Headlines

மொனராகலையில் ஐஸ் கட்டி மழை! மகிழ்ச்சியில் மக்கள்

மொனராகலை பிரதேசத்தில் ஐஸ் கட்டி மழை பெய்துள்ளது. நீண்ட காலமாக மழையின்றி வறட்சியினால் பாதிக்கப்பட்டிருந்த மொனராகலயின் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. மொனராகலை சியம்பலாண்டுவ முத்துகண்டிய என்னும் பிரதேசத்தில் ஐஸ் கட்டி மழை பெய்துள்ளது. கடுமையான காற்றுடன் இவ்வாறு ஐஸ் கட்டி மழை பெய்துள்ளது. இதேவேளை, இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

கரை­யோர மக்கள் அவ­தா­ன­ம்!

நாட்டின் பல பாகங்­க­ளிலும் பலத்த காற்­றுடன் கூடிய மழை பெய்­வ­தற்­கான சூழல் காணப்­ப­டு­வதால் கரை­யோரப் பிர­தே­சங்­களில் வாழும் மக்கள் மற்றும் கடற்­றொ­ழிலில் ஈடு­ப­டு­கின்­ற­வர்கள் மிகவும் அவ­தா­ன­மாக செயற்­ப­ட­ வேண்டும் என கேட்­டுக்­கொள்­வ­தாக வளி­மண்­டள­வியல் திணைக்­களம் விடுத்­துள்ள அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, நாட­ளா­விய ரீதியில் கடற்­க­ரைப்­ப­கு­தி­களில் பலத்த காற்று வீசு­வ­தற்­கான அதி­க­ளவு வாய்ப்­புகள் காணப்­ப­டு­கின்­றன. இத­ன­டிப்­ப­டையில் மேற்கு, வட­மேற்கு,தெற்கு மத்­திய மற்றும் சப்­ர­க­முவ மாகா­ணங்­களில் அதி­க­ளவு மழை பெய்­வ­தற்­கான வாய்ப்­புகள் உள்­ளன. கடற்­க­ரைப்­ப­கு­தி­களில் மணித்­தி­யா­ல­த்­துக்கு 60…

Read More

வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் எச்சரிக்கை

நாட்டைச் சுற்றியுள்ள கடற் பிரதேசங்களில் மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலைமை காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் கடும் அவதானத்துடன் இருக்குமாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை தரைப்பிரதேசத்தில் திடீரென கடும் காற்று வீசக்கூடும் என்றும் இன்று வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் சில பிரதேசங்களில் மழை பொழியும் சாத்தியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

கடும் காற்று! மக்கள் அவதானம்

மலையகத்தின் பல பிரதேசங்களில் கடும் காற்று வீசுவதால் மக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலநிலைக்கு மாறாக திடீரென கடும் காற்று தொடர்ந்து வீசி வருகின்றது. இதனால் பாதுகாப்பற்ற மற்றும் உயரமான மரங்களுக்கு கீழ் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் மரங்களை வெட்டி அகற்றுமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ள அதேவேளை, தொடர்ந்தும் பலமான காற்று வீசுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

50 ஆண்டுகளில் இல்லாத அளவு கடந்த மே மாதம் உலகை சுட்டெரித்த சூரியன்

உலகம் முழுவதும் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மே மாதத்தில் வெயில் கொளுத்தியதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச வானிலை மைய நிறுவனம் (டபிள்யூஎம்.ஓ.) சர்வதேச அளவில் கடந்த ஆண்டு நிலவிய தட்ப வெப்ப நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நாசாவின் தட்ப வெப்பநிலை கணக்கெடுப்பின் அடிப்படையில் இது வெளியிடப்பட்டது. அதன்படி 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கடந்த மே மாதத்தில்தான் கடுமையான வெப்பத்துடன் வெயில் கொளுத்தியுள்ளது. அதற்கு பருவ நிலை மாற்றம் காரணமாக வடபுலத்தில்…

