Headlines

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் மீண்டும் இன்று  ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. க.பொ.த. உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் திருத்தும் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்பம் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. க.பொ.த. உயர்தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பாடசாலைகள் செப்டம்பர் 28 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படுவதோடு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தும்…

Read More

பொதுபலசேனாவின் மன்னிப்புக் கோரிக்கை நிராகரிப்பு

அமைச்சர் றிஷாத் பதியுதீனின் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விடயம் தொடர்பில் மன்னிப்புக் கோரும் பொதுபலசேனாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பொதுபல சேனாவினர் தலைக்கனம் கொண்டு அடாவடித்தனங்களை கட்டவிழ்த்து விட்டிருந்தனர். அரசாங்க உயர்மட்டமும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த காரணத்தினால் அவர்களின் அத்துமீறல்கள் கட்டுக்கடங்காமல் இருந்தது. இந்நிலையில் இனவாத பொதுபலசேனாவின் செயற்பாடுகளை கண்டித்த வட்டரெக விஜித தேரரை ஒளித்து வைத்திருப்பதாக கூறி பொது பல சேனாவினர், றிஷாத் பதியுதீனின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு அலுவலகத்தினுள் புகுந்து அடாவடித்தனம்…

Read More

வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் – றிஷாத் பதியுதீன்

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட மூன்று முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி பெறுவதற்கு மிக அதிக வாய்ப்பு காணப்பட்டது. கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒற்றுமைப்பட்டு ஆர்வத்துடன் வாக்களித்திருப்பின் மூவரும் வெற்றி பெற்று கடந்த 26 வருடங்களாக எம்.பி ஒருவர் இல்லையே என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்த நிலை மாறி நீங்கள் எல்லோரும் இன்று மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள். எனினும் அல்லாஹ்வின் ஏற்பாட்டை பொருந்திக் கொள்வோம். இத்தேர்தலில் நாடு பூராகவும் முஸ்லிம்களும்…

Read More

முஸ்லிம்களின் உரிமைகளுக்காக போராட உயிர்பெற்றுள்ள முஸ்லிம் தேசியவாதிகள் இயக்கம்

முஸ்லிம் தலைமைகளின் இலட்சியம் தவறிய பயணம் முஸ்லிம் பிரதேசங்கள், கிராமங்களிடையே பிரதேசவாத சிந்தனைகளைப் பலப்படுத்தியுள்ளதால் கட்சித் தலைமைகள் பெரும் தலையிடியை எதிர்நோக்கியுள்ளன. தேர்தல் முடிந்த கையோடு தேசியப் பட்டியல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளமையிலிருந்து இதனைப் புரிந்துகொள்ளலாம். முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றை மு.காவுக்கு முன் (1986) மு.காவுக்குப் பின் என இரண்டாகக் கருதமுடியும். மு. கா. வுக்கு முன் (1986) வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள முஸ்லிம் கிராமங்கள் ஊர், ஊராகப் பிளந்து வேறுபட்டுக்கிடந்தன. இப்பிரதேச முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறும்…

Read More

1000 பேரை இஸ்லாத்தில் இணைத்த மாணவி

பெல்ஜிய பெண்ணான வெரோனிக் கூல் எல்லோரையும் போல கல்லூரிக்கு சென்று வந்தார். கல்லூரியில் பயிலும் ஒரு சில இஸ்லாமிய மாணவிகளோடு தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் செய்து வரும் பழக்கங்கள் இவருக்கு வித்தியாசமாக படவே இஸ்லாத்தை அறிவதில் ஆர்வம் கொண்டார். இஸ்லாமிய தோழிகள் மூலமாக அவருக்கு குர்ஆன் மொழி பெயர்ப்பு கிடைத்தது. குர்ஆனை ஆழ்ந்து படித்தார். பிரஸ்ஸல்ஸில் உள்ள இஸ்லாமிக் சென்டருக்கு அடிக்கடி போய் வந்தார். இஸ்லாம் இந்த இள நங்கையை ஆட் கொண்டது. கலிமா மொழிந்து ஏக…

Read More

உருவாகும் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள 10 முஸ்லிம் அமைச்சர்கள்

தேசிய அரசாங்கத்தின் முழுமையான அமைச்சரவை மற்றும் அதற்கான அமைச்சர்கள் தொடர்பான இணக்கப்பாடு தற்போது எட்டப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் 50 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 10 இராஜாங்க அமைச்சர்களும், 30 பிரதி அமைச்சர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதில் 10 முஸ்லிம் மற்றும் 5 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம் பிடித்துள்ளனர். எனினும் இவர்களுக்கு ஒதுக்கப்படவுள்ள அமைச்சுக்களின் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எதிர்வரும் நான்காம் திகதியளவில் அமைச்சர்களின் பதவிப் பிரமாண வைபவம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள்…

