Headlines

ஆன்லைன் விக்கிபீடியாவுக்கு விதித்த தடையை நீக்கியது ரஷ்யா

இணையதள கட்டுரை களஞ்சியமான விக்கிபீடியாவுக்கு ரஷ்யாவில் திடீரென சில மணிநேரம் தடை விதிக்கப்பட்டது. இது இண்டர்நெட் பயன்பாட்டாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அந்த தடை நீக்கப்பட்டது. அண்மையில், ரஷ்யாவில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தின்படி, போதை பொருட்களை பயன்படுத்துதல், தற்கொலை உள்ளிட்டவை பற்றிய தகவல்களை விக்கிபீடியாவில் பதிவு செய்தல் தடை செய்யப்பட்ட ஒன்றாக அறிவிக்கப்பட்டது. ரஷ்யாவின் அரசு தகவல்தொடர்பு ஏஜென்ஸி இன்று காலை இதுபோன்ற தடை செய்யப்பட்ட கட்டுரைகளை உள்ளடக்கிய ரஷ்ய வீக்கிபீடியா பக்கங்களை முடக்கியது. மேலும்,…

Read More

கொழும்பில் முச்சக்கரவண்டி செலுத்திய இந்திய கிரிக்கெட் வீரர்கள்

இலங்கையில் நடந்த  2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள்  கொழும்பு நகரில் முச்சக்கரவண்டியினை செலுத்தி வெற்றியினை கொண்டாடியுள்ளனர். முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் கொழும்பில் நடைப்பெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி  வெற்றி பெற்றது. இந்த வெற்றியை  நேற்று மாலையில் ஹர்பஜன் முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்து அதனை ஹர்பஜன் சிங் செலுத்தி அணித்தலைவர்  விராட்  உள்ளிட்ட வீரர்கள் பின் இருக்கையில் அமர்ந்து…

Read More

புதிய அமைச்சரவை நாளை பதவிப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சுப் பதவிகளை பகிர்வது தொடர்பில் ஏற்பட்ட சிக்கல் நிலை காரணமாக, கடந்த நாட்களில் நடைபெறவிருந்த இந்த நிகழ்வு பிற்போடப்பட்டு, கட்டம் கட்டமாக நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையில் நாளை முதற்கட்டமாக ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக 19 அமைச்சர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 16 அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இரண்டாம் கட்டமாக அடுத்த வாரம் ஏனைய அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது. புதிய…

Read More

புதிய நாடாளுமன்றின் கன்னி அமர்வில் ஜனாதிபதி விசேட உரை

புதிய நாடாளுமன்றின் முதல் அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதி எட்டாவது புதிய நாடாளுமன்றின் முதல் அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்க உள்ளார். புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து ஜனாதிபதி தெளிவுபடுத்த உள்ளார். எட்டாம் நாடாளுமன்றின் முதல் அமர்வு 1ம் திகதி 9.30 அளவில் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது. முதலாவது நிகழ்வாக சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது. பிரதி சபாநாயகர், அவைத்தலைவர், ஆளும் கட்சியின்…

Read More

அசாத்சாலி அதிரடி!

மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் அசாத் சாலி மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். சற்று முன்னர் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி சார்பில் வழங்கப்படும் எந்தவொரு பதவிகளையும் தாம் ஏற்றுகொள்ளப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் தமது பெயர் 7ஆவது இடத்தில் காணப்பட்டதாகவும், இதற்கு கட்சியன் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம…

Read More

ஜனநாயகத்தை நிலைநாட்டுவதிலும், ஊழல் ஒழிப்பிலும் இலங்கை முன்னேறியுள்ளது – அமெரிக்கா

இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதிலும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளிலும் சிறந்த முன்னேற்றம் காணப்படுவதாக, மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் நிஷா பிஷ்வால் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் விஜயமாக இலங்கை சென்ற அவர், அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சரவீர உள்ளிட்ட உயரதிகாரிகளை இன்று காலை சந்தித்து பேசினார். அதற்குப் பிறகு, ஊடகங்களிடம் பேசிய அவர், இலங்கை மக்களிடையே, நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு அளிக்கும் என்று கூறினார். மேலும், இலங்கையில்…

