Headlines

சவூதியில் முதல் முறையாக பெண்களுக்கு ஓட்டுரிமை!

பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு வந்த சவுதி அரேபியாவில், முதன் முறையாக, நகராட்சி தேர்தலில், பெண்கள் போட்டியிடவும், ஓட்டளிக்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து, வருகிற டிசம்பர் 12-ம் தேதி, நடைபெறவுள்ள சவுதியின் மூன்றாவது நகராட்சி தேர்தலில், முதல் முறையாக பெண்களும் பங்களிக்க உள்ளனர். இதற்காக, மெக்கா மற்றும் மதினாவில், பெண் வாக்காளர் விவரங்களை பதிவு செய்யும் பணி, கடந்த வாரம் தொடங்கியது. இந்நகரங்களில், முதன் முதலாக, பெண் வாக்காளர்களாக, சபினாஸ் அபு அல்-ஷாமத் மற்றும் ஜமால்…

Read More

தேசியப் பட்டியல் குறித்து நீதிமன்றில் மனு – சுசில்

தேசியப் பட்டியல் குறித்து நீதிமன்றில் மனுத் தொடரப்பட உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இவ்வாறு மனுத் தாக்கல் செய்ய உள்ளன. இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியலுக்குஇ பங்கு கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் நியமிக்கப்படாமை தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் தனது வருத்தத்தை வெளியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் அறிக்கை ஒன்றின் மூலம் இதனை குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு…

Read More

ஊழல்வாதிகளுக்கு எதிராக சுமார் 7 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன -ராஜித

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டை ஆட்சி செய்த காலத்தில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக கிடைத்துள்ள அனைத்து முறைப்பாடுகளும் புதிய அரசாங்கத்தின் கீழ் துரிதமாக விசாரணை செய்யப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்த விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதால், பலர் எண்ணியுள்ள போதிலும் எந்த காரணம் கொண்டும் விசாரணைகளை இடையில் நிறுத்த போவதில்லை. ஊழல்வாதிகளுக்கு எதிராக சுமார் 7 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. விசாரணைகளை நடத்த போதுமான காலம் இருக்கிறது. குற்றச்சாட்டு…

Read More

மைத்திரி – மஹிந்த – சந்திரிக்கா ஒரே மேடையில்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 64 வது ஆண்டுவிழா வரலாற்றில் முதல் தடவை பொலன்றுவையில் இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 02ம் திகதி இடம்பெறவுள்ளதாக வட மத்திய முதலமைச்சர் பெஷல ஜயரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் ஆண்டு விழா கொண்டாடுவதற்காக முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்சவும் இணைந்து கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி…

Read More

UPFA இன்னும் சில நாட்களுக்குள் கலைக்கப்படலாம்?

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்னும் சில நாட்களுக்குள் கலைந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று மாலை முக்கிய கூட்டமொன்று இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் அல்லது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இச்செய்தி அச்சிக்கு போகும் வரையிலும் வெளியாகவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கலைக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனியாகவோ அல்லது வேறு வகையிலையோ…

Read More

ஜனாதிபதியால் மூன்று பேருக்கு அமைச்சு பதவிகள் வழங்கபட்டது

சற்றுமுன் ஜனாதிபதியால் மூன்று பாராளுமன்ற உறுப்பினருக்கு  அமைச்சு பதவிகள் வழங்கபட்டு ஜனாதிபதி முன் நியமனங்களை பெற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்தது. அதன்படி, மங்கள சமரவீர அவர்களுக்கு வெளி விவகார அமைச்சும், விஜேதாச ராஜபக்ச அவர்களுக்கு நிதி அமைச்சும்,            DM சுவாமிநாதன் அவர்களுக்கு மீள்குடியேற்ற மற்றும் புனருத்தாரண அமைச்சும் வழங்கபட்டுள்ளது.

