Headlines

பாடசாலை சேவை வாகனங்களில் பிரேக்கில் குறைபாடுகள்

– திலக்கரத்ண திஸாநாயக்க – பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் 32 வான்கள் மற்றும் பஸ்களின் வாகன நிறுத்தும் கருவியில் (பிரேக்) குறைப்பாடுகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சுமார் 100 வாகனங்கள் இவ்வாறு வாகன நிறுத்தும் கருவிகளில் குறைபாடுகளுடன் இயங்கி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் அநேகமான வாகனங்கள் பாடசாலை மாணவர்களுக்கான சேவையில் ஈடுபடும் வாகனங்கள் என்றும் இவையனைத்தும் கம்பஹா மாவட்டத்துக்குள் இயங்குபவை என்றும்…

Read More

வாள், கத்தி உற்பத்தி செய்ய தடை

– எம்.றொசாந்த் – வாள்கள், ஆபத்தான கத்திகள் என்பவற்றை தொழிற்சாலைகள் உற்பத்தி செய்வதற்குத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள யாழ். மேல் நீதிமன்றம், அவற்றை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உடனடியாகக் கையளிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது.

Read More

 ‘திருமணமாகாமலே 1,000 பேர் கருக்கலைத்து கொள்கின்றனர்’

5-20 சதவீதமானவர்கள் உயிரிழப்பு 240,170 பேர்  கலைத்துக்கொள்கின்றனர் ஊவாவிலேயே அதிகமான கருக்கலைப்பு கவிதா சுப்ரமணியம் – திருமணம் முடிக்காமலே, நாளொன்றுக்கு 1,000 பேர் சட்டவிரோதமான முறையில் கருவைக் கலைத்துக்கொள்கின்றனர் என்று ஜயவர்தனபுர பல்கலைக்கழக பிரதம மருத்துவ அதிகாரி வைத்தியர் ஷாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார். ‘133 வருடங்களுக்கு முன்னரான சட்டத்தை, இன்னும் நாம் கடைப்பிடித்து வருகின்றோம். அச்சட்டத்தில், கர்ப்பம் தரித்த தாயொருவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக மாத்திரமே கருக்;கலைப்புச் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது’ என்றும் அவர் கூறினார். கருக்கலைப்பினால் ஏற்படும்…

Read More

ஐவேளை தொழாத கணவரை, விவாகரத்து செய்த சகோதரி

சவூதி அரேபியாவை சேர்ந்த பெண்மனி ஒருவர் தனது கணவர் ஐவேளை தொழாததால் விவாகரத்து பெற்றுள்ளார்.   May 7, 2016 Five days after getting married, a woman in Saudi Arabia has found that her husband was not religiously-committed man, therefore divorced him. As per Saudi news site Al Marsad, the woman was so annoyed with her husband who was not…

Read More

ஐ.நா பொதுசபை விஷேட அமர்வு ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஜக்கிய மற்றும் நல்லிணக்க தலைவர்களின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐ.நா பொதுச்சபை விஷேட அமர்வில் உரையாற்றவுள்ளார். இந்த விஷேட அமர்வு இன்றும் (10) நாளையும் நியூயோர்க்கில் இடம்பெறவுள்ளது. இதன் தொனிப்பொருள் சர்வதேச பாதுகாப்பும் சமாதானமும் என்பதாகும். இதன்போது இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் நல்லிணக்க நடைமுறை பற்றி அவர் உரையாற்றவுள்ளார். புதிய தொடர்புகள் மற்றும் பதிலளிப்புக்களுக்கூடாக முன்னோடியான தலைமைத்துவம் என்பது இந்த விசேட அமர்வின் தொனிப்பொருளாகும். ஐ.நா பொதுச்சபையின் தலைவர் விஷேட அமர்வை ஏற்பாடு…

Read More

சிறுத்தையின் மரணத்திற்கு விஷம் கலந்த உணவே காரணம்

அக்கரபத்தனை பகுதியில் நேற்று (9) உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தை விஷம் கலந்த உணவை உட்கொண்டதன் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுமித் பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார். குறித்த சிறுத்தை உயிரிழந்த இடத்திற்கு அண்மையில் நாய்கள் இரண்டும் உயிரிழந்து கிடந்தமை குறிப்பிடத்தக்கது. அந்த நாய்களுக்கு விஷம் கலந்த உணவை வழங்கி சிறுத்தையை கொலை செய்திருக்கலாம் என திணைக்களத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவ்வாறான…