Read More

மின்னல் தாக்கி 6 வீடுகள் சேதம்

பத்தேகம – இதுருபத்வல பகுதியில் மின்னல் தாக்கி ஆறு வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், இதனால் சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதோடு, குறித்த வீடுகளில் இருந்த மின் உபகரணங்களும் சேதமடைந்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்த சிறுமி பத்தேகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

Read More

வௌ்ள நீர் வடிகிறது

களனி கங்கைக்கு மேற் பகுதிகளில் வௌ்ள நீர் வடிந்து வருவதாக, நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் களனி கங்கைக்கு கீழுள்ள பகுதிகளில் இன்னும் வௌ்ள நிலைமை காணப்படுவதோடு அதுவும் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக, கூறப்பட்டுள்ளது. மேலும், காலநிலை மற்றும் கங்கையின் நீர் மட்டம் குறித்து நீர்ப்பாசன திணைக்களம் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே ஏதேனும் ஆபத்து நிலைமைகள் இருப்பின் காலதாமதம் இன்றி அதனை மக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அந்த திணைக்களம்…

Read More

இன்று மீண்டும் மழை பெய்யும்!

நாட்டின் பல பாகங்களிலும் மீண்டும் இன்று திங்கட்கிழமை முதல் மழை பெய்யும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் பெய்துவந்த அடை மழை கடந்த மூன்று தினங்களாக சற்று ஓய்ந்து காணப்பட்டதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. மேல், வட மேல், தெற்கு, மத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கு விசேடமாக இன்று முழுநாளும் இடைக்கிடை மழை பெய்யும் எனவும் திணைக்களத்தின் நிரந்தர பிரதிநிதி மலிந்த மில்லன்கொட குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கிழக்கு மாகாணத்துக்கு இன்று மாலை 2.00 மணியின்…

Read More

மழையும், காற்றும் தொடரும் – வானிலை அவதான நிலையம்

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டிருந்த ரோனு சூறாவளி காங்கேசன்துறைக்கு வடக்கே 900 கிலோமீ்ற்றர் தொலைவில் வடக்கு நோக்கி இலங்கையை தாண்டி செல்வதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் பலபாகங்களிலும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்று வானிலை அவதான நிலையம் கூறியுள்ளது. இது மேலும் உக்கிரமடைந்து நாடு முழுவதும் பரவலான மழை வீழ்ச்சியை ஏற்ப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் மழை பெய்வதுடன், கடலோரங்களில் காற்றுடன் மழையும்…

Read More

நாட்டில் இன்றும் கனமழைக்கான சாத்தியம்

நாட்டில் இன்றும் கனமழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின்  பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார். காங்கேசன் துறைக்கு வடக்கே  500 கிலோ மீற்றர்  தொலைவில்  பலத்த காற்று வீசிவருகின்றது. இன்னும் 24 மணி நேரத்தில் அது சுறாவளியாக மாறி இலங்கையினூடாக பயணிக்கவுள்ளது. இதனால் மேற்கு , தெற்கு மற்றம் வடக்கிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது. மேலும் மத்திய மற்றும் வடபகுதிகள் பெரிதும் பாதிக்ககப்படுமென அவர் தெரிவித்தார். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் பாரிய…

Read More

சீரற்ற காலநிலையினால் இதுவரை 19 பேர் பலி

தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று (18) காலை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 81 ஆயிரத்து 212 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 42 ஆயிரத்து 918 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதில் தலைநகரம் கொழும்பில் 35 ஆயிரத்து 513 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்க விழிப்புடன் இருக்க வேண்டும்!

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்படும் அவசர நிலைமைகளுக்கு முகம்கொடுப்பதற்கு எந்நேரமும் விழிப்புடன் இருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கு உலருணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு  பதிலாக நாளொன்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கொடுப்பனவான 150 ரூபாவை 225 ரூபாவாக அதிகரிப்பதற்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

Read More