நீரை விநியோகிப்பதில் சிக்கல்
மின் தடை அதிகரித்த வீதத்தில் இடம்பெறுவதால் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களுக்கு தொடர்ச்சியாக நீரை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உரியவாறு மின்சாரம் கிடைக்காமையே இதற்குக் காரணமாகும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் ரஞ்சித் பாலசூரிய தெரிவித்தார். எனினும், கொழும்பு, காலி, மாத்தறை, நீர்கொழும்பு, கண்டி போன்ற பிரதேசங்களுக்கான நீரை விநியோகிக்கும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு 24 மணித்தியாலமும் மின்சாரத்தை வழங்குவதற்கு மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக…
