ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் 250 புதிய முறைப்பாடுகள்
களுவாஞ்சிகுடியில் நடத்தப்பட்ட காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின் போது 250 புதிய முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது. வெல்லாவெளி மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப்பிரிவுகளுக்காக காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போது ஆணைக்குழு முன்பாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் சாட்சியங்களை அளித்து வந்தனர். வெல்லாவெளி மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 315 பேர் சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டிருந்தனர்….
