Headlines

நாட்டின் பல பகுதிகளில் அடை மழைக்கு வாய்ப்பு!




நாட்டைச் சூழவுள்ள அனைத்துப் பாகங்களிலும் இன்று (10) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, நாட்டின் பல மாகாணங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் சில பிரதேசங்களில் இம் மழை வீழ்ச்சியினளவு 100 மில்லி மீற்றரைத் தாண்டலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் காலையிலும் மழைக்கான சாத்தியம் நிலவுகிறது.

மேலும், சில பகுதிகளில் மழை பெய்யும் போது கடும் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும், மக்கள் இடி, மின்னலில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *