Headlines

முஸ்லிம் சமுகத்தின் மீது, வேண்டுமென்றே பழி சுமத்துகின்றனர் – றிஷாத்

-சுஐப் எம். காசிம்- பிற சமூகத்தவருடன் முஸ்லிம் சமூகம் இணைந்து வாழவும் பிணைந்து வாழவும் எப்போதும் முயற்சித்து வருகின்ற போதும் எம்மைத் தீண்டாதவர்களாகவும் வேண்டாதவர்களாகவும் வேற்றுக்கண்ணோடு பார்க்கும் நிலையே இன்னும் இருக்கின்றது என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கலாபூசணம் எம். இஸட் அஹ்மத்; முனவ்வர் எழுதிய இலங்கை வானொலி முஸ்லிம் சேவை நூல் வெளியீட்டு விழாவும் முஸ்லிம் சேவைக்குப் பணியாற்றிய உலமாக்கள் கௌரவிப்பு விழாவும் கொழும்பு பொது நூலக மண்டபத்தில் இடம் பெற்ற போது பிரதம…

Read More

அரச காணிகள் பற்றிய தகவல்களை திரட்ட பணிப்புரை

வடகொழும்பு, மத்திய கொழும்பு தொகுதிகள் உள்வரும் கொழும்பு பிரதேச பகுதியில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி சபை, தேசிய வீடமைப்பு அதிகாரசபை, துறைமுக அதிகாரசபை, கொழும்பு மாநகரசபை மற்றும் மாவட்ட செயலகம் ஆகிய அரச அமைப்புகளுக்கு சொந்தமான மற்றும் பயன்படுத்தபடாத தனியார் காணிகள் தொடர்பான விபரங்களை திரட்டும்படி கொழும்பு பிரதேச செயலக பிரதேச செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு மாநகரத்தில் வாடகை வீடுகளில் வசிக்கும் மத்திய தர…

Read More

மனோ கணேசனுடன், நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் டோர் ஹட்ரெம் சந்திப்பு

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் டோர் ஹட்ரெம் மற்றும் குழுவினர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசனை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பின் போது, நாட்டின் இனங்களுக்கு இடையிலான சகவாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பிலான யதார்த்த நிலைமைகளை நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் டோர் ஹட்ரெம், அமைச்சர் மனோ கணேசனிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

Read More

மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கும் அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை

பல்கலைகழக மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு அரசுக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை என தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எதிர்க் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் அரசு மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்து அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளுவதாக எமது செய்தி சேவைக்கு இன்று வழங்கிய விசேட செவ்வியின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீது விசாரணைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. எமது ஆட்சியின் கீழ் கடமையாற்றி வருகின்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு எமது…

Read More