Headlines

மட்டு மாவட்ட செயலகத்தில் ஐ.நா அலுவலகம்!

அரசாங்க மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இணைச் செயற்பாடுகள், கொள்கைகளுக்கு ஏதுவாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) அலுவலகம் நேற்று புதன்கிழமை(11) காலை மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தினுள் திறந்து வைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தினை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் திறந்து வைத்தார். அவருடன் மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர் நெடுஞ்செழியன் மற்றும் அதிகாரிகளும், பங்காளர் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கு கொண்டனர். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் மட்டக்களப்பு…

Read More

மூவினங்களையும் பிரதிபலிக்கும் இராணுவமே நாட்டுக்கு தேவை!

நாட்டிற்கு தேவை தமிழ், சிங்கள, முஸ்லீம் இளைஞர் யுவதிகளை கொண்ட அனைத்து இனங்களையும் பிரதி பலிக்கும் இராணுவமே என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரவித்துள்ளார். நாட்டிற்காக உயிர் நீர்த்த போர் வீரர்களை நினைவு கூரும் வகையில் வடமாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் வடமாகாண பிரதம செயலாளர் பணிமனை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வானது கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் அண்மையில் (10.05.2016) நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே வடமாகாண…

Read More

இன்று சர்வதேச தாதியர் தினம்!

உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் மே 12 ஆம் திகதியாகிய இன்று சர்வதேச தாதியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. தாதியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவுகூறும் பொருட்டு இத்தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இவ்வாண்டுக்கான தாதியர் தினம் “மாற்றத்திற்கான மாபொரும் சக்தி தாதியர்களே – அவர்கள் தமது விரிவான திறனினூடாக ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்துகிறார்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ் அனுஷ்டிக்கப்படுகின்றது. சர்வதேச தாதியர் அமைப்பு (International Council of Nurses) இத்தினத்தை 1965…

Read More

சூடு வைக்கப்பட்ட சிறுமியின் அழுகுரல் (அவசியம் வாசியுங்கள்)

எனக்கு காயம் சுகமாகி நான் எப்போது வீடு போவேன்? இது காத்தான்குடியில் வளர்ப்புத்தாயினால் சூடு வைக்கப்பட்டு படுகாயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் எதிர்பார்ப்பு. சூடு வைக்கப்பட்டு படுகாயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காத்தான்குடி அப்துல் ஜவாத் ஆலீம் வீதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் இன்றுடன் பூர்த்தியாகின்றன. இந்த இரண்டு மாதங்களும் அந்த சூடு வைக்கப்பட்ட சிறுமியின் சூட்டுக் காயங்களுக்கு மருந்து போட்டு சிகிச்சைகள்…

Read More

ஹிரோ­ஷிமா நக­ருக்­குச் செல்லும் ஒபா­மா

அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா  ஜப்­பானின் ஹிரோ­ஷிமா நக­ருக்கு இம்­ மாதம் இறு­தியில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொள்­ள­வுள்ளார். அமெரிக்காவின் அணு­குண்டால் பாதிக்­கப்­பட்ட ஹிரோ­ஷிமா நகருக்கு இதுவரை அமெ­ரிக்க ஜனா­தி­பதிகள் யாரும் செல்லவில்லை. இந்­நி­லையில் இம்­மாதம்  27ஆம் திகதி ஜி-7 உச்சி மாநாட்­டுக்­காக ஜப்பான் செல்­ல­வுள்ள அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா, ஹிரோ­ஷிமா நக­ரத்­துக்கும் செல்லவுள்ளார். பத­வியில் இருக்கும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒருவர் அந் ­ந­க­ரத்­துக்கு செல்­வது இதுவே முதல்முறை என்­பதால், அவ­ரது இந்த சுற்­றுப் ப­யணம் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக அமையும்…

Read More

புதிய அரசியலமைப்பில் 4 இனங்களுக்கும் சமவுரிமை – சந்திரிக்கா

இலங்கையின் மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் விசேட அமர்வில் நேற்று -11- இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பங்கேற்றுஉரையாற்றிய முன்னாள் ஜனாதிபதியும் நல்லிணக்க குழுவின் தலைவருமான சந்திரிக்காகுமாரதுங்க, இதனை தெரிவித்துள்ளார். இதன்போது சந்திரிக்கா, இலங்கை கடந்த பல வருடங்களாக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியபோர் ஒன்றுக்கு முகங்கொடுத்ததாக குறிப்பிட்டார். போர் வெற்றி கொள்ளப்பட்டாலும் கூட நாட்டினால் சமாதானத்தைவெற்றி கொள்ள முடியவில்லை. எனினும் இதனை முறியடிக்கும்…

