Headlines

வெள்ளத்தினால் சேதமாகிய ஆவணங்களை வெயிலில் காய்க்க வேண்டாம்

வெள்ளத்தினால் சேதமாகியுள்ள ஆவணங்கள் மற்றும் புத்தகங்களை பழைய நிலைக்கு மாற்ற முடியும் என்று தேசிய ஆவணக்காப்பக திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சரோஜா செத்தசிங்க கூறினார். அந்த பொருட்களை வெயிலில் காய்ப்பது பொருத்தமானதல்ல என்று அவர் கூறியுள்ளார். வெள்ளத்தினால் சேதமாகியுள்ள ஆவணங்களை பழைய நிலைக்கு மாற்றுவது சம்பந்தமாக மேலும் ஆலோசனைகள் தேவையாயின் தேசிய ஆவணக்காப்பக திணைக்களம் உதவத் தயார் என்றும் அவர் கூறினார்.

Read More

நியூஸிலாந்து ஒரு இலட்சம் டொலர்களை இலங்கைக்கு வழங்கியது

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒரு இலட்சம் டொலர் நிதியுதவியை நியூஸிலாந்து வழங்கியுள்ளதாக தொலைத் தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சு கூறியுள்ளது. அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவின் வேண்டுகோளுக்கமைய இந்நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது. நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சர் மியுரி மெக்கலி இலங்கை உயர் ஸ்தானிகர் ஊடாக இந்நிதியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த நிதியை வெள்ளத்தினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவி வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் என்று தொலைத் தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல்…

Read More

தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை

நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தல் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சந்தர்ப்பவாத அரசியல் சக்திகளால் பொய்ப் பிரசாரங்களால் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜப்பானில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுடன் ஜப்பானின் நகோயா நகரில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Read More

மீண்டும் பொது மன்னிப்பு காலம்

சட்டவிரோத துப்பாக்கிகளை கையளிப்பதற்கான அரசின் பொது மன்னிப்பு காலம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. மக்களின் வேண்டுகோளுக்கமைய மீண்டும் பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. அதன்படி எதிர்வரும் மே 30ம் திகதி முதல் ஜூன் 17ம் திகதி வரை பொது மன்னிப்பு காலம் அமுலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் தம்மிடம் இருக்கும் சட்டவிரோத துப்பாக்கிகளை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்கள், பிரதேச செயலகங்கள் அல்லது மாவட்ட செயலகங்களில் ஒப்படைக்க முடியும் என்று பாதுகாப்பு அமைச்சு…

Read More

ஜப்பான் செல்கிறார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஜுன் மாதம் 09ஆம் திகதி, ஜப்பான் நாட்டுக்கு சுற்றுலா மேற்கொள்ளவுள்ளார். அவருடன், ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் சிலரும் இணைந்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர் சிலரால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோரும் இந்தப் பயணத்தில் இணைந்துகொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதிக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அவர் மேற்கொள்ளும்…

Read More

முதலீட்டாளர்களின் சொர்க்கபுரியாக மாறியுள்ள இலங்கை : மங்கள சமரவீர

சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் சொர்க்கபுரியாக இருந்து வந்த இலங்கை தற்போது முதலீட்டாளர்களின் சொர்க்கபுரியாக மாறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜீ.7 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஜப்பான் சென்றுள்ள அமைச்சர் மங்கள சமரவீர அங்கு இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கை காரணமாக மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள உலக நாடுகளின் தலைவர்களிடம் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால…

Read More

ஜப்பான் வாகனங்களின் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி

அரச நிறுவனங்களின் வரி அதிகளவில் உயர்வடைந்துள்ளதனால் இனிவரும் காலங்களில் ஜப்பான் வாகனங்களை எமது நாட்டுக்கு இறக்குமதி செய்வது முழுமையாக நிறுத்தப்படுமென வாகன இறக்குமதியாளர்களின் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே சங்கத்தின் தலைவர் இதனைத் தெரிவித்தார். இதேவேளை இனிவரும் காலங்களில் குறைந்த தீர்வைகொண்ட இந்திய வாகனங்கள் எம் நாட்டுச் சந்தைகளில் அதிகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

