Headlines

மஹிந்தவை புகழ்கின்றார் மைத்திரி

பத்து வருடங்களாக அரச அதிகாரத்தில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவே தற்போது எம்.பி. பதவியை ஏற்று சாதாரணமாக இருக்கிறார். அவ்வாறான நிலையில் அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சுகளை ஏற்பதில் என்ன பிரச்சினை உள்ளது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பினார். இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான பதவி நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்  மேலும் தெரிவிக்கையில், அமைச்சுப்…

Read More

தலைமன்னார் – இராமேஸ்வரம் பாலம் குறித்து மோடி ஆராய்வு

இலங்கையின் தலைமன்னாரையும் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும் தரை வழியாக இணைக்கும் பாலத்தை அமைக்கும் திட்டம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்களுடன் நேற்றுமுன்தினம் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இந்தியாவின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பாக, பெரும் தொழில் நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், வங்கிகளின் அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள், அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் தரைவழி…

Read More

சஷிந்ர ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருகை

ஊவா மாகாண  முன்னாள் முதலமைச்சர் சஷிந்ர ராஜபக்ஷ தற்போது விசாரணைக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச காணியில் நிர்மாணம் மேற்கொள்ளல் மற்றும் காணி விடயத்தில் முறையான விதிமுறைகளை கடைபிடிக்காமை தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்பேன்

யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட பல்­லா­யி­ரக் ­க­ணக்­கான சிறு­வர்­களின் வாழ்­வா­தா­ர த்தை மேம்­ப­டுத்த வேண்­டிய பொறுப்பு எனக்கு புதிய அமைச்சின் மூலம் வழங்­கப்­பட்­டுள்­ளது. எனவே இந்­தப்­ப­ணி­யினை உரிய வகையில் நான் மேற்­கொள்­வ­துடன் தேசிய ரீதி­யிலும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்பேன் என்று சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்தார். இராஜாங்க அமைச்சராக அவர் செய்தியா ளர்களிடம் உரையாற்றுகையிலேயே இவ் வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, யுத்­தத்தில் தாய், தந்­தை­யரை இழந்த ஆயி­ரக்­க­ணக்­கான சிறு­வர்கள் சிறுவர் இல்­லங்­களில் வாழ்ந்து…

Read More

யாழ்.பல்கலையில் பதற்றம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் இரு மாணவக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்.பல்கலையின் சிரேஷ்ட மாணவர்களுக்கும் கனிஷ்ட மாணவர்களுக்கும் இடையில் இன்று  காலை இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து அவ்விடத்திற்கு  கோப்பாய் பொலிஸார் விரைந்து சென்ற போதும், பல்கலைக்கழக வளாகத்திற்குள் செல்ல பொலிஸாருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும்இ நிலமை தொடர்பில் பொலிஸார் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

பிரதி அமைச்சு பதவியை, நிராகரித்த அரசியல்வாதி

மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துடன் இணைந்து கடமையாற்றத் தாம் தயாரில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால கம்லத் தெரிவித்துள்ளார். இதேவேளை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சுப் பதவி சிறிபால கம்லத்திற்கு வழங்கப்படவிருந்தது. நேற்று நடைபெற்ற பதவிப் பிரமாண நிகழ்வுகளில் கம்லத் பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

ஒலுவில் பிரதேசத்தில், பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு

-Muhajireen Buhary- ஒலுவில் பிரதேசம் கடலரிப்பினால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதை அரசாங்கத்தினதும் அரசியல்வாதிகளினதும் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில்  வெள்ளிக்கிழமை (11) ஒலுவிலில் மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளன. ஒலுவிலுள்ள பள்ளிவாயல்களின் நிருவாக சபைகள், சமூக சேவை அமைப்புக்கள், பொது நிறுவனங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் போன்றன ஒன்றிணைந்து ஒழுங்கு செய்துள்ள இவ்வார்ப்பாட்டப் பேரணி, ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து பி.ப. 1.15 மணியளவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. ஒலுவில்…