Read More

ஞான­சாரரின் கருத்துக்கு, ஜம்­இய்­யத்துல் உலமா கண்­டனம்

– பரீல் – அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை­யினால் அங்­கீ­காரம் பெற்­றுள்ள ‘தப்லீக் ஜமாஅத்’ ஒரு அடிப்­ப­டை­வாத குழு என பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கருத்து வெளி­யிட்­டுள்­ள­மைக்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை கண்­டனம் தெரி­வித்­துள்­ளது. ‘தப்லீக் ஜமாஅத்’ மக்­க­ளி­டையே நற்­பண்­பு­க­ளையும் சகோ­த­ரத்­து­வத்­தை­யுமே போதித்து வரு­கி­றது. மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­து­வ­தே­யன்றி அடிப்­ப­டை­வா­தத்தைப் போதிக்­க­வில்லை என  அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச்­செ­ய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் தெரி­வித்தார். பொது­ப­ல­சேனா…

Read More

சஜின் வாஸினது வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

வெளிவிவகார கண்காணிப்புக்கான முன்னாள் அமைச்சர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் கிஹான் பிலபிடிய அறிவித்துள்ளார். சஜின் வாஸ் குணவர்தன சார்பில் சட்டத்தரணி அனுர பிரேமரத்ன நீதிமன்றத்திடம் முன்வைத்த வேண்டுகோளை பரிசீலனை செய்த பின்னர் அவர் இந்த அறிவிப்பை நீதிபதியிடம் வெளியிட்டுள்ளார். தனது சொத்துக்கள் தொடர்பான கணக்கு விபரங்களை வெளியிடாமை குறித்து இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது….

Read More

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைக்கான விண்ணப்பம் சமர்ப்பிப்பு

பிரசல்ஸ்ஸில் நேற்று (11) இடம்பெற்ற சந்திப்பை அடுத்து, விரைவில் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதி வெளியுறவு அமைச்சர் ஹர்ச டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். நேற்றைய சந்திப்பு தொடர்பாக கருத்துரைத்த ஹர்ச, இலங்கை தற்போது ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை பெற்றுக் கொள்வதற்கான இறுதி அடியை, அதாவது விண்ணப்பிக்கக்கூடிய நிலையை அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கை – ஐரோப்பிய ஒன்றியம் செயற்குழு கூட்டம் நேற்று பிரசல்ஸ்ஸில் இடம்பெற்றது, இது விண்ணப்பத்தை…

Read More

டிக்கெட் இன்றிப் பயணித்தால், ரூ.3,000 தண்டம்

– வி.நிரோஷினி – ரயில்களில் பயணச்சீட்டுகள் (டிக்கெட்) இன்றிப் பயணித்தால், 3ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிடப்படும். அதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பத்திரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரயில்களில் பயணஞ் செய்யும்  பயணிகளின் பயணச்சீட்டுகளுக்காக, சலுகை அடிப்படையிலான கட்டணங்கள் அறவிடப்படினும், அவர்கள் அதனையும் செலுத்தத் தவறுகின்றனர். இன்னுஞ்சிலர், தாம் பயணிக்கும் வகுப்புகளை விடவும், கட்டணங்கள் கூடிய…

Read More

மீள் குடியேறிய மக்களின் துயர்களைத் துடைத்து வரும் அமைச்சர் றிஷாத்

– சுஐப் எம் காசிம் – ”நீரின்றி அமையாதுலகு” என்பது அர்த்தமுள்ள ஆன்றோர் வாக்கு. உலகில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள் அனைத்தும் உயிர் வாழ நீர் இன்றி அமையாதது. வாழ்வின் ஜீவ நாடி நீர். உலகில் வாழும் மக்களின் பல்வேறு நடவடிக்கைகளினால் நீர் மாசடைந்து வருகின்றது. சுத்தமற்ற நீரை குடிக்கவும், குளிக்கவும் சமைக்கவும் உபயோகிக்க முடியாது. நோய்களால் பீடிக்கப்படுவர் மக்கள். எனவே ஏழை முதல் செல்வன் வரை குழந்தை முதல் முதியோன் வரை அனைவரும் அருந்தும் நீரும்…

Read More

வங்காளதேசத்தில் வன்முறை

வங்காளதேசத்தில் போர்க்குற்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் மோதியுர் ரஹ்மான்(73) டாக்கா சிறையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தூக்கிலிடப்பட்டார். இஸ்லாமிய தலைவர் தூக்கிலிடப்பட்டதை தொடர்ந்து ஜமாட் மற்றும் ஆளும்கட்சி ஆதரவாளர்கள் சிட்டாங்காங் நகரில் மோதிக் கொண்டனர். கற்களை வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ரஹ்மான் நிஜாமின் ஆதரவாளர்களை களைக்க ரப்பர் தோட்டாக்களை கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர்…

Read More