Headlines

மன்னாரில் நீர் விநியோகம் துண்டிப்பு

மன்னாரில் பிரதான நீர் விநியோக குழாய்களை புனரமைக்கப்படுவதால்இன்று நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. தேசிய நீர் வழங்கல்  வடிகாலமைப்புச் சபையினால்முன்னெடுக்கப்படுகின்ற உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதார திட்டத்திற்குஅமைவாக மன்னார் பிரதேசத்தில் பிரதான விநியோக குழாய்களில்பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இதன் காரணமாக இன்று காலை 8.00 மணி தொடக்கம் மாலை 05.00மணிவரை நீர் துண்டிக்கப்படும் என மன்னார் தேசிய நீர் வழங்கல்வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Read More

மன்னார் மாவட்டத்தில் எட்டு மணித்தியாலம் நீர் விநியோகத் தடை!

மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் (30) எட்டு மணித்தியால நீர் விநியோகத் தடை ஏற்படுத்தப்படவுள்ளது. மன்னார் நீர் விநியோக வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மற்றும் முருங்கன் நீர் விநியோக மார்க்கத்தின் திருத்தப் பணிகள் காரணமாக இந்த தடை ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி மன்னார் நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும், முருங்கன் நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் காலை 8 மணி தொடக்கம் மாலை…

Read More

மன்னாரில் நீர்வெட்டு

மன்னார், முருங்கன் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நாளை மு.ப. 8.00 மணிமுதல் பி.ப. 4.00 மணி வரையான 8 மணி நேர நீர்வெட்டு அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. மன்னார் நீர்வழங்கல் திட்டத்தின் கீழ் மன்னார் மற்றும் முருங்கன் நீர்த்தாங்கிகளுக்கு நீர் பகிர்ந்தளிக்கப்படும் நீர் பாய்ச்சும் குழாயில் திருத்தப்பணிகளை முன்னிட்டு நீர்வெட்டு அமுல் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்கூட்டியே நீரைச் சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்தும்படி மக்களிடம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்…

Read More

கொழும்பின் பல பிரதேசங்களிலும் நீர் வெட்டு

நுகேகொடை மற்றும் கோட்டே ஆகிய பிரதேசங்களில் இன்றைய தினம் நீர்வெட்டுஅமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய எத்துல்கோட்டே, பிட்டகோட்டே, உடஹமுல்ல, நுகேகொடை, பாகொடை, ஹலெவல் வீதியின் நுகேகொடை சந்தியிலிந்து விஜேராம சந்தி வரையான பகுதிகளுக்கே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் நாவலை வீதியிலிருந்து திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதிகள் உட்பட இதனை அண்மித்த அனைத்து பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று இரவு 10…

Read More

1,500 இற்கு மேல் நிலுவை இருந்தால் நீர் வெட்டு

குடிநீர் இணைப்புக்களைப் பெற்று 1500 ரூபாவிற்கு மேல் நிலுவைக் கட்டணத்தினைச் செலுத்தாமல் உள்ள நீர்ப்பாவனையாளர்களின் இணைப்புக்கள் எதிர்வரும் திங்கட்கிழமை(25) முதல் துண்டிக்கப்படவுள்ளதாக கல்முனை நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம். முனவ்வர் தெரிவித்தார். தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கல்முனை நிலையப் பொறுப்பதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பகுதிகளான கல்முனை, கல்முனைக்குடி, இஸ்லாமபாத், நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு மற்றும் மணல்சேனை ஆகிய பிரதேசங்களிலேயே இந்நீர் துண்டிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புக்களைக் கொண்ட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்…

Read More

கொழும்பில் 18 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

கொழும்பில் சில பகுதிகளில் 18 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்தள்ளது. இதற்கமைய கோட்டை, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ, முல்லேரியா , கொலன்னாவை ஆகிய பகுதிகளில் நாளை சனிக்கிழமை (28) காலை 11 மணியிலிருந்து 18 மணித்தியாலங்கள் குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

12 மணி நேர நீர்வெட்டு

– எம்.ஆர்.எம்.வஸீம் – அத்­தி­யா­வ­சிய நட­வ­டிக்கை கார­ண­மாக நாளை 17ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை காலை 8மணி முதல் இரவு 8மணி வரை­யான 12மணி நேர நீர் விநி­யோகம் தடைப்­படும் என தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்­புச்­சபை அறி­வித்­துள்­ளது. மொரட்­டுவை மாந­கர சபை பிர­தேசம்,இரத்­ம­லானை,சொய்­சா­புர,பாணந்­துறை, நல்­லூ­ருவ, கிரி­பே­ரிய, கெஸல்­வத்தை,ரை­கம,பண்­டா­ர­கம,வெல்­மில்ல,குபுக, ஹொரணை மற்றும் மொரன்­து­டுவ ஆகிய பிர­தே­சங்­களும் பிலி­யந்­தலை கெஸ்­பேவ நகர சபை பிர­தேசம், பொல்­கஸ்­ஓ­விட்ட,சிய­ப­லா­கொட,வேதர, றிலா­வல,அம்­ப­லன்­கொட,ஹெர­லி­யா­வல,பால­கம,திய­கட மற்றும் ததாயன்ன ஆகிய பிரதேசங்களிலேயே நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

Read More