Headlines

பெப்சி வடிவில் மது: சவூதியில் சம்பவம்

நேற்று(12\11\15)  துபாயிலிருந்து சவூதி அரேபியா வந்த லாரியில் 48,000 பெப்சி கேன்கள் வந்தது, முதலில் பெப்சி என்று நினைத்த சுங்க துறை அதிகாரிகள் அதை உற்று பார்க்கும்போது தான் தெரிந்தது போலியான பெப்சி கவர்கள் என்று. பிரித்து பார்த்தபோது அனைத்தும் மது கேன்கள். மேலும் விரிவான செய்திக்கு saudigazette.com.sa

Read More

அரசியல் கைதிகளின் விடுதலை?

அரசியல் கைதிகள் நிபந்தனை பிணை அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்திருந்தாலும் அதனை முழு விடுதலையாக கருத முடியாது என்று நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

அவன்கார்ட் ஆயுதங்களை கடற்படையினர் பொறுப்பேற்றனர்

அவன்கார்ட் நிறுவனத்தின் பொறுப்பில் இருந்த ஆயுதங்களை கடற்படையினர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர். கடற்படையினரிடம் அவன்கார்ட் நிறுவனத்தின் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனடிப்படையில், காலி துறைமுக சூழலில் அவன்கார்ட் மற்றும் மஹாநுவர ஆகிய கப்பல்களில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் மற்றும் தளபாடங்களை கடற்படையினர் இன்று பரீட்சிததனர். கடற்படையின் உயர் அதிகாரி ஒருவரும், குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் ஆயுதங்களை பொறுப்பேற்றுக்கொண்டன.

Read More

சோபிததேரரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவேன் : பிரதமர்

சங்கைக்குரிய அமரர் மாதுலுவாவே சோபித தேரரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். மறைந்த சங்கைக்குரிய மாதுலுவாவே சோபிததேரரின் இறுதி நிகழ்வுகள் நேற்று (வியாழக்கிழமை) இலங்கை நாடாளுமன்றத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இரங்கள் உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், “இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சாதாரண பிரஜை ஒருவருக்காக அரச மரியாதையுடன் கூடிய இறுதிக் கிரியைகள் நடத்தப்படுகின்றது. சோபிததேரர் ஏதேனும் ஓர்…

Read More

வளவை கங்கையில் முதலையிடம் சிக்கிய பெண் மாயம்!

வளவை கங்கையில் நீராட சென்ற அம்பலந்தொட பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை முதலை இழுத்துச்சென்றுள்ளது. இன்று காலை 6.45 மணியளவில் குறித்த பெண், வளவை கங்கையில் நீராட சென்ற போது இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்படை மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து காணாமல் போன பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

அரச வா்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவராக ஜெமீல் பதவியேற்பு

– அஸ்ரப் ஏ சமத் – அரச வா்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவராக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினா் ஜெமீல் நேற்று முன்தினம் (10)ஆம் திகதி கொழும்பு -2 நவம் மாவத்தையில் உள்ள அரச வா்த்தக கூட்டுத்தாபணத்தின் தலைவராக கடமைகளை ஏற்றுக் கொண்டாா். இந் வைபவத்தில் அமைச்சா் றிஷாத், அமைச்சா் பைசா் முஸ்தபா, பிரதியமைச்சா் அமீா் அலி, மற்றும் அமைச்சின் அதிகாரிகள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினா்களும் கலந்து கொண்டனா். இந் நிறுவனம் பற்றி பொதுமுகாமையாளா் தெரிவிக்கையில்…

Read More

மர்மபொருள் இன்று மாலை 6.30 க்கு விழும்

விண்வெளியில் இருந்து இன்று முற்பகல் 11.45 மணியளவில் விழும் என எதிர்பார்க்கப்பட்ட மர்மபொருள் இன்று மாலை 6.30 மணியளவில் தென் கடற்பரப்பில் விழும் என ஆதர் சி கிளாக் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. விண்­வெளிக்கு ஏவப்­பட்ட விண்­கலம் ஒன்றின் பாக­மான டப்­ளியூ. ரி 1190 எப் என்ற வான் பொருள் இன்று முற்பகல் 11.45 மணிக்கு இலங்­கையின் தென் கடற்­ப­ரப்பின் கட­லோ­ரத்­தி­லி­ருந்து 62 மைல் தூரத்­தில்  விழும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சால் தெரிவிக்கப்பட்டது….

