Headlines

இந்த இருவரும், அவசர உதவி கேட்கின்றனர்

ஜின்னாபுரம் ஆலங்குடா ஏத்தாளையில் வசித்துவரும் ஏ.எஸ்.கபூர் என்பவரின் இரு மகள்களான பாத்திமா றிகாஸா வயது 12, பாத்திமா றிமாஸா வயது 02 ஆகிய இருவரும் லியுகோமியா நோயினால் பீடிக்கப்பட்டு மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதற்கான சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள 25 இலட்சம் ரூபா செலவாகும் என மதுரை வைத்திய  நிபுணர் சிபார்சு செய்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன் இப்பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதுடன், வறுமைக் கோட்டில் வாழும் இவர்களின் தந்தை முச்சக்கரவண்டி ஓட்டி தனது குடும்பத்தை…

Read More

அம்பாறையில் அ.இ.ம.காவின் வாக்குகள்: புலனாய்வுப் பிரிவின் இரகசிய தகவல் கசிவு

முகம்மட்; அன்சார் – இறக்காமம் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முதன் முறையாக களமிறங்கவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆரம்ப கட்ட மக்கள் செல்வாக்கு சுமார் 25 ஆயிரம் என  புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரியவருகின்றது. புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அரசியல் விவகாரத்தை கையாளும் பிரிவின் அதிகாரி ஒருவர் தனக்கு நெருக்கமான ஒருவரிடம் இந்த தகவலை ஊர்ஜிதப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதன் பிற்பாடு குறிப்பாக 1994ம் ஆண்டுகளுக்கு பின்னர் முகாவின் அசைக்க முடியாத…

Read More

கல்பிட்டி பகுதியில் கிணற்றில் விழுந்து குழந்தை பலி

புத்தளம் – கல்பிட்டி  பகுதியில் குழந்தை ஒன்று வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவத்தில் 5 வயதுடைய குழந்தை  உயிரிழந்துள்ளது.  சடலம் பிரேத பரிசோதனைகளை அடுத்து தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read More

பொன்சேகா வேட்புமனு தாக்கல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி  தனித்து போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

UPFA யில் போட்டியிட கைச்சாத்திட்ட விமல், வாசுதேவ, பந்துல, டலஸ் அழகப்பெரும..

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கொழும்பு மாவட்ட குழுத் தலைவராக சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பொதுச் செயலாளரும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளருமான சுசில் பிரேமஜயந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவில் கைச்சாத்திடுகின்றமை குறிப்பிடத்தக்கது. மகாவலி கேந்திரத்தில் இந்நிகழ்வு இடம்பெறுகிறது. இதுவரை விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, பந்துல குணவர்தன, டலஸ் அழகப்பெரும…

Read More

இது ஜனாதிபதி,மைத்திரியின் சாபம்

பொது மக்களின் சொத்துக்களை கொள்ளையிடுவோர் மறு ஜென்மத்தில் காகங்களாகவும், நாய்களாகவும் பிறப்பார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொல்பொருள் திணைக்களத்தின் 125ம் ஆண்டு பூர்த்தி நிகழ்வினை முன்னிட்டு இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மக்களின் சொத்துக்களை கொள்ளையிடுவோர் மறு ஜென்மத்தில் நாய்கள், காகங்களாக பிறப்பார்கள் என நிசங்கமல்ல ஆட்சிக் கால ஓலைச் சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஓலைச் சுவடி இன்றைக்கும் பொருத்தமானது என கருதுகின்றேன். இதனால் குறித்த ஓலைச் சுவடியை அரசாங்க…

Read More

இலங்கைக்கு மீண்டும் ஜி. எஸ். பி. வரிச்சலுகை

இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு பிரிட்டன் மீண்டும் ஜி. எஸ். பி. வரிச்சலுகையை வழங்கத் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. 2015 ஜுலை முதல் இது நடைமுறைக்கு வருவதுடன் ஏற்கனவே 2013 ஜுலை நிறைவு பெற்றிருந்த காலத்திலிருந்து 2015 வரையில் ஏற்றுமதி செய்த பொருட்களுக்கும் ஜீ. எஸ். பீ. வரிச் சலுகையை பெற்றுக்கொடுக்க பிரிட்டன் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே தெரிவித்தார். நேற்று வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் விளக்கமளித்த…

