Headlines

மஹிந்த அரசியல் அநாதையாவார்

முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­ணாகல் மாவ ட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக்ஷ தேர்ந்­தெ­டுத்­துள்ள அர­சியல் பாதை தவ­றா­னது. அவர் சுதந்­திரகட்­சியில் உள்ள சிரேஷ்­டத்து­வத்தை இழந்து அர­சியல் அநா­தை­யாகப் போவ­தை­யிட்டு வருந்­து­கின்றேன் என்று தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரி­வித்தார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று முன்­தினம் (16) இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

Read More

மஹிந்தவையும் ஷிராந்தியையும் கைது செய்ய வேண்டும்

சி.எஸ்.என். தொலைக்­காட்சி நிறு­வனம் அர­சு­டை­மை­யாக்­கப்­ப­ட ­வேண்டும். யோஷி­தவை கைது­செய்­வ­தற்கு முன் அவ­ருக்கு வழி­ காட்­டிய மஹிந்த ராஜ­பக்ஷ ­வையும் ஷிராந்­தி­யை­யுமே கைது­செய்­தி­ருக்க வேண்டும் என தேசிய ஐக்­கிய முன்­ன­ணி யின் தலை­வரும் மத்­திய மாகா­ண­சபை உறு ப்­பி­ன­ரு­மான அஸாத் சாலி தெரி­வித்தார். கொழும்பில் மீண்டும் போதைப் பொருள் வியா­பா­ரிகள் மற்றும் பாதாள உலகக் கோஷ்­டி­யினர் தலை­தூக்க பொலிஸார் இட­ம­ளிக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டார். அதி­கா­ரத்­ததை பகிர்ந்து ஐக்­கி­யப்­ப­டுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து…

Read More

கூகுள் பலூன் விழுந்து நொறுங்கியது

“project loon” என அழைக்­கப்­படும் அதி­வேக இண்­டர்நெட் சேவை வழங்கும் கூகுள் பலூனின் முதல் சோத­னை இலங்­கையில் ஆரம்­பிக்கப்பட்­டது. இப்­ப­ரி­சோ­த­னையில் பயன்­ப­டுத்­தப்­பட இருக்கும் மூன்று பலூன்­களில் ஒன்று இலங்­கையின் தெற்குப் பகு­தி­யி­னூ­டாக திங்கட்கிழமை காலை இலங்கை வான்­வெ­ளியில் பிர­வே­சித்­தது அனை­வரும் அறிந்­ததே. விமா­னங்கள் பறப்­பதை விட இரண்டு மடங்கு உய­ர­மான வெற்­றுக்­கண்­ணுக்கு புலப்­ப­டாத ஆகா­யத்­தி­லேயே நிலை கொண்­டி­ருக்கும் இந்த பலூன் நேற்று வான் வெளியில் பழு­த­டைந்து மலை­ய­கத்தின் புஸல்­லாவ பகு­தியில் விழுந்­துள்­ள­தா­கவும், ஏரா­ள­மான மக்கள் அதனை காண…

Read More

ஜெர்மனியில் இருந்து ஒரு வயது குழந்தை வெளியேற உத்தரவு

அல்பேனியா நாட்டை சேர்ந்தவர் எடுயர்ட். இவரது மனைவி பிரான்கா. இவர்கள் கடந்த 2014–ம் ஆண்டில் ஜெர்மனியில் தஞ்சம் அடைந்தனர். அதை தொடர்ந்து அவர்கள் ரைன்–வெஸ்ட்பாலியா என்ற மகாணத்தில் உள்ள சயுயர்லேண்ட் என்ற நகரில் தங்கியுள்ளனர். இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரான்காவுக்கு அங்கு வந்து தங்கிய 11 நாட்களுக்கு பிறகு எடேனா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது அக்குழந்தைக்கு 1½ வயதாகிறது. இந்த நிலையில், அக்குழந்தை ஒருவார காலத்திற்குள் ஜெர்மனியில் இருந்து வெளியேறி அதன்…

Read More

கடலில் நீராடச் சென்ற மாணவனைக் காணவில்லை

– ரீ.கே.றஹ்மத்துல்லா – அம்பாறை, அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (17) நண்பகல் கடலில் நீராடச் சென்ற மாணவன் காணாமல் போயுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். அக்கரைப்பற்று, 13ஆம் பிரிவைச் சேர்ந்த அக்கரைப்பற்று அல்-பாத்திமியா வித்தியாலத்தில் தரம் 11இல் கல்வி பயிலும் ஹில்மி முஜீப் (வயது 16) என்ற மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இம்முறை க.பொ.த சாதாரண தரம் பரீட்சை எழுதவிருந்த மேற்படி மாணவன், தற்போது பாடசாலை பிரதேச விளையாட்டுப் போட்டி நடைபெற்றுவருவதனால் அப்பயிற்சியை…