கொழும்பு பங்குச் சந்தையில் திடீர் மாற்றம்

இலங்கையில் பங்குப் பரிவர்த்தனைக்கென அமைந்துள்ள கொழும்பு பங்குச் சந்தையில் பங்குகளின் விலை திடீரென நேற்று (27) உயர்வடைந்துள்ளது. தற்போது சகல விலைச்சுட்டெண்ணும் 6571.21 ஆக காணப்படுகிறது. நாளின் இறுதியில் 15.2 மில்லியன் பங்குகள் கைமாற்றப்பட்டுள்ளன. மேலும் மொத்த பணப்புரள்வு 1084.9 மில்லியனாகும்.

Read More

இலங்கை வரும் நோர்வேயின் வெளியுறவு செயலர்

நோர்வேயின் வெளியுறவு அமைச்சின் இராஜாங்க செயலாளர் டோர் கட்ரோம் எதிர்வரும் 31ம் திகதியன்று இலங்கை வரவுள்ளார். அவர் இலங்கையில் ஜூன் 2ம் திகதி வரை தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று சந்திக்கவுள்ளார். இந்தநிலையில் இலங்கைக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் வரவுள்ள நோர்வேயின் வெளியுறவு அமைச்சர் போர்ஜ் பிரேன்டேயின் விஜயத்துக்கு முன்னோடி விஜயமாகவே டோர் கட்ரோமின் விஜயம் அமையவுள்ளது. கட்ரோம், இலங்கையில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், அமைச்சர் மலிக்…

Read More

இலங்கைக்கு 51 பில்லியன் ரூபாவை, வழங்குகிறது ஜப்பான்

இலங்கைக்கு 51 பில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட அபிவிருத்திக் கடன் உதவி உள்ளிட்ட மேலும் பல பொருளாதார அனுகூலங்களைப் பெற்றுக்கொடுக்க ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இன்று விருப்பம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த வேளை அவர் இதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் விசேட அழைப்பிற்கிணங்க G7 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி அந்நாட்டு பிரதமரை இன்று சந்தித்தார். இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கு, 38 பில்லியன்…

Read More

நெளுந்தெனிய பள்ளிவாசல் மீது குண்டுத்தாக்குதல்

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் அமைந்திருக்கும் நெளுந்தெனிய முஸ்லிம் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஒன்றரை மணியளவில் இந்தக்குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிறிய ரக பெட்டியொன்றுக்குள் மறைத்து வைத்து குண்டுவெடிக்க வைக்கப்பட்டிருப்பது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் பொலிசாரும், புலனாய்வுப் பிரிவினரும் உடனடியாக விரைந்து வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. மேலும் எதுவித தடயங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை…

Read More

அமைச்சர் றிஷாத், பிரதமரை சந்திக்க முடிவு,,,,,

-சுஐப் எம்.காசிம் – சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிகளைப் பற்றி பிழையான எண்ணங்களையும், கருத்துக்களையும் ஏற்படுத்துவதற்காக இனவாத சக்திகளின் ஒத்துழைப்புடன் சில முகநூல்களும், போலி இணையத்தளங்களும் தீவிர செயற்பாட்டில் இறங்கியுள்ளன என்றும், இவ்வாறான போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் போலியான இணையத்தளங்கள் மற்றும் முகநூல்களைக் கட்டுப்படுத்தும் வழி வகைகள்  மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அமைச்சர் றிசாத் பதியுதீன் சட்டமும், ஒழுங்கும் அமைச்சர் சாகல இரத்நாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார். கடந்த காலங்களிலும் முஸ்லிம்கள் தொடர்பில் இத்தகைய போலியான, பொய்யான, வேண்டுமென்றே திரிவுபடுத்தப்பட்ட…

Read More