Headlines

பொலிஸ் அதிகாரிகள் 7 பேருக்கு பதவியுயர்வு

சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் 7 பேருக்கு பிரதி பொலிஸ்மா அதிபர் பதவிவழங்கப்படுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யோசனையானது பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் பொலிஸ் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய இன்றைய தினம் (23) கூடவுள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் கலந்துரையாடலின் போது இதற்கான அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். இதன்போது கொழும்பு – வடக்கு பிரதேச பிரதி பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன உள்ளிட்டஅதிகாரிகள் 7 பேரே பிரதி…

Read More

அம்பாறையில் அ.இ.ம.கா.வின் இப்தார் நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள அம்பாறை மாவடடத்திற்கான இப்தார்நா ளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி தொடக்கம் சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலய (பழைய மஹருஸ் சம்ஸ் பாடசாலை) மைதானத்தில் நடைபெறவுள்ளது.   அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்தக கூட்டுத்தாபானத்தின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் மு.கா. குழுத்தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கட்சியின் தேசியத் தலைவரும் கைத்தொழில், வணிக அமைச்சருமான ரிஷாத்…

Read More

வட கொரியாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை பொருட்படுத்தாமல் அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொண்டுவரும் வட கொரியாவிற்கு தமது கடுமையான கண்டனத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. வட கொரியா இன்று (22) அதிகாலை  பல கிலோ மீற்றர்கள் சென்று தாக்கக்கூடிய இரண்டு சக்திவாய்ந்த ‘முசுடன்” ரக ஏவுகணைகளை வடகொரியாவின் கிழக்கு கடற்கரையில் பரிசோதித்துள்ளது. பரிசோதிக்கப்பட்ட ஏவுகணைகளில் ஒரு ஏவுகனை 150 கிலோ மீற்றர் தொலைவில் விழுந்து தோல்வியடைந்தள்ளதாகவும், மற்றொரு ஏவுகணை தொடர்பான தெளிவான தகவல் வெளியாகவில்லை என தென்கொரியா தெரிவித்துள்ளது. குறித்த…

Read More

ஏழு இந்தியர்களும் தொடர்ந்தும் காவலில்

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் சட்டவிரோத சிறுநீரக மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, ஏழு இந்தியப் பிரஜைகளையும் தொடர்ந்தும் காவலில் வைக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் வௌிநாட்டவர்களுக்கான சிறுநீரக மாற்று சிகிச்சைகள் 1075 தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அரச தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் 650 குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், விசாரணைகளை நிறைவு…

Read More

காணாமல் போன ஆவணங்களை கண்டறிய நீதிமன்றங்கள்!

சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை இராணுவம் குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கவில்லை எனும் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் வகையில் இராணுவத்தினால் இரண்டு விசாரணை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்படி சம்பவம் தொடர்பிலும் இராணுவத்தின் வசமிருந்த ஆவணங்கள் தொலைந்துள்ளதாக கூறப்பட்டிருக்கும் அதேவளை, அதனை கண்டுபிடித்து குற்றப் புலனாய்வு அதிகாரிகளின் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில், இலங்கை இராணுவ பொலிசாரை உள்ளடக்கிய சிறப்பு விசாரனைப்பிரிவுகளைக் கொண்ட விசாரணை நீதிமன்றதத்தினை இராணுவத் தளபதி அமைத்துள்ளதாக…

Read More

அவுஸ்திரேலியக் கடற்படை கப்பலுக்கு செயலாளர் விஜயம்

அண்மையில் நல்லெண்ண நோக்கில் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ள அவுஸ்திரேலிய கடற்படையின் ‘எச்எம்ஏஎஸ் பேர்த்’ எனும் கப்பலிற்கு பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி நேற்று முந்தினம் (20) விஜயமொன்றினை மேற்கொண்டார். இந்நிகழ்விற்கு வருகை தந்த செயலாளர் ஹெட்டியாரச்சியை அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரைஸ் ஹட்சென் மற்றும் கப்பலின் கட்டளைத்தளபதி ஆகியோர் வரவேற்றனர். அத்துடன் விஷேட பிரமுகர் புத்தகத்திலும் கையொப்பமிட்டார். இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. வசந்தா குணவர்தன, கடற்படைத் தளபதி வைஸ்…

Read More

தேசிய வீடமைப்புத்தின் முதலாவது கொடி ஜனாதிபதிக்கு!

