ஒலிபெருக்கிகள் மூலம் இடையூறு, ஏற்படுத்தும் முஸ்லிம்கள் – ACJU விடம் முறைப்பாடு
– ARA.Fareel- – நாட்டின் சில பகுதிகளில் பள்ளிவாசல்களில் ரமழான் மாத சமய வழிபாடுகள் ஒலிபெருக்கிகள் மூலம் அதிகளவு சப்தத்துடன் நடாத்தப்படுவது குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. பள்ளிவாசல்களுக்கு அருகில் பல பௌத்த பன்சலைகள் இருக்கும் பிரதேசங்களிலும் இரவு நேர ரமழான் வழிபாடுகள் இவ்வாறு நடாத்தப்படுவது பிரச்சினைகளுக்கு வழிகோலுவதாக அமையும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது. பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகளின் சப்தம் பள்ளிவாசல்களுக்குள்ளே மாத்திரம் கேட்கும் வகையில் குறைத்துக் கொள்ளப்பட…