Read More

பிரசன்னவுக்கு வேட்புமனு கிடைக்காவிட்டால்; தனியாக கேட்பேன் – மஹிந்த

-அஸ்ரப் ஏ சமத்- கம்பஹா மாவட்டத்தில் பாரளுமன்றத் தோ்தலில் போட்டியிருந்த மேல் மாகாண முதலமைசசா் பிரசன்ன ரனதுங்கவின் பெயரை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நீக்கியமைக்கு எனது எதிா்ப்பைத் தெரிவிக்கின்றேன். மீண்டும் பிரசன்ன ரனதுங்கவின் பெயா் உள் வாங்கப்படல் வேண்டும். இல்லாவிட்டால் எனது அணியிடன் வேறாக கேட்பேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளாா். பிரசன்ன ரணதுங்கவின் 2 சகோதரா்கள் ஏற்கனவே கம்பஹாவில் தோ்தல் குதிக்கின்றனா் பிரசன்ன ஏற்கனவே முதலமைச்சா்ராக இருப்பதால் சந்திரிக்கா அவரின்…

Read More

விரலிக்காய்களை, சாப்பிட முற்பட்ட 3 மாணவர்களை தாக்கிய நபர்  

(க.கிஷாந்தன்) மரத்திலிருந்து விழுந்த விரலிக்காய்களை பொறுக்கி சாப்பிட முற்பட்ட மூன்று மாணவர்களை தாக்கிய நபர் ஒருவரை லிந்துலை பொலிஸார் கைது செய்துள்ளனர். லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் 6ஆம் தரத்தில் கல்வி கற்கும் 3 மாணவர்கள் இன்று  பிற்பகல் 2 மணியளவில் பாடசாலை முடித்து வீட்டுக்கு செல்லும் வழியில் வீடு ஒன்று முன்பாக இருந்த மரத்தில் இருந்து விழுந்து கிடந்த விரலிக்காய்களை சாப்பிடுவதற்காக அவற்றை பொறுக்கியபோது குறித்த வீட்டில் இருந்த உரிமையாளர்…

Read More

இந்தோனேஷியாவில் உள்ள இலங்கையர்களின் கவனத்திற்கு..!

இந்தோனேஷியாவில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்தால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிவிவகார அமைச்சு தயாராகவுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- ஜூன் 10 ம் திகதி கிடைத்த அறிவித்த லுக்கிணங்க இந்தோனேஷிய தீவொன்றில் 54 பேர் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். இவர்கள் இலங்கையர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் அகதிகளாகத் தஞ்சமடைந்தவர்களாவர். ஐ. நா. வின் தஞ்சமடைந்தோருக்கான அடையாள…

Read More

‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ வாசகம் பொலிசாரால் அகற்றல் – மாத்தளையில் கொடூரச் சம்பவம்

மாத்தளை கொட்டகொட பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் குடும்பம் ஒன்று நேற்று  மாத்தளை நகருக்கு பொருட்களை கொள்வனவு செய்ய முச்சக்கர வண்டியில் வந்த போது மாத்தளை பழைய போலிஸ் நிலைய கட்டிடத்தில் இயங்கி வரும் போலிஸ் பிரிவை சேர்ந்த சில காவல் துறையினர் குறித்த குடும்பத்தினர் சென்ற முச்சக்கரவண்டியை நிறுத்தி பின் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த “லா இலாஹ இல்லால்லாஹ் ” என்ற ஸ்டிக்கரை பலாத்காரமாக அகற்றி உள்ளனர். அத்துடன் அங்கு சிவில் உடையில் இருந்த உத்தியோகத்தர் ‘இது அராபிய நாடு அல்ல…

Read More

ஸ்மார்ட் கைப்பேசிகளை ஆக்கிரமிக்கும் ஆபாச வீடியோக்கள்..

 அனைத்து வகையான வசதிகளும் உள்ளடக்கப்பட்டதாக ஸ்மார்ட் கைப்பேசிகள் மாறியுள்ள நிலையில் சிறியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் இவற்றினை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறிருக்கையில் இவ்வருட முடிவில் 136 பில்லியன் ஆபாச வீடியோக்கள் பார்வையிடப்பட்டிருக்கும் என ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களும் சராசரியாக 348 ஆபாச வீடியோக்களை பார்வையிட்டிருப்பார்கள் என புள்ளிவிபரங்கள் மூலம் அறியப்பட்டுள்ளது. இதேவேளை இந்த எண்ணிக்கையானது மேலும் ஐந்து வருடங்களில் 55 சதவீதத்தினால் அதிகரித்திருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்…

Read More