Headlines

சோபித தேரரின் பதவிக்கு தம்பர அமில தேரர்

நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்த மாதுளுவாவே சோபித தேரர் அண்மையில் காலமானதை அடுத்து, அந்த பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது. மாதுளுவாவே சோபித்த தேரரினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை அவ்வாறே முன்னெடுக்குமாறு நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் நிறைவேற்று குழு, தம்மர அமில தேரரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், நிறைவேற்றுக் குழுவிற்கும்…

Read More

2016 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணைத் திகதிகள் வௌியீடு!

எதிர்வரும் 2016 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை முறைகள் மற்றும் திகதிகள் கல்வியமைச்சினால் வௌியிடப்பட்டுள்ளன. அவ்வகையில் அனைத்து தமிழ் , சிங்கள பாடசாலைகளுக்கும் முதல் தவணைக்காக பாடசாலைகள் ஜனவரி 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதியுடன் முடிவடையும். முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதல் தவணை ஜனவரி மாதம் 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதியளவில் முதல் தவணைக்காக பாடசாலை மூடப்படும். அதனையடுத்து அனைத்து சிங்கள தமிழ் பாடசாலைகளுக்கான…

Read More

நிறைவேற்றதிகாரத்தை ஒழிக்க அமைச்சரவை அங்கிகாரம்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கும், புதிய தேர்தல் முறைமையினை அறிமுகப்படுத்துவதற்குமான அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இந்த அமைச்சரவைப் பத்திரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Read More

காம்புடன் காணப்படும் கோழிமுட்டை!

– வத்துகாமம் நிருபர் – அவி­சா­வளைப் பகு­தியில் உள்ள  கோழி வளர்ப்பு நிலையம் ஒன்றில் கோழி ஒன்று இட்ட முட்­டையில் காம்பு  காணப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது. அவி­சா­வளை, வில­உட துன்­போ­வில என்ற இடத்தைச் சேர்ந்த ஒரு­வ­ரது கோழிப் பண்­ணையில் உள்ள ஒரு கோழியே இவ்­வாறு காம்­புடன்  கொண்ட முட்­டையை இட்­டுள்­ளது.

Read More

தடாகம் கலை இலக்கிய வட்டம் நடாத்தும் கௌரவிப்பு விழா

– அஸ்ரப் ஏ சமத் – தடாகம் கலை இலக்கிய வட்டம் நடாத்தும் கௌரவிப்பு விழாவும் கவிதைத் தொகுதி  மற்றும் குறுந்திரைப்படம் வெளியீட்டு விழாவும் எதிர்வரும் சனிக்கிழமை (21) நவம்பா் 2015 காலை 10.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் பதியுதீனும் கௌரவ அதிதியாக  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மானும் கலந்து கொள்வாா்கள். முதல் பிரதி பெறுபவர்  கவிஞா் ஜங்கரன் கதிா்காமநாதன் என்பதும் குறிப்பிடத்தக்கது . புத்தளம் …

Read More

இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகுவை கைது செய்ய ஸ்பைன் நீதிமன்றம் உத்தரவு …!

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவை கைது செய்யுமாறு, ஸ்பானிஷ் நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்துள்ளது! இந்தத் தகவலை எந்தவொரு மேற்கத்திய ஊடகமும் தெரிவிக்கவில்லை!  2010 ம் ஆண்டு, நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, காஸா நோக்கி சென்று கொண்டிருந்த Freedom Flotilla என்ற கப்பலை வழிமறித்த, இஸ்ரேலிய படையினர் அதன் மீது தாக்குதல் நடாத்தினார்கள். அது தொடர்பான வழக்கு விசாரணையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி Jose de la Mata, பெஞ்சமின் நெத்தன்யாகு உட்பட ஆறு இஸ்ரேலிய அரச…

Read More

பாரீஸில் மீண்டுமொரு தாக்குதல்: பொலிஸ் அதிகாரி பலி (Breaking news)

பாரீஸில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையின் போது துப்பாக்கி சண்டை ஏற்பட்டு உள்ளது. இதில் போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்து ஒருவர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 6 இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 129 அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைப்படை தீவிரவாதிகள் 8 பேரும் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாதிகள் அனைவரும் அண்டை நாடான பெல்ஜியத்தில் உள்ள தீவிரவாதிகளின் உதவியுடன் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று…

Read More

கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது அவன்ட்கார்ட்! 4 நாட்களில் 8 கோடி ரூபா வருமானம்