Read More

‘105 பயணிகளின் உயிர் காக்கப்பட்டது’

விமானியின் சாமர்த்தியத்தால் 105 பயணிகள் காப்பாற்றப்பட்ட சம்பவமொன்று சென்னையில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி வருமாறு, இலங்கையில் இருந்து 105 பயணிகளுடன் நேற்று இரவு விமானம் ஒன்று சென்னைக்கு புறப்பட்டு வந்தது. இன்று அதிகாலை 2.30 மணியளவில் அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க முயன்றது. அப்போது விமானத்தின் சக்கரத்தில் பழுது ஏற்பட்டிருப்பதை விமானி கண்டு பிடித்தார். இதையடுத்து மிகவும் லாவகமாக அந்த விமானத்தை தரை இறக்கினார். விமானியின் சாமர்த்தியத்தால் சக்கரம்…

Read More

சீனி, உருளைக்கிழங்கு இறக்குமதி வரி அதிகரிப்பு

இன்று முதல் அமுலாகும் வகையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் சீனிக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் கிலோ ஒன்றுக்கான வரி ரூபா 10 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, இறக்குமதி செய்யப்படும் சீனியின் கிலோ ஒன்றுக்கான வரி ரூபா 12 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய உற்பத்தியாளர்களின் உற்பத்திகள் சந்தையில் கிடைப்பதாலும் அவர்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும்…

Read More

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரி உட்பட பலர் விபத்தில் பலி

மினுவாங்கொட, யாகொடமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு அதிகாரி உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பஸ்கள் மற்றும் ஜீப் ஒன்றுடன் ஒன்று மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த ஐவர் இதுவரை கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

முழு பாரா­ளு­மன்­றத்தையும் அர­சாங்­க­மாக மாற்­ற­வுள்ளோம் – பிரதமர்

புதிய பாரா­ளு­மன்­றத்தில் அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள் மற்றும் பிரதி அமைச்­சர்கள் தமக்கு வரும் கேள்­வி­க­ளு க்கு பதில் அளிக்கும் வகையில் கட்­டா யம் பாரா­ளு­மன்ற ஆச­னத்தில் அமர்ந்­தி­ரு க்க வேண்டும். இதற்­கான விசேட கட்­ட­மைப்­பினை நாம் கொண்டு வர­வுள்ளோம். இதன்­ பி­ர­காரம் அமைச்­சர்­க­ளுக்­கான வெளிநாட்டு பய­ணங்­க­ளையும் மட்­டுப்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். மோதிக் கொண்­டி­ருந்த இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒன்று சேர்ந்­துள்­ளன. இது நாட் டின் வர­லாற்று புரட்­சி­யாகும். மேலும் நாட்டின் அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும்…

Read More

பாகிஸ்தான் நான்கு துண்டுகளாக்கப்படும் – சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக இந்­தியா யுத்­தத்தை பிர­க­ட­னப்­ப­டுத்­தாது. ஆனால், இந்த முறை யுத்தம் நடந்தால் பாகிஸ்­தானை இந்­தியா 4 நாடு­க­ளாக பிள­வு­ப­டுத்­தி­விடும் என்று பா.ஜ.க.தலை­வர்­களில் ஒரு­வ­ரான சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார். ஜம்மு – காஷ்மீர் எல்லைப் பகு­தியில் கன­ரக ஆயு­தங்­க­ளுடன் பாகிஸ்தான் தொடர்ச்­சி­யாக தாக்­கு­தலை நடத்தி வரு­கி­றது. இந்த நிலையில் இந்­தியா- , பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் இந்­தி­யா­வுக்­குதான் பேரி­ழப்பு ஏற்­படும் என்று பாகிஸ்தான் இராணுவ தலைமை தள­பதி ரஹீல் ஷெரீப் மிரட்டல் விடுத்­துள்ளார். இது தொடர்­பாக…

Read More