Headlines

இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் பிரமிக்க வைக்கும் நிகழ்வு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பு இறைவனால் வழங்கப்பட்ட திருக்குர்ஆன் அன்று என்ன பேசியதோ அவையனைத்தும் இன்று உலகில் நடப்பதை பல ஆண்டுகளாக உலகமே வியந்து வருகிறது. அப்படிப்பட்ட வியப்புகளில் இதுவும் ஒன்று…. அல்லாஹ் தன்னுடைய திருமறை திருக்குர்ஆனில் கூறுகிறான்… “பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா ? என்று அவர் கூறினார். கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றைஏற்படுத்தியுள்ளான் என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.” (திருக்குர்ஆன் 19:23.24)என்று திருக்குர்ஆன் பேசுகிறது. திருக்குர்ஆனின் அந்த வசனத்திற்கும் கீழே உள்ள செய்தியையும்…

Read More

ஒரு குழந்தை கொள்கையை கைவிடும் சீனா

சீனாவில் 1979-முதல் பின்பற்றப்பட்டு வந்த ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை கொள்கை முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாக சீனா திகழ்கிறது. அந்நாட்டில் ‘ஒரு தம்பதி, ஒரு குழந்தை’ என்ற கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் ஏற்கனவே சில மாகாணங்கள் இந்த கொள்கையை தளர்த்தி உள்ளன. இந்த கொள்கை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தார்கள். ஆரோக்கியமான, நிலைத்து நிற்கக்கூடிய வளர்ச்சிக்கு…

Read More

பாகிஸ்தானியருக்கு, சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றம்

பாகிஸ்தானை சேர்ந்தவர் அமல் ஜன். சவூதியில் வசித்து வந்த இவர் இந்தோனேசியாவை சேர்ந்த பாம்பாங் சுகியாட்டோ, சூர்யாதி வித்யாஸ்துதி என்ற தம்பதியரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அவர்களை இரும்பு கம்பியால் தாக்கி படுகொலை செய்து விட்டார். இந்த கொலைக்கான நோக்கம் என்ன என்று தெரியவில்லை. இதுதொடர்பான வழக்கில் அமல் ஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ரியாத்தில் அமல் ஜன்னின் தலையை துண்டித்து மரண தண்டனை நேற்று நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் 10-ந் தேதி அங்கு…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீன் அரசாங்கத்திடம் வேண்டுகோள்

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் முழுமையான மீள்குடியேற்றத்தை 2 வருடங்களுக்குள் நிறைவேற்றித்தாருங்கள் என கைத்தொழில், வணிகத் துறை அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிசாத் பதியுதீன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார். வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் 25 வது ஆண்டு நிறைவை நினைவு கூறும் வகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் இடம் பெற்றது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும்,வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் அங்கத்தினர் என்ற வகையிலும் இந்த…

Read More

அமைச்சர் றிஷாத் – பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் சஹீத் சகீல் அஹமத் இன்று கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார். பாகிஸ்தான் அரசு கடந்த காலங்களில் இலங்கை அரசுடன் முன்னெடுத்த வர்த்தக செயற்பாடுகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்ததாகவும், புதிய அரசாங்கத்தின் கீழும் இச்செயற்பாடுகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாகவும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் இங்கு சுட்டிக்காட்டினார். இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு வர்த்தக உடன்படிக்கையை தொடர்ந்து பயனுள்ளதாக முன்னெடுக்கப்படுவது தொடர்பிலும் இச்சந்திப்பின்…