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் பணிகள் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் நான்கு நாட்களில் எட்டு கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின, அண்மையில் அவன்ட்கார்ட் நிறுவனத்தின் பணிகள் கடற்படையினரிடம் ஒப்படைத்திருந்தார். தேசியப் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளிநாட்டு கப்பல்களுக்கு ஆயுதங்களை வழங்குதல் மற்றும் களஞ்சியப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளின் மூலம் கடற்படையினர் எட்டு கோடி ரூபா வருமானம் ஈட்டியுள்ளனர். கடந்த நான்கு நாட்களில் இவ்வாறு வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ்ட் அட்மிரல் ரவிந்திர…

Read More

புத்திஜீவிகள் குழுக்களை அமைப்பதற்கு தீர்மானம்

ஐ.நா.தீர்மானத்துக்கு அமைய பொறுப்பு கூறல் மற்றும் உண்­மையை கண்­ட­றியும் பொறி­முறையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது குறித்து கருத்­துக்­களை கேட்­ட­றிந்து கொள்­வ­தற்­கான புத்­தி­ஜீ­விகள் குழுக்­களை அமைப்­ப­தற்கு சர்­வ­கட்சி தலை­வர்கள் கூட்டத்தில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 30 ஆவது கூட்­டத்­தொ­டரில் மேற்­கொள்­ளப்­பட்ட இலங்கை தொடர்­பி­லான தீர்­மானம் நாட்டின் இறை­யாண்­மைக்கு உட்­பட்டே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­மென ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சுட்­டிக்­காட்­டினார். நாட்டின் கௌரவம் பாது­காக்­கப்­படும் வகையில் ஐ.நா. பரிந்­து­ரைகள் தொடர்­பி­லான தீர்­மா­னங்கள் எடுக்­கப்­ப­டு­மெ­னவும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார். ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள்…

Read More

புலம்பெயர்ந்தோரின் ஒத்துழைப்பு தேவை

இன­வாதம், மத­வாதம் உள்­ளிட்ட நாட்டில் காணப்­பட்ட பல தரப்­பட்ட பிரச்­சி­னை­களின் கார­ண­மாக நாட்டை விட்டு புலம்­பெ­யர்ந்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்­க­ள­வர்கள் அனை­வரும் மீளவும் நாட்­டிற்கு வருகை தர­வேண்டும். மேலும், புலம்­பெ­யர்ந்­த­வர்கள் அனை­வரும் இலங்­கையின் புதிய மாற்றம் நோக்­கிய பய­ணித்­திற்கு பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்­க­வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அழைப்பு விடுத்தார். ஜன­வரி 8 ஆம் திகதி பின்னர் புதிய அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்டுவரும் முழு பாரா­ளு­மன்­றத்­தையும் அர­சாங்­க­மாக மாற்­று­வது உள்­ளிட்ட அனைத்து நல்­லாட்சி வேலைத்­திட்­டங்­க­ளுக்கும் ஐக்­கிய நாடு­களின்…

Read More

கொட்டாவி விட்டவருக்கு 8 மாத சிறைத்தண்டனை!

நீதவான் வழக்கை விசாரணைக்கு உட்படுத்தி கொண்டிருந்தபோது பெரிய சத்தத்தில் கொட்டாவி விட்டவருக்கு எட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அறைக்குள் கொட்டாவி விட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட இமேஷா வசந்த என்பருக்கே இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கல்கிஸை பிரதான நீதவான் மொஹமட் சாஹாப்தீன், அவருக்கு எட்டுமாதங்கள் கட்டாய சிறைத்தண்டனை விதித்தார். மேலும், ஹெரோய்ன் வழக்கொன்றின் சந்தேக நபராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

வசதிபடைத்தவர்களுக்கு வரி அதிகரிப்பு! பொருட்கள் மீதான வரிகுறைப்பு

எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வசதிபடைத்தவர்களுக்கான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படவுள்ளன. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு நெருக்கமான தரப்புகளிலிருந்து இது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. வசதி படைத்த செல்வந்தர்கள் இதுவரை காலமும் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வரியை ஏமாற்றி மோசடி செய்வதன் ஊடாக பெரும் வரி இழப்பை ஏற்படுத்தி வந்துள்ளார்கள். இதனைக் கருத்திற் கொண்டு அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தில் புதிய வரிகள் ஊடாக அவர்களிடமிருந்து உரிய வரிகளை அறவிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதே…

Read More