யூன் 23 ஆம் திகதி இடம்பெறும் தேசிய வீடமைப்புத் தினத்தை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கொடி வாரத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் முதலாவது கொடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் அணிவிக்கும் நிகழ்வு நேற்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கொடிகள் அணிவிக்கப்பட்டன. காலம்சென்ற முன்னாள் ஜனாதிபதி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஸ்தாபகர் ரணசிங்க பிரேமதாச அவர்களின் பிறந்த தினத்தை குறிக்கு…

Read More

குழந்தை பருவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் முதல் கணக்கெடுப்பு!

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, சிறுவர் செயலகம் மற்றும் தொகை மதிப்பு திணைக்களம் ஆகியவை இணைந்து உலக வங்கியின் வேலைத்திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் முதன் முறையாக குழந்தை பருவம் தொடர்பில் மதிப்பீடொன்றை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது. நாடு தழுவிய ரீதியில் 05 வயதுக்கு குறைவான குழந்தைகள் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள இக்கணக்கெடுப்பினை வெற்றிகரமாக செய்து முடிக்கும் நோக்கில் இம்மாதம் 22,23,24 மற்றும் 27 ஆம் திகதிகளில் நாடு பூராகவும் உள்ள ஆரம்ப பிள்ளைப்பருவ அபிவிருத்தி அதிகாரிகளை…

Read More

சிறுவர் தொழிலுக்கெதிரான தினம் இன்று ஜனாதிபதி தலைமையில்!

ஒவ்வொரு வருடமும் ஜூன் 12 ஆம் திகதி சிறுவர் தொழிலுக்கெதிரான உலக தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் இவ்வருடத்துக்கான தொனிப்பொருளாக”விநியோகச் சங்கிலியில் சிறுவர் தொழிலை இல்லாதொழித்தல்” பேணப்பட்டு வருகின்றது. அவ்வகையில் இலங்கையில் சிறுவர் தொழிலுக்கெதிரான உலக தினம் இன்று(22) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. உலகளாவிய ரீதியில் சிறுவர் தொழிலைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணக்கரு, 2010 இல் நெதர்லாந்து, ஹேக் நகரில் நடந்த சிறுவர் தொழில் பற்றிய…

Read More

150 மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப் பரிசில் திட்டம்

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற மகாத்மா காந்தி புலமைப் பரிசில் திட்டம், இந்த ஆண்டு இலங்கையில் 150 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 25 மாவட்டங்களுக்கும் இந்த எண்ணிக்கையான புலமை பரிசில்கள் பகிரப்பட்டுள்ளன. பத்ரமுல்லை கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விழாவில் இந்த உதவித் தொகையை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, உயர்நிலை கல்வி மாணவர்களுக்கே இந்த உதவித் தொகை வழங்கப்படுவதுடன்…

Read More

VAT வரி மீதான 5 வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானம்

VAT வரி வீதம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து  தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுகள் 5ஐ விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை அனுமதியளித்துள்ளது. tm

Read More

“முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் குறைப்பு, முஸ்லிம் கிராமங்கள் சிங்கள கிராமங்களுடம் இணைப்பு”

-விடிவெள்ளி ARA.Fareel- கடந்­த ­கால அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட எல்லை நிர்­ண­யங்கள் பல ஒரு இனத்­துக்கு சார்­பாக மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. முஸ்லிம் கிரா­மங்கள் பிரிக்­கப்­பட்டு பெரும்­பான்மை இன கிரா­மங்­க­ளுடன் இணைக்­கப்­பட்டு முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்­துக்கு பாதிப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இவற்றை நாம் சீர்­தி­ருத்தி வரு­கிறோம் என எல்லை நிர்­ணய முறைப்­பா­டு­களை ஆராயும் குழுவின் தலைவர் அசோக பீரிஸ் தெரி­வித்தார். மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி தேர்தல் தொடர்­பாக விளக்­க­ம­ளிக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே…

Read More