Read More

றிஷாத்தைப்போன்று எவரும் பணியாற்றியதில்லை – சட்டத்தரணி மில்ஹான்

மன்னார் மாவட்டத்தின் அரசியல் வரலாற்றிலே அமைச்சர் றிசாத் பதியுதீனைப் போன்று, எந்த ஓர் அரசியல்வாதியும் பணியாற்றியது இல்லை என்று தேசிய வடிவமைப்பு நிறுவனத் தலைவர், சட்டத்தரணி மில்ஹான் தெரிவித்தார். மன்னார், அளக்கட்டு மாதிரிக் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலேயே சட்டத்தரணி மில்ஹான் இவ்வாறு குறிப்பிட்டார். மன்னாரில் கடந்த காலங்களில் எத்தனையோ அரசியல்வாதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களாக பணியாற்றி இருக்கின்றனர். அவர்கள் மக்கள் பணியாற்றியுள்ள போதும், அமைச்சர் றிசாத் பதியுதீனைப் போன்று செயற்பட்டதில்லை. அமைச்சர் றிசாத் ஒரு சாணக்கியமிக்கத் தலைவர். மக்களோடு…

Read More

அபிவிருத்தி நடவடிக்கைகளை சிலர் கறுப்புக் கண் கொண்டு பார்க்கின்றனர்

சுஐப் எம் காசிம் – வவுனியா மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களான  அண்ணா நகர், தெற்கிலுப்பைக்குளம், பாரதிபுரம், சமயபுரம், சுந்தரபுரம், ஈஸ்வரிபுரம், கல்மடு போன்ற தமிழ் கிராமங்களுக்கு அமைச்சர் ரிஷாட் கடந்த சனிக்கிழமை (7)  விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அந்தக் கிராம மக்களை அவரவர் இடங்களில் சந்தித்து அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்த அமைச்சர் அங்கு நடைபெற்ற கூட்டங்களிலும் உரையாற்றினார். அமைச்சர் கூறியதாவது, கடந்த காலங்களில் நான் இந்தப் பிரதேச மக்களுக்கு முடிந்த வரையில் உதவியுள்ளேன். என்னாலான பணிகளை மேற்கொண்டுள்ளேன். யுத்த…

Read More

சம்பந்தனின் பதவியை பறிக்க இடமளிக்கமாட்டோம் – ஜே.வி.பி.

 ஜனா­தி­பதி, பிர­தமர் கன­வுகள் கலைந்­துள்ள நிலையில் சம்பந்­தனின் எதிர்க்­கட்சி ஆச­னத்­தை­யேனும் பறிக்கும் நோக்­கத்­தி­லேயே மஹிந்த அணி­யினர் செயற்­பட்டு வரு­கின்­றனர். பாரா­ளு­மன்­றத்தில் குழப்­பங்­களை மேற்­கொள்­ளவும், பயங்­க­ர­வாத கதை­களை பரப்­பவும் இதுவே காரணம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க தெரிவித்தார். எம்­மீது பொய்க்­குற்றம் சுமத்தி எதி­ரணி பலத்­தினை குறைக்க முயற்­சிக்­கின்­றனர். ஆனால் நாம் இருக்கும் வரையில் அதற்கு இட­ம­ளிக்க மாட்டோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். எதிர்க்­கட்சி பத­விக்­காக தொடர்ச்­சி­யாக மஹிந்த அணி­யினர் போரா­டி­வரும் நிலை­யிலும், மக்கள்…

Read More

மஹிந்தவை ஒதுக்க மாட்டோம் – அமைச்சர் நிமல்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தனது தனிப்­பட்ட கொள்­கை­க­ளுக்கு அமை­வாக செயற்­ப­டு­கின்றார். அதற்­காக அவரை ஒதுக்கிச் செயற்­படும் நிலைப்­பாட்டில் சுதந்­திரக் கட்­சியும் இல்லை. எனவே பேச்­சு­வார்த்தை ஊடாக அவ­ரது பிரச்­சி­னையை அணுகி அதற்­கான தீர்­வொன்றை எட்­டவே நாம் முயற்­சிக்­கின்றோம் என போக்­கு­வ­ரத்து அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்தார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­க­ண­ட­வாறு தெரி­வித்தார்.

Read More

ஜனாதிபதி பிரித்தானியா பயணம், டேவிட் கமருனுடன் முக்கிய பேச்சு

மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் பயணமாக இன்று -10- இரவு பிரித்தானியாவுக்குச் செல்லவுள்ளார். நாளை மறுநாள் பிரித்தானியாவில் நடைபெறவுள்ள ஊழல் ஒழிப்பு தொடர்பான அனைத்துலக மாநாட்டில் பங்கேற்கவே மைத்திரிபால சிறிசேன லண்டன் செல்லவுள்ளார். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாட்டின் ஒரு பக்க நிகழ்வாக, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனை மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அத்துடன், சிறிலங்காவில் ஊழலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்குத் தேவையான நிபுணத்துவ உதவிகளை வழங்குமாறும் அவர், பிரித்தானியப் பிரதமரிடம்…

Read More