Headlines

பௌத்த மதத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது

புதிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் போது பௌத்த மதத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காராம விகாரையில்  நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இன, ஜாதி,மத பேதங்களை புறந்தள்ளி விட்டு ஒத்துழைப்புடன் நல்லிணக்கமாக செயற்படும் காலம் வந்துள்ளது. இலங்கை தற்போது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடாக மாறியுள்ளது. நான் பாடசாலை செல்லும் போது நான் விளையாடிய அணியில் உப தலைவர் ஒருவர் இருந்தார். அவர்…

Read More

கை, கால்கள் இல்லாமல் வாழும் ரஹ்மா!

நைஜீரியா நாட்டில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தை ரஹ்மா அருமா, பிறந்து ஆறு மாதத்தில் மர்மமான நோய் அறிகுறியுடன் அவதிப்படுவதை கவனித்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மர்மநோய் அவரது உடல் உறுப்புகளின் வளர்ச்சியை பாதித்தது. தற்போது சுமார் 20 வயதை அடைந்தாலும் ரஹ்மா கை, கால்கள் இல்லாமல் அவரது உடல் அமைப்பு மிகச் சிறியதாக ‘மரப்பாச்சி’ பொம்மை போல் இருக்கிறது. தனது எல்லா தேவைகளுக்கும் பெற்றோரின் உதவியை நாடும் நிலையில் அவர்…

Read More

பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷியாவுக்கு தடைவிதிக்க வேண்டும்: இங்கிலாந்து

ஊக்க மருந்து சர்ச்சையில் ரஷியா சிக்கியதையடுத்து, பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்க அந்நாட்டிற்கு தடைவிதிக்க வேண்டும் என்று இங்கிலாந்து வலியுறுத்தி உள்ளது. ரஷிய தடகள வீரர், வீராங்கனைகள் ஊக்க மருந்தில் சிக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்நாட்டு அரசே இதற்கு அனுமதி அளித்து இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ரஷிய தடகள வீரர், வீராங்கனைகள் 68 பேர் பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை நீக்கக்கோரி தாக்கல் செய்த அப்பீலையும் சர்வதேச…

Read More

யாழ் பல்கலையில் இடைநிறுத்தப்பட்ட கலைப்பீட பரீட்சைகள் 25ம் திகதி ஆரம்பம்!

யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட கலைப் பீட பரீட்சைகள் 25ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதுடன் கல்விச் செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ள அனைத்துப் பீடங்களும் விரைவாக ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். வரும் திங்கட்கிழமை கலைப்பீடம், முகாமைத்துவ வணிக பீடம் உள்ளிட்ட சில பீடங்களில் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியுமா என நேற்று பீடாதிபதிகளுடன் ஆராயப்பட்டதாகவும் இதற்கு மேலும் சில நாட்கள் பொறுத்திருந்து சுமூக நிலையொன்று ஏற்படுத்தப்பட்ட பின்னர் இப் பீடங்களின்…

Read More

ஏறாவூரில் கஞ்சாவுடன் நடமாடிய ஒருவர் கைது

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- கஞ்சாவுடன் வீதியில் நடமாடிய ஒருவரை நேற்று (22) வெள்ளிக்கிழமை இரவு தாம் கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். விற்பனைக்காக தம்வசம் கஞ்சா வைத்திருந்த 21 வயதுடைய நபர் ஏறாவூர் பழைய சந்தை வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 5000mg (மில்லிகிராம்) கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் வீதிகளில் உலாவந்தவாறு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததின் பேரில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை…

Read More

ஜெர்மனியிலுள்ள இலங்கையர் தொடர்பில் விசாரணை

ஜெர்மனியின் மியூனிச் நகரில் வணிக வளாகத்தில் மர்ம நபரால் நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல் வெளியாகியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் மேலதிக தகவல்களை அங்குள்ள தூதரகத்தின் ஊடாக விசாரித்து வருவதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. ஜெர்மனியின் மியூனிச் நகரில் வணிக வளாகத்தில் மர்ம நபரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியாகியதுடன் மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

Read More

துருக்கி இராணுவப் புரட்சி! சதிகாரர்கள் யார்?

அரபு வசந்தம் என்ற பெயரில் முஸ்லிம் நாடுகளில் அரசுகள் கவிழ்க்கப்பட்டு அங்கு அமெரிக்காவின் பொம்மை அரசுகள் நிறுவப்பட்டிருப்பதை நாம் அறிவோம். துனிசியா ,லிபியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் அந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால்,சிரியாவில் அரபு வசந்தம் தொடங்கப்பட்டுள்ளபோதிலும், அது 5 வருடங்களாக முடிவின்றித் தொடர்கின்றது. அந்த வரிசையில் இப்போது துருக்கியும் சிக்கியுள்ளது. இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும் துருக்கி இப்போது இராணுவ சதிப் புரட்சி ஒன்றில் சிக்கி உடனே மீண்டுள்ளது.இராணுவப் புரட்சி ஒன்றும்…

Read More

4 வியாபாரிகள் கைது

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 4 வியாபாரிகள் பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை நுகர்வோருக்கு விற்பனை செய்ய முயன்ற குற்றத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

Read More

அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

மாலபே சயிட்டம் தனியார் வைத்திய கல்லூரியை அரச மற்றும் தனியார் கல்லூரியாக நடத்திச் செல்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளமை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 7 அரச பல்கலைக்கழக வைத்திய பீடங்களின் பீடாதிபதிகள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல போன்றவர்களுக்கு இடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் மாலபே சயிட்டம் தனியார் வைத்திய கல்லூரியை அரச மற்றும் தனியார் கல்லூரியாக மாற்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. இது…

Read More

டீசல் பௌசர் விபத்து : ஒருவர் காயம்

கொழும்பு – பதுளை பிரதான வீதியின், ஹப்புத்தளை மற்றும் பண்டாரவளை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் டீசல் பௌசர் ஒன்று இன்று முற்பகல் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது காயமடைந்த பௌசர் வண்டியின் சாரதி தியத்தலாவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்து கொண்டிருந்த டீசல் பௌசர் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். டீசலை அகற்றும் நடவடிக்கைகளை பொலிஸார் மற்றும் விமானப்படையினர் முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read More

தெற்கு அதி வேக நெடுஞ்சாலையின் புதிய பஸ் கட்டண விபரம் அறிவிப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் புதிய பஸ் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் இக்கட்டணங்கள் அமுலுக்கு வரவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புதிய கட்டண விபரம்: மஹரகம – காலி:  ரூபா 390 மஹரகம – மாத்தறை:  ரூபா 470 கடுவெல – மாத்தறை : ரூபா 490 கடவத்தை – மாத்தறை :  ரூபா 510

Read More