இடமாற்றம் பெற்றவர்கள் உடனடியாக தமது கடமைகளை பொறுப்பேற்க வேண்டும்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள 39 ஆசிரியர்களும் வெள்ளிக்கிழமைக்குள் கடமைகளைப் பொறுப்பேற்கா விட்டால் தொழில்களை இழக்க வேண்டி ஏற்படும் என்று வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிகிருஸ்ணராஜா தெரிவித்தார். ஏற்கனவே வருடாந்த இடமாற்றத்தில் 13 பேரும் கடந்த வாரத்தில் 26 பேருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் யாரும் கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை. எனவே இவர்கள் உடனடியாகத் தங்களது கடமைகளைப் பொறுப்பேற்க வேண்டும். மாகாணக் கல்வித் திணைக்களத்தின் வருடாந்த ஆசிரிய இடமாற்றத்தின் கீழ் 123 ஆசிரியர்கள் கல்குடா வலயத்திலிருந்து வேறு…
