Headlines

ஹெட்போனால் ஏற்படும் விபத்துகள் அதிகம்

வாகனத்தை செலுத்தும் போது அலைபேசி மற்றும் ஹெட்போன் ஆகியவற்றை பாவிப்பதன் காரணமாக விபத்துகள் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் என பிரதி பொலிஸ்மா அதிபர் அமரசிங்க சேனாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் வருடாந்தம் ஏற்படும் திடீர் விபத்துகளின் எண்ணிக்கை 37,000 எனவும் அதில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துகளே அதிகம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ‘அவசர விபத்துக்களை தவிர்த்தல்’ எனும் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

Read More

30 ஆம் திகதிக்கு முன்னர் முடிவு எடுப்போம்

உள்ளூராட்சி மன்றங்கள் பலவற்றின் பதவிக்காலம் இம்மாதம் 30ஆம் திகதியன்று நிறைவடையும். அந்த மன்றங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி முடிவெடுப்பேன் என்று மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, புத்திக பத்திரண எம்.பி கேட்ட குறுக்கு கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறுக்கு கேள்வியை எழுப்பிய எம்.பி, எதிர்வரும் 30ஆம் திகதியன்று நிறைவடையவிருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்காக தேர்தல் நடத்தப்படுமா? அல்லது…

Read More

ரூ.33 ஆயிரத்துக்கு குறைவு என்றால் பிரச்சினையில்லை

தினசரி பணப்புரள்வு 33 ஆயிரத்துக்கு குறைவாக அல்லது மாதாந்த பணப்புரள்வு 1 மில்லியனுக்கு குறைவான வியாபாரிகள், வெட் தொடர்பில் பதிவுசெய்ய அவசியம் இல்லை என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

Read More

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் நிபுணத்துவம் பெற்றவர்-விக்கிரமபாகு

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் குறித்த துறையில் சிறந்த நிபுணத்துவம் பெற்ற ஒருவர் என சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். மேலும், மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தற்சமயம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், குறித்த விசாரணையை தொடர்ந்தும் முன்னெடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தயாராக இருப்பதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார். குறித்த விசாரணைகள் முடிவில் பொருத்தமான தீர்மானம் எடுப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவத்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே…

Read More

சுகாதார சேவைகளுக்கு வற் வரி விதிப்புக்கள் இல்லை!

மருத்துவ சேவைக்கான வற் வரியை மருந்து வகைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைக் கட்டணங்கள் உள்ளிட்ட வகையில் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதோடு இதற்குப் பதிலாக புகையிலை நிறுவனங்களிடம் வரியை 90 வீதம் அறிவிட தீர்மானித்துள்ளோம் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், மருத்துவ சேவைக்கான வற்…

Read More

பொறுத்திருந்து பாருங்கள் நடக்க உள்ளதை!

புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட மாட்டாது, அவ்வாறு உருவாக்கப்பட்ட கூட்டு எதிர்கட்சி இருக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை இன்று பார்வையிட சென்ற போதே செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைய இருப்பதை தாம் மறுப்பதாகவும் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் புதிய கட்சி உருவாக்கப்பட மாட்டாது, மக்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்ன நடக்க உள்ளது…

Read More

அனைத்து அபிவிருத்திகளையும் ஐ.தே.கட்சியின் அரசாங்கம் செய்தது!- பிரதமர்

ஐக்கிய தேசியக் கட்சி இல்லை என்றால், நாடு முன்னோக்கி செல்லாது எனவும் நாடு முன்னோக்கி செல்ல வேண்டுமாயின் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்று இருக்க வேண்டும் எனவும் அக்கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நடந்துள்ள அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமே செய்தது. நாட்டை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமாயின் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியை சூழ இணைய வேண்டும் எனவும் பிரதமர் குறி்ப்பிட்டுள்ளார். இணையத்தளம் வழியாக…

Read More

நாட்டின் அனைத்து மருத்துவ பீட மாணவர்களும் பாரிய ஆர்ப்பாட்டத்தில் குதிப்பு

நாட்டின் அனைத்து அரச மருத்துவபீட மாணவர்களும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள். குறித்த ஆர்ப்பாட்டம் இன்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகி ஹைலெவல் பாதையினூடாக தும்முல்லைக்குச் சென்று பம்பலப்பிட்டி, காலி வீதியினூடாக பிரதமரின் அலுவலகம் நோக்கிச் செல்வதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 3,000 இற்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், மருத்துவபீட மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தினால் ஹைலெவல் பாதை முழுமையாக மூடப்பட்டுள்ளதாகவும், குறித்த பாதையினூடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்…

Read More

இந்திய பிரஜையின் சடலம் மீட்பு

கல்பிட்டி, தலவில, கப்பலடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் இந்திய பிரஜை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபரின் பையில் இந்திய நாணயத்தாள்கள் காணப்பட்டதாகவும், இவர் இந்தியமீனவராக இருக்கலாம் எனவும் சந்தேகிப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துவருகின்றனர்.

Read More

இலங்கை கிரிக்கட் அணி மீதான தாக்குதல் – அறுவர் மீது குற்றப் பத்திரிகைகள் தாக்கல்

2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கட் அணி மீது பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் 6 பேர் மீது குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் லாகூரில் இலங்கை கிரிக்கட் வீரர்கள் பயணித்த பஸ் மீது 2009 மார்ச் 3ம் திகதியன்று தாக்குதல் நடத்தப்பட்டபோது இலங்கை வீரர்கள் சிலர் காயமடைந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிச் சென்ற பொலிஸார் உட்பட்ட 8 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர். இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு அழைக்கப்பட்டபோது குறித்த 6 பேர் மீதும் குற்ற  பத்திரிகைகள்…

Read More

ஐக்கிய தேசியக் கட்சியின் APP வெளியீடு

ஐக்கிய தேசியக் கட்சியின் எப் (APP) இன்று (23) கட்சி தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்போது கட்சி உறுப்பினர்களுக்கு புதிய இணைய அங்கத்துவ அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டிற்கு எப்பொழுதும் புதிய திட்டங்களை ஐ.தே.கட்சியே கொண்டு வந்துள்ளது. இது மகாவளி திட்டம் காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதிலும் தாமே முன்னிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இலங்கையில் முதன் முறையாக ஒரு கட்சி தன்னுடைய எப் (APP) ஐ வெளியிடுவது…

Read More

பொதுபலசேனாவின் சகாக்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

பொதுபலசேனாவின் ஆதரவுக்குழவாக செயற்பட்டு வரும் அகில இலங்கை இந்து மன்ற உறுப்பினர்கள் நேற்று (22) ஜனாதிபதியுன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அகில இலங்கை இந்து மன்றத்தின் தலைவர் அருணகாந் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் இக் கலந்துரையாடலில் பங்கு கொண்டனர். ஜனாதிபதியுடன் என்ன விடயங்கள் தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. குறித்த இவ் அமைப்பானது பொதுபலசேனாவின் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்து முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Read More