Read More

ஞானசாரதோற்கடிக்கப்பட்டது ஜனநாயகத்தின் சிறந்த வெளிப்பாடு – வாசுதேவ

இராணுவ ரீதியான சிந்தனைகளைக்கொண்ட சரத் பொன்சேகாவும், இனவாத சிந்தனை கொண்ட ஞானசார தேரரும் தோற்கடிக்கப்பட்டுள்ளமையானது சிறந்த ஜனநாயகத்தின் வெளிப்பாடாகும் என்று வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், புதிய இடதுசாரி முன்னணி கட்சியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்க சுதந்திரக்கட்சி எடுத்த முடிவு தவறானது. சுதந்திரக் கட்சிகக்கு வாக்களித்த மக்களின் மனோநிலை மற்றும்…

Read More

‘500 மில்லியன் ரூபா, நஷ்டஈடு வேண்டும்’

தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு எதிராக மான நஷ்ட வழக்குத் தொடரப் போவதாக உதய கம்மன்பில எச்சரித்துள்ளார். பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில திருமணம் முடிப்பதாக ஏமாற்றி ஒரு யுவதியை சீரழித்திருப்பதாகவும், இரும்பு விற்பனை தொடர்பான முறைகேடு ஒன்றில் தொடர்பு இருப்பதாகவும் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹிருணிக்கா பிரேமச்சந்திர குற்றம் சாட்டியிருந்தார். இது பொய்யான குற்றச்சாட்டு என்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி விளக்கமளித்த கம்மன்பில,…

Read More

ஹஜ் யாத்திரை செல்வோரிடம், அன்பான வேண்டுகோள்..!

بسم الله الرحمن الرحيم – அ.மு.முஹ்ஸின் – புனித ஹஜ் பயணம் செல்ல நாடியுள்ளவர்கள் தயவு செய்து தங்களது பயணத்தை வீட்டிலிருந்து ஆரம்பிக்க முன் ஹஜ்ஜை பரிபூரணமாக நிறைவேற்ற அவசியமான அனைத்து விடயங்களையும் , தங்களுக்கு (மார்க்க அறிவிலும், பேணுதலிலும்) மிகவும் நம்பிக்கையான ஒரு ஆலிமை அனுகி , அவருக்கு தங்கள் சக்திக்குற்பட்ட அன்பளிப்பை வழங்கி கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் உங்களது பெபெறுமதியான நேரங்களையும் ,பணத்தையும் செலவு செய்து  பல சசிரமங்களை சகித்து இப்புனித…

Read More

ரணில் விக்ரமசிங்க, பழிவாங்க மாட்டார் – மஹிந்த

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அரசியலில் ஈடுபடுவது சுலபமானது எனவும் அவர் துரத்தி துரத்தி பழிவாங்க மாட்டார் எனவும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து தினசரி பத்திரிகை ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் எனக்கு எந்த நிலைப்பாடும் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் குமார் வெல்கம எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் என…

Read More

அந்தத் தகவல் தவறு! மறுக்கும் இலங்கை கடற்படை

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதாக வௌியான தகவல் தவறு என, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்களை இலக்கு வைத்து எந்தவொரு தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை என, அவர் கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டன. இதன்படி எல்லை தாண்டியதாக கூறப்படும் 12 மீனவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் இவர்கள் பயணித்த படகுகளும் கடற்படையினரால் சேதப்படுத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள்…

Read More

பா.உ.க்கள் பொறுப்பேற்ற பின்னே மாகாண சபை வெற்றிடங்கள் பற்றி அவதானம்

நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு சில மாகாண சபை உறுப்பினர்கள் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். இந்தநிலையில் இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னரே, மாகாண சபையில் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பது குறித்து அவதானம் செலுத்தப்படும் எனத் தெரிகிறது. இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பெரும்பாலான மாகாண சபை உறுப்பினர்கள் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். இதன்படி அதிக தொகையினர் மேல் மாகாணத்தில் இருந்தே (13 பேர்) இவ்வாறு தெரிவாகியுள்ளனர். மேலும் சப்ரகமுவ மாகாணத்தில்…

Read More