Read More

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: 348 தொகுதிகளை கைப்பற்றி ஆங் சான் சூகி கட்சி அபார வெற்றி

நான்கு நாட்களாக இழுத்தடிக்கப்பட்டுவந்த மியான்மர் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதிக இடங்களில் வென்ற கட்சி என்ற அடிப்படையில் தேர்தல் கமிஷன் கீழ்சபையில் அக்கட்சிக்கு அளித்துள்ள 21 இடங்களையும் சேர்த்து மொத்தம் 348 இடங்களில் வெற்றிபெற்ற ஆங் சான் சூகி-யின் தேசிய ஜனநாயக லீக் கட்சி புதிய ஆட்சியை அமைக்கின்றது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் பாராளுமன்றத் தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுமார் 25 ஆண்டுகளுக்குப்பின் ஜனநாயக முறைப்படி நடைபெற்ற இந்த தேர்தலில்…

Read More

அமீரலியின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த அரசாங்க அதிபர்

– அபூ செய்னப் – கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வந்த முறையற்ற விதத்தில் ஆற்றுமண் அகழ்வு மற்றும் கிரவல் அகழ்வினால் பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர் நோக்கி வந்தனர் பொதுமக்களின் தேவைகளுக்காகவும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் தேவையான மண்ணை பெற்றுக் கொள்வதில் மட்டக்களப்பு மாவட்ட மக்களும் அபிவிருத்தி குழுக்களும் பெரும்பாலும் அதிக தொகை பணத்தை முகவர்களுக்கு கொடுத்தே தமது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிர்பந்தம் இருந்தது இதற்கான அடிப்படைக்காரணம் அனுமதிப்பத்திரங்கள் வைத்திருக்கும் மணல் அகழும் முகவர்கள் அதிக…

Read More

மஹிந்தவிற்கு நோட்டீஸ்

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களைப் பயன்படுத்தி, அச்சபைக்குச் சேர வேண்டிய 142 மில்லியன் ரூபாயைச் செலுத்தத் தவறியமைக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட எழுவரையும் அடுத்த வருடம் மார்ச் மாதம் 10ஆம் திகதி,  கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவுடன்,  அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட ஏழ்வரை, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நஷ்டத்துக்காக இலங்கை போக்குவரத்துச் சபையே  கொழும்பு வர்த்தக…

Read More

வடக்கு தொடருந்து போக்குவரத்து வழமைக்கு

ரத்து செய்யப்பட்டிருந்த வடக்கு தொடருந்து வழி போக்குவரத்துக்கள் இன்று காலை முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரஜரட்ட ரெஜின தொடரூந்து தம்புத்தேகம மற்றும் செனரத்கம தொடரூந்து நிலையங்களுக்கு இடையில் நேற்று தடம்புரண்டது. இந்தநிலையில் தடம்புரண்ட தொடரூந்து நேற்றிரவு வரை மீளமைக்கப்பட்டிருக்காத நிலையில் அஞ்சல் தொரூந்து சேவைகள் இடம்பெறவில்லை என தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக வடக்கு தொடருந்து வழித் தடத்தில் நேற்று இரவு பயணிக்கவிருந்த 4…

Read More

களவாடிய 30ஆயிரம் டின் மீன்கள் மீட்பு

ரத்தொலுகம வீடமைப்பு திட்டத்தின் அங்காடியொனறில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூபா 47 இலட்சம் பெறுமதியான 30ஆயிரம் டின் மீன்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த டின் மீன்கள் நீர்க்கொழும்பு – கிபுலாபிடிய பகுதியில் களஞ்சியசாலையொன்றில் இருந்து திருடப்பட்டவை என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் ரத்தொலுகம பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More