Headlines

புரட்சி இன்னும் முடிவுக்கு வரவில்லை ; பிரதமர்

ஜனாதிபதி தேர்தலின்  பின்னர் ஆரம்பிக்கப்பட்ட புரட்சி இன்னமும்  முடியவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற தேசிய இளைஞர் முன்னணியின் சம்மேளனத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிப்பதி தேர்தலின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட புரட்சி இன்னமும் முடியவில்லை. இந்நாட்டு இளைஞர், யுவதிகளுக்கு தெளிவான எதிர்காலமொன்றை உருவாக்கிக் கொடுப்பதே இந்நாடு எதிர்கொண்டுள்ள பாரியதும் முதன்மையானதுமான பிரச்சினையாகும். வெளிநாட்டு முதலீடுகளை நம்…

Read More

சிறுநீரக மாற்று, சத்திர சிகிச்சைக்கு நிதியுதவி கோரல்

கற்பிட்டி மேட்டுதெருவில் வசிக்கும் சகோதரர் N. Jamsy அன்மைக்காலமாக அவரது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட்ட நிலையில் சிகிச்ச்கிபெற்று வருகிறார். இவரது இரு சிறுநீரகங்களும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையால், உடனடி சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் சிபாரிசு செய்துள்ளனர். இவருடைய சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையை அல்லாஹ்வின் துணையால் வெற்றிகரமாக செய்து முடிக்க சுமார் ரூபா. 25 இலட்சத்திற்கும் மேற்பட்ட பணம் தேவைப்படுவதனால் அதனை அவரது குடும்பத்தினரால் மாத்திரம் ஈடுசெய்ய முடியாதுள்ளது. ஆதலால் அன்பர்கள், நண்பர்கள்,…

Read More

சவூதி மன்னர் சல்மானினால் DR ஜாகிர் நாயக் கெளரவிப்பு!

ரியாத்தில் இடம்பெற்ற கிங் பைசல் விருது வழங்கும் விழாவில் சவூதி மன்னர் சல்மான் இப்னு அப்துல் அஜிஸ் அவர்களினால் இந்தியாவை சேர்ந்த DR ஜாகிர் நாயக்கிற்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்! இதன் போது 24 கேரட் கொண்ட 200 கிராம் தங்க பதக்கம், மற்றும் 750,000 சவூதி ரியால்கள் (இந்திய மதிப்பில் ஒரு கோடி 21 லட்சம் ) மற்றும் அரபி மொழியில் எழுதப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது. DR ஜாகிர் நாயக் (Islamic Research Foundation) இஸ்லாமிய…

Read More

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தின் மீது தற்கொலைப் படை தாக்குதல்

காபூலில் உள்ள ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தின் மீது தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு நான்கு குண்டுகள் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தற்கொலைப் படை தாக்குதலில் உயிர் சேதம் குறித்து எந்தவித தகவல்களும் இல்லை.

Read More

கடல் பிளந்த உண்மை சம்பவத்தின் அதிர்ச்சி தரும் தடயங்கள் கண்டுபிடிப்பு – (முழுவதையும் படித்து பாருங்க)

மூஸா (அலை) அவர்களும் அவரின் கூட்டத்தினரும் பிரவ்னின் கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்கு செங்கடல் வழியாக வெளியேறியதும், மூஸா (அலை) அவர்களின் கூட்டத்திற்கு மாத்திரம் இரண்டாக பிளந்து வழிவிட்ட கடல் பிரவ்னின் கூட்டத்தை முழ்கடித்ததும் நாம் அறிந்ததே!! இது குரானின் அத்தாட்சியாகும். செங்கடல் என்பது பல நூறு மைல்கள் நீளமானதும் எண்ணைதாங்கி கப்பல்கள் பயணம் செய்யும் அளவு ஆழமான கடல். எகிப்து முதல் எதியோப்பியா வரையான நாடுகளின் கிழக்கு எல்லையாகயும், சவூதி அரேபியா, ஏமன் போன்றவற்றின் மேற்கு எல்லையாகவும்…

Read More

அரசியல் இலாபங்களை எவரும் பார்க்கக் கூடாது – றிஷாத் பதியுதீன்

மாணவ சமூகத்திற்கான கல்வியினை பெற்றுக் கொடுக்கின்றபோது அதில் அரசியல் இலாபங்களை எவரும் பார்க்கக் கூடாது, கடந்த அரசாங்கத்திலும் அமைச்சராக இருந்ததன் படியால் இந்த மாவட்டத்தின் பல்வேறு பாடசாலைகளுக்கு மஹிந்தோதய ஆய்வு கூடங்களை கொண்டுவர முடிந்தது என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான  றிஷாத் பதியுதீன் இதன் மூலம் பிரதேசத்தின் கல்வி துறை போட்டித்தன்மைக் கொண்டதாக மாறும் என்றும் கூறினார். மன்னார் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட காக்கையன்குளம் மஹா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்தோதய ஆய்வு…

