Headlines

சுதந்திரக் கட்சியை நான் விரும்பி மைத்திரியிடம் ஒப்படைக்கவில்லை: மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது கைச்சின்னமும் வெறும் கட்டிடம் அல்ல எனவும் மக்களே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எனவும் தான் அந்த இடத்திலேயே இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேராவின் வீட்டில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்களுடனான சந்திப்பில் போது அவர் இதனை கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஏன் ஒப்படைத்தீர்கள் என சிலர் கேட்கின்றனர். உண்மையில் நான் கொடுக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் நான் தோல்வியடைந்த பின்னர்…

Read More

தவ்ஹீத் ஜமாத்திற்க்கு எதிரான, மத நிந்தனை வழக்கு ஒத்திவைப்பு

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்க்கு எதிராக பொது பல சேனாவினால் தாக்கல் செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு இன்று (11) கொழும்பு, புதுக்கடை நீதி மன்றத்தில் நீதிபதி ஜிஹான் பிலபிட்டிய முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தலைமையிலான குழுவினர் தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று மன்றில் ஆஜராயினர். எதிர்வரும் 05.05.2016 ம் தேதிக்கு வழக்கு மீண்டும் ஒத்தி வைக்கப் பட்டது. அத்துடன் இனங்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்கும் விதமாக சிங்கள பாடலாசிரியர்…

Read More

மீனவர்களுக்கான விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களின் உயிர் பாதுகாப்பிற்காக விசேட தொலைபேசி இலக்கம் இரண்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கமைய 011-2346134 மற்றும் 0722244063 என்ற இரண்டு இலக்கங்களே கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களாகும். இதேவேளை, கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் தொடர்பில் இந்தத் தொலைபேசி இலக்கங்களுக்கு தெரிவிக்க முடியும் என்பதோடு இதன்பொருட்டு நவீன உயிர்காப்பு உபகரணங்களோடு வைத்தியர் உள்ளிட்ட 6 ஊழியர்களைக் கொண்ட குழுவுடனான உயிர்காப்பு படகொன்று சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

பேருந்திலிருந்து தவறி வீழ்ந்த பாறூக் வபாத்

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் ரிதிதென்னை பஸ் டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்றில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 60வயது வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காத்தான்குடி டெலிகொம் வீதியைச் சேர்ந்த ஐ.எல்.எம்.பாறூக் எனும் 60 வயதுடைய நபரே குறித்த விபத்தில் மரணித்துள்ளார். இவ் விபத்து நேற்று புதன் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த நபர் தலையில் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்த நிலையிலேயே…

Read More

பொன்சோகாவின் பாராளுமன்ற உறுப்புரிமை முரணானது

– லியோ நிரோஷ தர்ஷன் – பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்புரிமையானது இலங்கையின் சர்வதேச பொறுப்புகூறல் உறுதிமொழிக்கு முரணானது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. (vk)

Read More

பாகிஸ்தானில் காதலர் தினம் கொண்டாட தடை

பிப்ரவரி 14–ந் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இது சம்பந்தமாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:– காதலர் தினம் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே, இதற்கு அனுமதிக்க முடியாது. இதனால் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான கோப்பு உள்துறை செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. காதலர் தினம் தடை தொடர்பாக அலுவல் ரீதியாக உத்தரவு பிறப்பிக்கப்படாது. அதே நேரத்தில் நகர நிர்வாகங்களுக்கு நேரடி…

Read More

யோஷிதவுக்கு மீண்டும் விளக்கமறியல்

யோஷித ராஜபக்ஷவை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரை இன்று மீண்டும் கடுவல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது. சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் யோஷித்த உள்ளிட்ட நால்வர்  இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

கடுவலை நீதிமன்றில் யோசித!

சி.எஸ்.என். தொலைக்காட்சி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஸ   உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (11) முன்னிலைப்படுத்த அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவரது மனைவி ஷிராந்தி ராஜபக்ஸ, புதல்வர் நாமல் ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் கெஹலிய ரம்புக்வெல உள்ளிட்ட பலர் நீதிமன்றில் பிரசன்னமாகியுள்ளனர். பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பொலிஸார், விசேட அதிரடிப்படையினரோடு நீதிமன்ற வளாகத்தில்…

Read More

12 இந்திய மீனவர்கள் கைது

அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் நேற்றைய தினம் (10) கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. இவர்கள் பயணித்த இரண்டு இழுவை படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதானவர்கள் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர்.

Read More

இனி பிரதமரிடம் நேரடியாக கேள்வி கேட்கலாம்!

ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பாராளுமன்ற அமர்வுகளின் போது, அரை மணிநேரம் பிரதமரிடம் நேரடியாக உறுப்பினர்கள் தமது கேள்விகளை கேட்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இலங்கை தேசியக் கொடியை மாற்ற கோரிக்கை

இலங்கையின் தேசியக் கொடி மாற்றப்பட வேண்டும் என மகளிர் அமைப்பு ஒன்று கோரியுள்ளது. அக்கொடியில் சிங்கத்தின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது வன்முறையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது எனும் கருத்து, மன்னாரில் நடைபெற்ற புதிய அரசியல் சாசனம் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இலங்கையில் புதிய அரசியல் சாசனத்தை ஏற்படுத்துவது தொடர்பான மக்கள் கருத்தறியும் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் மன்னாரில் நடைபெற்ற கூட்டமொன்றில் பெண்கள் நலன்கள் மற்றும் மேம்பாட்டுக்கென சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செயல்படக் கூடிய ஆணைக்குழுவொன்றை ஏற்படுத்த புதிய அரசியல்…

Read More