Headlines

இஸ்லாத்தை அவமதித்த ஞானசாரக்கு எதிராக வழக்கு

பொது பல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக, கொழும்பு குற்றவியல் பிரிவினால் இன்றைய தினம் (09) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இஸ்லாம் மற்றும் புனித பரிசுத்த அல்குர்ஆன் குறித்து அவதூறாக பேசியதாக, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2014, ஏப்ரல் 12 ஆம் திகதி கொழும் 02, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக குறித்த அவதூறான அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

மாடுகளை பிடிக்கும் நடவடிக்கையில் காத்தான்குடி பொலிஸார்

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நாளாந்தம் ஏற்படும் வீதி விபத்துக்களை தடுக்க காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவினால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக காத்தான்குடி நகர சபை, ஆரையம்பதி பிரதேச சபை ஆகிய எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் அலைந்து திரியும் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களில் மேற்படி நகர சபை, பிரதேச சபை…

Read More

எனது ஓய்வூதியப் பணம் ரூபாய் 25,000!- சந்திரிக்கா

தான் முதல் பெற்ற ஓய்வூதியப் பணம் ரூபாய் 25,000- என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சரவை அங்கீகாரத்தின் அதிகரிப்பு ஓய்வூதிய பணமான ரூபாய் 98,500 ற்கு முதல் தான் மாதாந்த ஓய்வூதிய தொகையாக 25,000 ரூபாயையே பெற்று வந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் சம்பளப் பணமாக ரூபாய் 25.000த்தை தான் முதன்முதலில் 1994ம் ஆண்டு பெற்றுக்கொண்டதாகவும், அத்தொகையில் எவ்வித அதிகரிப்பும் 2005 ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளவில்லை என்றும் அமைச்சர்களின்…

Read More

ஒருபோதும் கருணை காட்டமாட்டேன்! ஜனாதிபதி திட்டவட்டம்

ஊழல், மோசடிக்காரர்கள் மற்றும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் எவருக்கும் நான் கருணை காட்டமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்டம் “லக்கலை” பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டை கட்டியெழுப்புவதற்கு இன்று அனைவரும் இணைந்த அரசாங்கமாக முன்னோக்கிச் செல்கின்றோம். ஊழல் மோசடிகள், சட்டவிரோதமான செயற்பாடுகள் அனைத்தையும் இல்லாதொழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கும். எவரும் என்னை சந்தேகிக்க முடியும்….

Read More

கம்மன்பிலவின் மனைவி ஆணைக்குழு முன்னிலையில்

பிவிதுறு ஹெல உறுமயவின் செயலாளர் உதய கம்மன்பிலவின் மனைவி தில்ருக்ஷி கம்மன்பில, ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று(9) பிரசன்னமாகியுள்ளார். இன்னும், அவுஸ்திரேலிய பிரஜையொருவருடன் கம்மன்பில மேற்கொண்டதாக கூறப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சாட்சி கையொப்பமிட்டமைக்காகவே அவரிடம் இன்று விசாரணைகள் நடாத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

ஒரு தாயின் கண்ணீர்

புதிய காத்தான்குடி 01 அஷ்_ஷஹீட் மஃறூப் வீதியில் வசிக்கும் முஹம்மட் ஜெம்ஸாத் வயது 17 என்பவர் நுரைஈரல் சுவாச நோயினால் பாதிக்கப் பட்டு இருபது நாற்களாக மட் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வெலிசலை (நூரைஈரல்) வைத்தியசாலைக்கு அனுப்ப்பட்டு அங்கு சுமார் 10 நாட்களின் பின்னர் அவரைப் பரிசோதனை செய்த செய்த வைத்தியர் உடனடியாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் அதற்கான செலவுகள் 10 இலட்சங்களாகுமென்றும் 6 இலட்சம் ரூபாய்கள் உடனடியாக ஏட்பாடு செய்யுமாறு…

Read More

நாளை மதுபானசாலைகள் பூட்டு

தீபாவளியை முன்னிட்டு நாளைய தினம் நுவரெலியா மாட்டத்தில்  உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

வாகன விபத்தில் 06 வயது சிறுமி பலி

முச்சக்கர வண்டி விபத்தில் ஆறு வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார். பழைய காலி வீதி மொரட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று எதிர் திசைக்கு திரும்பும் போது முச்சக்கர வண்டியில் இருந்து சிறுமி வெளியே விழுந்துள்ளார். இதன் போது முச்சக்கர வண்டி சிறுமியின் மீது விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடுமையான காயங்களுக்குள்ளான சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார்…

Read More

சோபித தேரரின் உடலுக்கு மக்கள் அஞ்சலி

மறைந்த கோட்டை நாக விகாரையின் விஹாராதிபதியும் சமூக நிதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான மாதுலுவ சோபித தேரரின் உடல் இன்று மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இதன்படி இன்று காலை 09.00 மணிமுதல் 12ம் திகதி நண்பகல் 12.00 மணிவரை கோட்டை நாக விகாரையில் அன்னாரின் உடலுக்கு பொது மக்கள் இறுதி மரியாதை செலுத்த முடியும்.

Read More

அமைச்சர் திலக் மாரப்பன அமைச்சுப் பதவியை ராஜினாமா BREAKINGNEWS

சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தனது அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Read More

பீ.ஜே வருகையை தடுத்து நிறுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா­அத்தின் தலை­வரும் பிர­பல தென்­னிந்­திய இஸ்­லா­மிய பிர­சா­ர­க­ரு­மான பி.ஜே.என்­ற­றி­யப்­படும் பி.ஜெய்­னு­லாப்­தீனின் இலங்கை விஜயம் இறுதி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இது விட­யத்தில் தமக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தவ­றான தக­வல்­களை முன்­வைத்து அவ­ரது வரு­கையை தடுத்து நிறுத்­தி­ய­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ள­தா­கவும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தெரி­வித்­துள்­ளது. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்­பாட்டில் கொழும்பு சுக­த­தாச உள்­ளக அரங்கில் நேற்று மாலை நடை­பெற்ற அல்­குர்ஆன் சிங்­கள மொழி­பெ­யர்ப்பு வெளி­யீட்டு நிகழ்வில் கலந்து…

Read More