Headlines

நீர்கொழும்பு வைத்தியசாலையில் அதிக வெப்பம் நோயாளிகள் திண்டாட்டம்!

நீர்கொழும்பு வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 3 கட்டிடங்களில் அதிக வெப்பம் நிலவுவதால் அங்கு நோயாளிகள் சிகிச்சைப் பெற முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உருக்கு அல்லது இரும்பிலான பொருட்களைக் கொண்டு குறித்த கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையே இதற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அதிக வெப்பம் காரணமாக குறித்த கட்டிடத்தினுள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பெருந்தொகையான மருந்து வகைகளும் அழிவடைந்துள்ளதாக வைத்தியசாலையின் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மக்களின் மில்லியன் கணக்கான பணத்தினைக் கொண்டு அவசரஅவசரமாக நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டடிமானது நோயாளர்களை தங்க வைப்பதற்கு…

Read More

சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் இயக்குவதில் வெற்றிகண்ட றிஷாத்

– சுஐப் எம்.காசிம் –   வடமாகாணத்தின் முக்கிய தொழிற்சாலைகளான காங்கேசந்துறை, சீமெந்து கூட்டுத்தாபனம், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஆனையிறவு – குறிஞ்சாக்கேணி உப்பளம் ஆகியவை யுத்தத்தின் கோரத்தினால் சீர்குலைந்து கிடக்கின்றன. ஆனையிறவு உப்பளத்தின் ஒரு பகுதி சமாதானம் ஏற்பட்ட பின்னர் செய்கை பண்ணப்பட்டு வருகின்றபோதும், பெரும்பாலான உப்பு வாய்க்கால்கள் கைவிடப்பட்டே காணப்படுகின்றன. அமைச்சர் றிசாத் பதியுதீன், தனது கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ் இந்தத் தொழிற்சாலைகளை சுமார் 08 மாதங்களுக்கு முன்பே பொறுப்பேற்றார். இந்தத் தொழிற்சாலைகளை…

Read More

இலங்கைக்கு முக்கியத்துவம் வழங்கும் ஒபாமா

இலங்கையுடனான உறவுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா முக்கியத்துவம் அளிப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான அமெரிக்க வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற இலங்கை அமெரிக்க வர்த்தக மற்றும் முதலீட்டு உடன்படிக்கை குறித்த கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு தொடர்ச்சியான வகையில் ஒத்துழைப்புக்களை வழங்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்களுக்கு சமூக பொருளாதார நன்மைகளை ஏற்படுத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும்…

Read More

ஏழை துயர் துடைக்கும் ஆளுமை; அஷ்ரப் விட்டுச் சென்ற பணியில் றிஷாத்

– இஷ்ஹாக் – நிந்தவூர் – முகா தலைவர் ஹக்கீம் ஆட்டுக்குட்டியுடன் நிற்பதையும் .அ.இ.ம.கா தiலைவர் ரிசாத் பதியுதீன் ஆதரவற்ற ஏழைக் குடிசைகளுக்குள் அதிகாலை வேளை சென்று அவர்களது குறை நிறைகளை கேட்டறிந்ததையும் ஒப்பிட்டும் ஒப்பிடாமலும் ஏட்டுக்குபோட்டியான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. ஹக்கீம் ஆட்டுக்குட்டியுடன் நிற்பது என்பது முகா போராளிகளை குசிப்படுத்துவற்காகவும் அந்த போராளிகளின் முகநூல்களை அலங்கரிப்பதற்காகவும் எடுக்கப்பட்ட புகைப்படங்களே ஒழிய அதில் எந்தவித சமுக நலனும் இல்லை. ஆட்டுக்குட்டியை தூக்குவதனால் முஸ்லிம்களுக்கோ, முஸ்லிம் சமுகத்திற்கோ எந்தவித…

Read More

பேக்கரிகளின் உரிமையாளர்களுக்கு தண்டம்.!