Read More

இந்திய முஸ்லிம்கள் 13.8 கோடியிலிருந்து 17.22 கோடியாக அதிகரித்தனர்

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம், 2011ம் ஆண்டு மத அடிப்படையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை 25-08-2015 வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் மக்கள் தொகை 121.09 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றிய புள்ளி விபரமும் இதில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம்களின் மக்கள் தொகையானது 0.8 சதவீதம் அதிகரித்து 13.8 கோடியிலிருந்து 17.22 கோடியாக அதிகரித்துள்ளது. அதேசமயம் இந்துகளின்…

Read More

குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்’

– Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) – ஈராக் நாட்டின் அமெரிக்க கூட்டுப் படையின் யுத்தம் 2003 மார்ச் மாதத்திலிருந்து 2003 மே மாதம் வரை நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அந்தக் கூட்டுப் படையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, போலந்து போன்ற பங்கேற்றன. அதன் பின்பு ஈராக்கினை சீறாக்குகின்றோம் என்ற நடவடிக்கையில் 36 நட்பு நாடுகள் பங்கேற்றன. ஈராக் யுத்தத்திற்கு முக்கிய காரண, காரிய கர்த்தாக்கள் அமெரிக்காவின் குடியரசு கட்சியின் ஜனாதிபதி ஜார்ஜு புஷ்சும், இங்லாந்து நாட்டின்…

Read More

உயிரைத் தந்தவளின் உயிரைக் காக்கும் வாய்ப்பு எத்தனை மகன்களுக்கு கிட்டும்?

நீ சுமந்த பிள்ளையாய் நானிருந்தேன் அம்மா! நான் சுமக்கும் பிள்ளையாய் நீ ஆனாய் அம்மா!’ என்ற பாடல் வரிக்கு ஏற்ப எல்லா மகன்களின் பாசத்தையும் ஒரே மகனாக தனது தாயிடம் பொழிந்துக் கொண்டுள்ளார், சீனாவைச் சேர்ந்த ஒரு அன்பு மகன். பெண் குழந்தைகளின் மனதில், தந்தை எப்போதுமே ஹீரோதான். இதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாகவே பெண் குழந்தைகள் தான் செய்யும் காரியங்களால் தந்தைக்கு அவ்வப்போது அதை நினைவூட்டிக்கொண்டே இருப்பர். ஆனால், ஆண் பிள்ளைகள் தங்களின் தாயின் மீது வைத்துள்ள…

Read More

வயது 14 சிறுமியைக் காணவில்லை

– அப்துல்லாஹ் – வீட்டிலிருந்த 14 வயதுச் சிறுமியைக் காணவில்லையென அவளது பெற்றோர் செவ்வாய்க்கிழமை முறைப்பாடொன்றைச் செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் முறக்கொட்டான்சேனைக் கிராமத்தைச் சேர்ந்த சிறிஸ்கந்தராஜா ஷிரோமினா (வயது 14) என்ற சிறுமியே செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போயுள்ளார் என்று பெற்றோர் முறையிட்டுள்ளனர். சிறுமி தனியாக வீட்டில் இருந்தபோது காணாமல் போயுள்ளார். தொழிலுக்காகச் சென்ற பெற்றோர் வீடு திரும்பிய போது சிறுமி வீட்டிலிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை செய்து…

Read More

ஸ்மார்ட் போன்களில் எது போலி? எது அசல்?

– செ.கார்த்திகேயன் – புதிது புதிதாய் ஸ்மார்ட்போன்கள் அப்டேட் வெர்ஸன்களுடன் தினம்தினம் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அனைத்து விதமான ஃப்யூச்சர்களையும் பார்த்து ஸ்மார்ட்போன் வாங்குபவர்களைவிட, அதன் செயல்பாடுகளில் ஆர்வமாகி, வெளித் தோற்றம் நன்றாக இருக்கிறதா என்பதை மட்டுமே பார்த்து வாங்குபவர்களே அதிகம். இதை தெரிந்துவைத்துக்கொண்டு, ஒரு சிலர் ஸ்மார்ட்போன்களில் ஏமாற்று வேலைகளை அரங்கேற்றியிருக்கிறார்கள். இன்று எல்லாவற்றிலும் கலப்படம், போலி என வந்துவிட்டநிலையில் தொழில் நுட்பச்சந்தையில் போலி ஸ்மார்ட்போன்களையும் கயவர்கள் களமிறக்கியிருக் கிறார்கள். போலி ஸ்மார்ட்போன்களை ஒரு சில ஃப்யூச்சர்க…

Read More

ரஷ்யப் பிரதமருக்கு ஜப்பான் கண்டனம்

ரஷ்யப் பிரதமர் டிமிட்ரி மெட்வதேவ் கடந்த 22-ம் தேதி குரில் தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது ஜப்பான் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளிடம் ஜப்பான் சரணடைந்த சில தினங்களில், ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள குரில் தீவுகளை ரஷ்யா ஆக்கிரமித்தது. இத்தீவுக்கு, ஜப்பானும் உரிமை கொண்டாடுவதால், தீவு யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனை 70 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாமலேயே உள்ளது. இந்நிலையில்,  டிமிட்ரியின் இப்பயணத்திற்கு, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கடும்…

Read More