Headlines

குருணாகலில் கோர விபத்து!

குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியானதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். கலேவெல என்ற பகுதில் இன்று காலை இடம்பெற்ற விபத்தின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கட்டுநாயக்க அதிவேக வீதியில் விபத்து : இரு இளைஞர்கள் பலி.!

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஜா-எல வெளியேறும் வாயில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மின் கம்பத்தில் மோதியமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில், ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 23 மற்றும் 25 வயதான இருவர் பலியாகியுள்ளனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, விபத்து தொடர்பான…

Read More

விபத்தில் 12 பேர் காயம்

ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் நாவலபிட்டியிலிருந்து வட்டவளை நோக்கி வந்த வானும் கினிகத்தேன- கடவள பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் பஸ்ஸில் பயணித்த 9 பேரும் வானில் பயணித்த 3 பேரும் காயமடைந்த நிலையில், கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் பஸ் தவறான…

Read More

விபத்தில் 20 பேர் படுகாயம்

குருநாகலிலிருந்து பத்தரமுல்லை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ்ஸும் கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸும், குருநாகல் – கொழும்பு பிரதான வீதியில் துல்ஹிரியவில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர். இன்று  காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்தோர், வறகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

முஹம்மத் நிஷாத் குவைதில் வபாத்!

-ஹரீஸ் ஸாலிஹ் – மினுவாங்கொடையைச் சேர்ந்த சகோதரர் முஹம்மத் நவ்ஷாத் அவர்களின் செல்வப் புதல்வர் 19 வயதுடைய முஹம்மத் நிஷாத் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றினால் குவைத் நாட்டில் காலமானார் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று  (22) திங்கட்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து,  குவைத் சப்ஹான் மையவாடியில் இடம்பெற்றது அல்லாஹ் அவரின் குற்றம் குறைகளை மன்னித்து மேலான சுவர்க்கத்தை வழங்குவானாக..!

Read More

விபத்தில் ஊடகவியலாளர் பலி

-மயூரன் – யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்து யாழ்.கண்டி வீதியில் இருந்து சோமசுந்தரம் வீதியில் திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிளை மோதியதில் அதில் பயணித்த ஊடகவியலாளர் தலையில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ். மாவட்ட செயகத்திற்கு அருகில் கண்டி வீதியில் நேற்று மாலை (02) இடம்பெற்ற வீதி விபத்தில் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் காயமடைந்த…

Read More

சவூதியில் 13 உம்ரா யாத்திரியர்கள் பலி

சவூதி அரேபியாவில் தாயிப் நகரில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் பலியாகியுள்ளதுடன் 36 பேர் படுகாயமடைந்துள்ளனர். பஸ்ஸின் டயர் வெடித்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த பஸ்ஸில் சுமார் 50 பேர் பயணம் செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு மரணமடைந்தவர்களில் பெரும்பாலனவர்கள் எகிப்தியர்கள் எஎன தெரிவிக்கப்படுகின்றது.

Read More

ரயில் மோதி மூவர் பலி!

வெள்ளவத்தை மற்றும் இரத்மலானை புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று (11) காலை மூவர் ரயிலில் மோதி பலியாகியுள்ளனர். மேலும், குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

மதில் விழுந்ததில் 16 மாணவர்கள் காயம்

லுணுகல முஸ்லிம் வித்தியாலத்தின் மதிலொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சரிந்து விழுந்ததில், பாடசாலைக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று லுணுகல பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலையில் இடம்பெற்ற மேலதிக வகுப்புக்கு வந்திருந்த மாணவர்களே இந்த அனர்த்தத்தில் சிக்கிக்கொண்டனர். பாதிக்கப்பட்ட மாணவர்களில் நால்வர், மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Read More

ரயிலில் மோதி இரு இளைஞர்கள் பலி

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்டு கல்வியங்காட்டைச் சேர்ந்த மோகனராசா நிசாந்தன் (வயது 17), திருநெல்வேலியைச் சேர்ந்த பரமநாதன் ரெஜராம் (18)  ஆகிய  இரு இளைஞர்கள், இன்று சனிக்கிழமை (07) உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு அருகாமையில் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் இரு இளைஞர்களும் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய நிலையிலே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதென அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.  இச்சம்பவம் தொடர்பான மேலதிக  விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு…

Read More

நான் செல்கின்றேன் இனி வரமாட்டேன் ; ரயிலில் மோதி பலியான மாணவியரின் அதிர்ச்சி பதிவுகள்

பம்­ப­ல­ப்பிட்டி முதல் தெஹி­வளை வரை­யி­லான கரை­யோர ரயில் பாதை தொடர்பில் புதி­தாக விளக்கம் ஒன்றும் அவசி­ய­மில்லை. ஏனெனில் இந்த தண்­ட­வா­ளப்­ ப­கு­தியில் அடிக்­கடி ரயிலில் மோதி பலர் உயி­ரி­ழப்­பது தொடர்ச்­சி­யாக இடம்­பெற்ற வண்­ணமே உள்­ளது. கவ­ன­யீனம் கார­ண­மா­கவும் அவ­தா­ன­மின்­மை­யுமே இந்த உயி­ரி­ழப்­புக்­க­ளுக்கு கார­ணங்கள் என கடந்த கால சம்பவங்களை வைத்து பொலிஸார் கோடிட்டு காட்­டு­கின்­றனர். இந் நிலையில் தான் கடந்த 25ம் திகதி அதே கரை­யோர ரயில் மார்க்­கத்தில், தெஹி­வளை ரயில் நிலை­யத்தை அண்மித்த பகு­தியில் ரயிலில்…

Read More

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு.!

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கெண்டைனர் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் குறித்த பகுதிக்கான போக்குவரத்து ஒரு வழி பாதையில் இடம்பெறுவதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர். தலவாகலையிலிருந்து கொழும்பிற்கு 12 டொன் நிறையுடைய  தேயிலை தூல் ஏற்றி சென்ற லொறியே இன்று அதிகாலை 4.30 மணியளவில் கினிகத்தேன 20 மைல் பகுதியில்  விபத்துக்குளாகியுள்ளது. லொறியில் ஏற்பட்ட இயந்திர கோளாரினால் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படாத போதிலும் வாகன போக்குவரத்துக்கு தடையேட்பட்டு ஒரு வழி பாதையில் வாகனங்கள் பயணிப்பதாகவும் விபத்து தொடர்பில் விசாரணை…

Read More