 11ஆம் திகதி விவாதம்

வற் திருத்த சட்டமூலம், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி, நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

Read More