Read More

மைத்திரி படுகொலை முயற்சி வழக்கின் தீர்ப்பு இன்று

பொலன்னறுவையில் வைத்து முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் வகையில் குண்டுத் தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கு விசாரணை மீதான தீர்ப்பு இன்று (22) வழங்கப்படும். 2000 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரொருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை கடந்த 15 வருடங்களாக நடந்துவந்தது. இதன் மீதான தீர்ப்பே இன்று வழங்கப்படுகிறது. பொலன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி…

Read More

சீனாவில் முஸ்லிம்கள் ரமழான் நோன்பிருக்க தடை!

சீனாவிலேயே முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சின்ஜியாங் மாகாணத்தில் ரமழான் நோன்பு பிடிக்க  தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மற்றும் இணைய தளங்களில் அறிக்கை ஒன்றை சின்ஜியாங் மாகாண நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் நோன்பு மற்றும் பிற மத நடவடிக்கைகளில் பங்கேற்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. சின்ஜியாங் மாகாணத்தின் உள்ளூர் நிர்வாகம் அரசு ஊழியர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்ற காரணத்தைக் கூறி ஏற்கனவே இஸ்லாமிய மக்களை ரமழான் நோன்பிலிருந்து விலகி…

Read More

முதியோர் மற்றும் முடியாதோர் இனி இலகுவாக ஹஜ் ,உம்ரா!

அல்லாஹ்வுடைய அபய பூமியும், உலக முஸ்லிம்களின் புனித பூமியுமான காபா ஆலயத்திற்கு உலகம் முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான மக்கள் புனித உம்ரா பயணத்திற்காக செல்கிறார்கள். அவ்வாறு செல்லக்கூடிய மக்களில் வயது முதிர்ந்தவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் உம்ரா செய்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால் அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் சவூதி அரேபிய அரசின் சார்பில் நான்கு சக்கர புதிய வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாகனத்தில் அமர்ந்த படியே புனித உம்ரா கடமையை நிறைவு செய்யலாம், புதிய வாகனத்தை மக்காவின் தலைமை…

Read More

இரண்டரை வயதுக் குழந்தை நீரில் மூழ்கி மரணம்

அப்துல்லாஹ் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை – பாவற்கொடிச்சேனையில் ஞாயிறு பிற்பகல் இரண்டு வயது குழந்தையொன்று வாய்க்காலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது. ஏறாவூர், ஐயங்கேணியை சேர்ந்த கிருஸ்ணகுமார் சமிற்றா (இரண்டரை வயது) எனும் பெண்குழந்தையே உயிரிழந்துள்ளது. ஏறாவூர் ஐயன்கேணியில் இருந்து உன்னிச்சை பாவற்கொடிச்சேனைக்கு உறவினர்களிடம் வந்திருந்த வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாய்க்காலுக்கு அருகில் உறவினர்களது வீடு இருந்ததாகவும் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை அருகிலிருந்த வாய்க்காலில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். குழந்தையின் சடலம்…

Read More

சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பின்றி 20 திருத்தம் – பிரதமர் உறுதி

அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கொண்டு வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களிடம் நேற்று உறுதியளித்தார். 20வது திருத்தம் குறித்த அதிருப்தி களை இச்சந்திப்பில் கலந்து கொண்ட சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர். இதன் போதே தன்னை சந்தித்த சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளிடமே பிரதமர் இந்த உறுதிமொழியை வழங்கினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அமைச்சர் ரிசாட் பதியுதீன், தமிழ்த்…

Read More

சிங்கள வாக்குகளால் மட்டும் அரசமைக்க முடியாது – ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோ அல்லது வேறு எந்த கட்சியாகவிருந்தாலும் வெறுமனே சிங்கள பெளத்த வாக்குகளால் மட்டும் அரசாங்கமொன்றை அமைத்துவிட முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரி வித்தார். அதற்கமைய அரசாங்கமொன்றை நிறுவ வேண்டுமாயின் சிங்கள பெளத்த, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து இன மக்களினதும் வாக்குகள் அவசியமென்றும் அவர் கூறினார். நுவரெலிய மாவட்டத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளை ஜனாதிபதி நுவரெலிய புதிய நகர சபை மண்டபத்தில் நேற்று சந்தித்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தனியாக முன்னணி…

Read More