Read More

இரு பல்கலை மாணவர்கள் மரணம் – விசாரணை சீ.ஐ.டி வசம்

கொழும்பு – கண்டி வீதியின், இபுல்கொட பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினரால் இந்த மரணம் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 2012ம் ஆண்டு செப்டம்பர் 27ம் திகதி கொழும்பு – கண்டி வீதியின் இபுல்கோட பிரதேசத்தில் மோட்டார்…

Read More

மைத்திரியை ஐ.தே.க பாதுகாக்கும்

– எம்.எம் மின்ஹாஜ் – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் முட்டாள்கள் அல்ல. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவர்களினால் பாதுகாக்க முடியாவிடின் ஐக்கிய தேசியக் கட்சியினரான நாம் அவரை பாதுாப்போம் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை எஸ்.டப்ளியூ.ஆர் .டீ.  பண்டாரநாயக்க ஆரம்பித்தது ஒரு குடும்பத்தினருக்கு சொந்தம் கொண்டாடுவதற்கு அல்ல. மைத்திரிபால சிறிசேன விவசாயி என்பதனால்  அவரின் தலைமையின் கீழ் செயற்பட…

Read More

சிறைச்சாலையில் ஞானசாரர் – மஹிந்த சந்திப்பு

சிறை வைக்கப்பட்டுள்ள ஞானசாரருக்கும், மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையே இன்று (17) சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித்த ராஜபக்ஸவை பார்வையிடச் சென்ற வேளையிலேயே மகிந்த ராஜபக்ஸ இவ்வாறு ஞானசாரரையும் சந்தித்து சுகம் விசாரித்துள்ளார்.

Read More

எம்பிலிபிடிய சம்பவம் : ஏ.எஸ்.பி தொடர்ந்தும் விளக்கமறியலில்

எம்பிலிப்பிட்டிய முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் டபிள்யு.டி.சி. தர்மரத்ன மார்ச் 2ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எம்பிலிபிட்டிய மேலதிக நீதவான் பிரசன்ன பெர்ணான்டோ, இன்று உத்தரவிட்டார். எம்பிலிப்பிட்டியவில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டார். குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலம் அளிக்கச் சென்றிருந்த நிலையிலேயே முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

அநுராதபுரத்தை மீண்டும் தலைநகராக்க வேண்டும்

அநுராதபுரத்தை மீண்டும் இலங்கையின்  தலைநகரமாக்க வேண்டும் என அரசியலமைப்பு மறுசீரமைப்பு குழுவிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மறுசீரமைப்பு குழு இன்று காலை அநுராதபுரம் மாவட்ட செயலகத்தில் கூடிய பொதுமக்களின் கருத்துக்களை பெற்று வருகிறது. குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க உறுப்பினர்களான சுனில் ஜயரத்ன, தெனிய ஹூருல்லே, நதீகா தமயந்தி ஆகியோர் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டு வருகின்றனர். அரசியலமைப்பு மறுசீரமைப்பு குழுவின் முதலில் கருத்துக்களையும் யோசனைகளையும் முன்வைத்த ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் ஒன்றின் உறுப்பினர் பியதாச பத்திரண, அரச…

Read More

லசந்தவின் கொலை: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமசிங்க கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு நபர்களின் தகவல்களை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த புகைப்படத்தில் உள்ள நபர் 35 வயதானவர் என்றும் 5 அடி 8 அங்குலம் உயரமான நபர் என்றும் சாம்பல் நிற கண்களும், வெள்ளை நிற மேனியுமான நபர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை மற்றுமொரு நபர் தொடர்பிலும் பொலிஸார் ஓவியமாக வரையப்பட்ட படங்களை வெளியிட்டுள்ளனர். 40 வயதான மேற்குறிப்பிட்ட நபர் 5 அடியும்,10 அங்குலமும் உடைய…

Read More

யோசித்தவின் மீளாய்வு மனு பரிசீலணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரின் மீளாய்வு மனு எதிர்வரும் 29ம் திகதி பரிசீலிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரும் சி.எஸ்.என் தொலைகாட்சி ஊடாக இடம்பெற்ற பாரிய முறைகேடுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More