Read More

சவூதியில் மழை வேண்டித் தொழுகை

இறைவனின் மண்டியிட்டு தமது தவறுகக்கு மன்னிப்பு கோரி இறைவனிடம் மழையை வேண்டும் ஒரு பிரார்தனையை ஒரு தொழுகையை நபிகள் நாயகம் நமக்கு கற்று தந்தார்கள் நபிகள் நாயகத்தின் இந்த சுன்னத் பலர்களாலும் மறக்க பட்ட ஒரு சுன்னத்தாகவே இருந்து வருகிறது. நபிகள் நாயகத்தின் இந்த சுன்னத்தை நடைமுறை படுத்துமாறும் இறைவனிடம் மழை வேண்டி தொழுகை நடத்துமாறும் மன்னர் சல்மான் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். மன்னரின் உத்தரவை தொடர்ந்து நேற்றைய தினம் சவுதி அரேபியாவின் அனைத்து நகரங்களும் மழை…

Read More

மாணவர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாடத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஹைலெவல் வீதி ஊடான விஜேராம சந்தி வரையான பிரதேசத்தில் வாகனநெரிசல் ஏற்பட்டுள்ளது.

Read More

நெஞ்சில் பலகை குத்திய மாணவன் மரணம்

களுத்துறை – புளத்சிங்கள பிரதேசத்தில் மரத்திலிருந்து விழுந்து நெஞ்சுப் பகுதியில் பலகைத் துண்டு குத்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் இன்று உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையிலே இவர் காலை 10.00 மணியளவில் உயிரிழந்துள்ளார். புளத்சிங்கள பேரகஸ்கொடல்ல பகுதியைச் சேர்ந்த 16 வயதான குறித்த மாணவன் தனது சிறிய தந்தையுடன் வயலுக்கு சென்ற வேளை அங்கு மாம்பழம் பறிக்கும் நோக்கில் மரத்தில் ஏறியபோது கீழே விழுந்துள்ளார். இதன்போது நிலத்தில் நிலைகுத்தாக இருந்த…

Read More

கொண்டாயாவுக்கு ஆதரவாக செயற்படும் சட்டத்தரணிகளுக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கொட்டதெனியாவ பொலிசாரினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளான கொண்டயா சார்பில் செயற்படும் சட்டத்தரணிகளுக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். கொட்டதெனியாவ சிறுமி சேயா படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்தவை ஆதாரபூர்வமான குற்றவாளியாக சித்தரித்திருந்த பொலிசார் , அவரை சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கியிருந்தனர். எனினும் மரபணு பரிசோதனையின் ஊடாக அவர் நீதிமன்றம் மூலம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அநியாயம் இழைக்கப்பட்ட கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்தவுக்கு ஆதரவாக உதுல் பிரேமரத்ன தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவொன்று…

Read More

வீரவன்சவின் செயற்பாடுகள் கவலைக்குரியது! ரஞ்சன் ராமநாயக்க

குற்றம் செய்துவிட்டு அதனை வார்த்தை ஜாலங்களால் மறைக்க முயலும் விமல் வீரவன்சவின் செயற்பாடுகள் கவலைக்குரியது என்று பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். விமல் வீரவன்சவின் கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பாக சிங்கள ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறும் வகையில் விமல் வீரவன்ச கடவுச்சீட்டு விவகாரத்தில் நடந்து கொண்டுள்ளார். அதன் மூலம் சட்டத்தை மீறிய அவர் தற்போது எதுவுமே நடைபெறாதது…

Read More

பொலிசாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை: மாணவர் ஒன்றியம்

பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிசாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்காகி சுமார் பத்து மாணவர்கள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் பலருக்கு சாதாரண காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கை தொடர்பான ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிசாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு…

Read More

மக்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்து கொண்ட பிரதமர்

மக்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்து கொண்ட அவற்றுக்கு தீர்வு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் வார நாட்களில் மக்கள் தங்களது பிரச்சினைகளை கூறி தீர்வு பெற்றுக்கொள்ள சந்தாப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் வார நாட்களில் சிறிகொத்தவிற்கு சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொள்வார்கள். நேற்று அமைச்சர் கபீர் ஹாசிம் மற்றும் இரான் விக்ரமரட்ன ஆகிய அமைச்சர்கள் மக்களின் பிரச்சினைகளை…

Read More