பாண் இறாத்தல் ஒன்று கொண்டிருக்கவேண்டிய நிறையை விட குறைந்த நிறையில் பாண்களை தயாரித்து விற்பனைச்செய்த 3 பேக்கரிகளின் உரிமையாளர்களுக்கு தலா 2,000 ரூபாய் வீதம் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. நுகேகொடை மேலதிக நீதிவானும் மற்றும் மேலதிக மாவட்ட நீதிவானுமாகிய அனுஷ்க செனவிரத்ன உத்தரவிட்டார்.

Read More

மே தினக் கூட்ட பாதுகாப்பிற்கு 5000 பொலிஸார் கடமையில்!

மே தினக் கூட்ட பாதுகாப்பு பணிகளில் 5000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மே தினக் கூட்டங்கள் மற்றும் மே தின பேரணிகள் போன்றவற்றுக்கான பாதுகாப்பிற்காக இவ்வாறு 5000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நடைபெறும் மே தினக் கூட்டங்களுக்காக 3100 பொலிஸ் உத்தியோகத்தர்களும், மோட்டார் போக்குவரத்து கடமைகளுக்காக 1900 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். மே தினக் கூட்டங்களின்…

Read More

தமிழக தேர்தல்: வேட்புமனுத்தாக்கல் நாளையுடன் நிறைவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் நாளையுடன் (29) நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 22 ஆம் திகதி  வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், இதுவரை 2,112 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுகவை சேர்ந்த 233 வேட்பாளர்களும் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனுக்கள் மீதான பிரிசீலனை எதிர்வரும் 30 ஆம் திகதி  நடைபெறுகிறது. மே 2 ஆம் திகதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று, இறுதி வேட்பாளர்…

Read More

தம்மாலோக தேரர் விவகாரம் – விசாரணைகள் நிறைவு

உடுவே தம்மாலோக தேரர் அனுமதிப் பத்திரம் இன்றி யானைக் குட்டியொன்றை தன்னகத்தே வைத்திருந்தமை தொடர்பிலான, விசாரணை நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளனர். இன்று குறித்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையே, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு கூறியுள்ளனர். மேலும், விசாரணை குறித்த அறிக்கைகள் அனைத்தும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இதன்போது குறிப்பிட்ட அவர்கள், சட்ட மா அதிபரின் அறிவுரை கிடைக்கப்பெற்றதும், உரிய சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் நீதிமன்றத்தில்…

Read More

‘ஒன்றிணைந்த எதிரிணியென அழைக்கவேண்டாம்’

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சார்பான அணியினரை, ஒன்றிணைந்த எதிரணி என அழைக்கவேண்டாமெனவும், அவர்கள், உண்மையான எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளது. tm

Read More

ஜே.ஆர். ஜெயவர்தனவின் பேரன் அமைப்பாளராக நியமனம்

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் பேரனான பிரதீப் ஜயவர்தன கம்பஹா மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று வியாழக்கிழமை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 11 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்களுள் ஒருவராகவே ஜே.ஆரின் பேரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற வெற்றி ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது

– சுஐப் எம் காசிம் – யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் அவர்களின் ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது. ஆளை ஆள் விமர்சித்துக் கொண்டு ஒருவரை மற்றவர் குறை கூறிக்கொண்டிருந்தால் இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது சிரமமாகவே இருக்குமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் தமது பிரதேசத்திற்கு மீள் குடியேறச் சென்றுள்ள யாழ் முஸ்லிம்களுடனான கலந்துரையாடல் யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் இடம்பெற்ற போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.  இந்தக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட பாராளுமன்ற…

Read More

தாய்லாந்து முப்படை தலைமை அதிகாரி – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!

தாய்லாந்து ரோயல் ஆயுதப்படைகளுக்கான பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சொம்மை காவ்டிரா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோரை நேற்று (27) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார். ஜெனரல் சொம்மை காவ்டிரா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற வெவ்வேறு சந்திப்புகளின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வை நினைவுகூறும் வகையில் ஜெனரல் சொம்மை காவ்டிரா பாதுகாப்பு…

Read More