Read More

தோல்­விக்கு மஹிந்­தவே பொறுப்பு – டிலான்

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தோல்­விக்கு மஹிந்த ராஜ­ப­க் ஷவும், முன்­ன­ணியின் கட்சித் தலை­வர்­களும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய செயற்­கு­ழு­வுமே பொறுப்­பேற்க வேண்­டு­மென குற்றம் சாட்­டி­யுள்ள சுதந்­திரக் கட்­சியின் ஊடகப் பேச்­சா­ளரும், முன்னாள் அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா, “பட்டர்” கேக்கைத் தயா­ரித்த ஐ.ம.சு.மு. ஜனா­தி­ப­தியிடமி­ருந்து “ஐசிங்”கை பெற்றுக் கொள்­ள­வில்லை. எனவே தோல்­விக்கு ஜனா­தி­பதி பொறுப்­பல்ல என்றும் கூறி­யுள்ளார். இது தொடர்­பாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஊடகப் பேச்­சாளர் டிலான் பெரேரா மேலும் தெரிவித் திருப்­ப­தா­வது. மஹிந்த…

Read More

இச்சிறுமியின் சத்திர சிகிச்சைக்கு உதவுங்கள்

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பரீட் நகர் மஸ்ஜிதுல் மனாருல் ஹ{தா பள்ளிவாயல் மஹல்லாவை சேர்ந்த என்.எம்.மர்சூக் என்பவருடைய மகள் பாத்திமா இல்மா (வயது 10) என்ற சிறுமிக்கு மூலையில் கட்டி ஒன்று ஏற்பட்டுள்ளதால் (Brain Lesion of Uncercain Patholog) என்ற ஆபத்தான நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார். இச்சிறுமிக்கு வைத்திய சத்திரசிகிட்சை செய்வதற்கு ரூபா.600,000 தேவை என இச்சிறுமியினை பரிசோதனை செய்த சத்திர சிகிச்சை நிபுனர் டாக்டர். சமன் புஸ்பகுமார (MBBS)COL.MRCS.(ENG)என்பவர் தெரிவித்துள்ளதால்…

Read More

புதிய சூழ்ச்சியில் மஹிந்த: எச்சரிக்கும் புலனாய்வுப் பிரிவு

பௌத்த விகாரைகளை மையமாகக் கொண்ட நவபாசிச அமைப்பொன்றை உருவாக்குவதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவான எஸ்ஐஎஸ் பிரிவினர் இது தொடர்பான புலனாய்வு அறிக்கையொன்றையும் தயாரித்துள்ளனர். அதன் ஒரு பிரதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஜனாதிபதித் தேர்தல் தோல்வியின் பின்னர் மீண்டும் அதிகாரத்துக்கு வரும் நோக்கில் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் நவபாசிச அமைப்பொன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது….

Read More

YLS ஹமீட் நீக்கம்; றிஷாத் பதியுதீன் அதிரடி

– ஏ.எச்.எம்.பூமுதீன் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் உடன் அமுலுக்கு வரும் வகையில் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் கட்சியின் உயர்பீடம் இன்று காலை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று காலை கொழும்பில் நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போது மேற்படி அறிவிப்பை கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் விடுத்தார். அதே நேரம் அ.இ.ம.காவுக்கு கிடக்கப்பெற்ற தேசியப்பட்டியலுக்கு புத்தளத்தைச்…

Read More

புதிய அரசாங்கத்தில் மொத்தம் 30 அமைச்சர்கள் மட்டுமே

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையை விட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளை அதிகரிப்பதாயின் அதற்கு பாராளுமன்றத்தில் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பேச்சாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். D c

Read More

UPFA யின் தேசியப்பட்டியலில் இருந்து நிராகரிக்கபட்டவர்கள்

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தேசியப் பட்­டி­யலில் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்த ஜே.ஸ்ரீரங்கா, பிர­பா­க­ணேசன்,  பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ்,   டியு. குண­சே­கர,  திஸ்­ஸ­வி­தா­ரன மற்றும் திஸ்ஸ அத்­த­நா­யக உள்­ளிட்ட 11 பேர் முன்­ன­ணியின் தேசியப் பட்­டி­ய­லி­ருந்து நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளனர். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு தேசியப் பட்­டியல் ஊடாக 12 ஆச­னங்கள் கிடைக்­கப்­பெற்­றி­ருந்த நிலையில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை முன்­னணி அதற்­கான உறுப்­பி­னர்­களை நிய­மித்து உத்­தி­யோக­பூர்­வ­மாக அறி­வித்­தி­ருந்­தது. தேர்­தல்­க­ளுக்கு முன்­ப­தாக முன்­ன­ணி­யினால் பெய­ரி­டப்­பட்­டி­ருந்த பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ், திஸ்ஸ விதா­ரண, டியு.குண­சே­கர, திஸ்ஸ அத்­த­நா­யக்க,…

Read More