மனுச நாணயக்கார பிரதியமைச்சரானார்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சற்றுமுன்னர் சத்தியபிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சற்றுமுன்னர் சத்தியபிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இன்று (6) நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை பெய்யலாம் என வானிலை அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் தென்மேற்கு கடற்கரை பகுதிகளில் மழை பெய்யலாம் எனவும் இதனால் 75 மில்லிமீற்றர் அளவில் நீர் மட்டம் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், வடக்கு பகுதியில் இம்மாதம் 5 தொடக்கம் 14ஆம் திகதி வரையில் சூரியன் உச்சமளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்றைய தினம் ஓப்பனாயக்க,வடக்கு-களுத்துறை,மொலமுர மற்றும் மகாவெல்லத்தோட்டம் ஆகிய பகுதிகளில் நண்பகல் 12.03 மணியளவில்…
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட கல்மதுரை பிரிவின் குடியிருப்பில் இன்று காலை 7.00 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தொடர் வீட்டு பகுதியில் தீ பரவியுள்ளது. இதனால் அவ்வீட்டில் உபகரணங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள், சீருடை என அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ள நிலையில் அயலில் உள்ளவர்களால் ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேவேளை இது தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஸ்தலத்திற்கு விரைந்த…
வவுனியா தாரகாசின்னகுளம் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சடலம் வவுனியா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தலை தடுக்க இலங்கை முன்னெடுத்து வருகிற முயற்சிகளுக்கு அவுஸ்திரேலியா பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படை தளபதியை அவுஸ்திரேலியாவின் ஆட்கடத்தல் குறித்து ஆராயும் ஆணையாளர் சந்தித்த போதே இதனை குறிப்பிட்டதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
உழைக்கும் மக்களின் உரிமைகளை வலியுறுத்தியும் , நாட்டிற்கு ஜனநாயக ஆட்சியை கோரியும் கூட்டு எதிர் க்கட்சியின் மே தின கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் தலைமையில் நாரஹேன்பிட்டியில் நடைபெறும். ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரும் கூட்டு எதிர் கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இவ்வாண்டின் முதலாம் தவணை பாடசாலை விடுமுறைக்காக சகல முஸ்லிம் பாடசாலைகளையும் இம் மாதம் 8ஆம் திகதி மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் இஸட் தாஜுடீன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் ஒரே தினத்தில் விடு முறை வழங்க வேண்டும் என்ற முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் விடுத்த விஷேட வேண்டு கோளின் பிரகாரம்,…
அதிவேக நெடுஞ்சாலைகளில் அனுமதி பத்திரம் இன்றி பயணிக்கும் பயணிகள் பஸ் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவ் வீதிகளில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (5) கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமசந்தர தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், எதிர்காலத்தில் அனுமதிப்பத்திரமின்றி பயணிக்கும் பஸ்களுக்கு எதிராகவும் அதிக பயணிகளை ஏற்றி செல்லும் பஸ்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்வதற்கு நெடுஞ்சாலைகளில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிகாரம்…
சோசலிச நாடாக இலங்கை உருவாக்கப்படும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். பாணந்துறை நகர மண்டத்தில் நேற்றைய தினம் (5) நடைபெற்ற ஏப்ரல் வீரர்கள் தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிக்கையில், குடும்ப ஆட்சி மற்றும் கூட்டு ஆட்சியினால் தோல்வியடைந்த நாடாக மாற்றமடைந்துள்ளது. முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு எதிராக ஜே.வி.பி முன்னெடுத்ததனைப் போன்றே சோசலிச நாடு ஒன்றை உருவாக்குவதிலும் பங்களிப்பு வழங்கும். ராஜபக்ச அரசாங்கம் 1000 பில்லியன்…
மதத் தலைவர்களை இழிவுபடுத்துவதற்கு நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை பயன்படுத்த இடமளிக்காத வகையிலான புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பிலான உத்தேச சட்ட வரைவு பௌத்த சாசன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால், சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நேற்று (5) ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றின் விசேட வரப்பிராதங்களை பயன்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தவொரு மதத் தலைவர்களையும் இழிவுபடுத்த அவமரியாதை செய்ய இடமளிக்கக் கூடாது என நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் நாடாளுமன்றில்…
ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலையுடன் இரண்டு பேருக்கு நேரடித் தொடர்பு காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த இருவரும் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர். விசாரணைகளின் மூலம் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனைய சந்தேக நபர்களின் தொடர்புகள் குறித்து ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், உறுதியாக ஆதாரங்கள் காணப்படும் இரண்டு சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வசிம் தாஜூடின் கொலை குறித்த விசாரணைகளை…
எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் இலங்கைக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து 09 நாட்களுக்கு நாட்டின் வடக்கு உட்பட சில பகுதிகளுக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி சூரியன் உச்சம் கொடுக்கும் நாட்களில் கடுமையான வெப்பமும் சூரிய ஒளியும் காணப்படும் என்பதால் மக்கள் தமது உடல்நிலை தொடர்பில் அவதானமாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது