Headlines

பாணந்துறையில் சூறாவளி; 30 வீடுகள் சேதம்




பெய்யும் அடைமழை காரணமாக பாணந்துறை பகுதியில் மினி சூறாவளி ஒன்று ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த மினி சூறாவளியால் சுமார் 30 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதில் உயிராபத்துக்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *