Headlines

வத்தளை பள்ளிவாயலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

கம்பஹா மாவட்டத்திலுள்ள வத்தளை, திப்பிட்டிகொட பள்ளிவாசலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று (01) மஹர நீதிமன்த்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது. குறித்த பள்ளிவாசலினால் பொதுமக்களுக்கு தொல்லை எனத் தெரிவித்து இந்தப் பள்ளிவாசலுக்கு எதிராக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் கிரிபத்கொட பொலிஸாரினால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து பள்ளிவாசலில் தொழுகை மேற்கொள்வதற்கும் நிர்மாணத்திற்கும் நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் ஆர்.ஆர்.டி சட்ட ஆலோசனை அமைப்பு, இந்த வழக்கிற்கு எதிராக கடந்த ஒன்றரை வருடங்களாக போராடியதுடன் இந்த பள்ளிவாசல் முஸ்லிம்…

Read More

புதிய அமைச்சரவை, வெள்ளிக்கிழமை பதவியேற்கும் – ரவி

புதிய அமைச்சரவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (04) காலை 11 மணிக்கு பதவியேற்கவுள்ளதாக ஐ.தே.கவின் பிரதித் தலைவர்களில் ஒருவரான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 45 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையாக அது அமையும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியதோடு இதில், ஐ.தே.க.வுக்கு 33 அமைச்சரவை அமைச்சுகளும் , ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 12 அமைச்சரவை அமைச்சுகளும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு மேலதிகமாக பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளும் அன்றைய தினம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்…

Read More

கம்மன்பிலவின் கருத்தால் சபையில் கடும் சர்ச்சை

நாட்டை பிரிக்க ஆயுத முனையில் முடி­யாது போனதால் அர­சியல் ரீதி­யாக அதனை முன்­னெ­டுக்க ஆயுதக் குழுக்­களின் அர­சியல் பிர­திநி­திகள் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக உதய கம்­மன்­பில எம்.பி. நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெரிவித்ததால் முதல் நாள் சபை அமர்­வி­லேயே சர்ச்சை தலை­தூக்­கி­யது. இவ்­வாறு சபையில் ஆயு­தங்கள் தொடர்­பாக உரை­யாற்ற முடி­யாது என உதய கம்­மன்­பில எம்.பி.யின் உரைக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது எதிர்ப்பை வெளி­யிட்டார். எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தின்முத­லா­வது சபை அமர்வு, சபா­நா­ய­க­ராக தெரி­வான கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் நேற்று இடம் பெற்­றது. இதன்…

Read More

கோத்தா, துமிந்த, தன­சிறி, உபாலி உள்­ளிட்ட 9 பேருக்கு ஜனா­தி­பதி ஆணைக்குழு அழைப்பு

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ, முன்னாள் பாராளுமன்ற உறுப்­பினர் ஆர்.துமிந்த சில்வா, மேல் மாகாண சபை அமைச்சர் உபாலி கொடி­கார, தெஹி­வளை – கல்­கிஸை மாந­கர மேயர் தன­சிறி அம­ர­துங்க உள்­ளிட்ட ஒன்­பது பேர் நாளையும் நாளை மறு தினமும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு­வி­னரால் விஷேட விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர். கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது மஹிந்த ராஜ­பக் ஷவின் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்­காக ரக்ன லங்கா பாது­காப்பு நிறு­வ­னத்தின் ஊழி­யர்­களை ஈடு­ப­டுத்­தி­ய­மை­ உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்பில்…

Read More

போருக்குப் பின்னரான இலங்கையில் நல்லதொரு மாற்றம் : ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி

போருக்குப் பின்னரான ஐந்து ஆண்டுகளில் இலங்கையில் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீட் கர்ஷாய் தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தினால், நாட்டில் ஜனநாயகமும், சமாதானமும் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஐந்தாவது தடவையாக் கொழும்பில் நேற்று  ஆரம்பமாகிய சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். 2015ஆம் ஆண்டுக்கான சர்வதேச பாதுகாப்பு மாநாடானது ‘பூகோள அச்சுறுத்தல்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் தேசிய…

Read More

நீண்ட இடைவெளியின் பின்னர் நாடாளுமன்றில் தம்பதிகள்

மூன்று தசாப்த கால இடைவெளியின் பின்னர் இலங்கை நாடாளுமன்றிற்கு கணவனும் மனைவியும் செல்லும் முதல் சந்தர்ப்பம் இன்று பதிவாகியிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட தயா கமகே மற்றும் தேசியப் பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்ட அனோமா கமகே ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். வர்த்தகரான தயா கமகே, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தயா கமகே இதற்கு முன்னதாக கிழக்கு மாகாண சபையின்…

Read More

ஜனாதிபதி தலைமையில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் 64 வது மாநாடு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 64 ஆவது மாநாடு இன்று  பொலன்னறுவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் கட்சியின் இம்முக்கிய நிகழ்வில் கலந்து கொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர்களை இணைக்கும் முயற்சியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

பாசிக்குடா கடலில் மூழ்கி பௌத்த பிக்கு மரணம்

மட்டக்களப்பு-பாசிக்குடா கடலில் குளித்துக் கொண்டிருந்த பௌத்த பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று நேற்று மாலை 03.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். சுற்றுலா பயணம் மேற்கொண்டு கடந்த 30.08.2015 அன்று கொழுப்பு பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்ட 34 பௌத்த பிக்கு மாணவர்கள் பல இடங்களுக்கும் சென்று நேற்று (01.09.2015) பாசிக்குடாவிற்கு வந்து குளிக்கும் போதே தெனிகே சந்தன (வயது – 22) என்ற பௌத்த பிக்கு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவர் குருணாகல்…

Read More

எதிர்க்கட்சி தலைவர் பதவி நியமனம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் : ரவி கருணாநாயக்க

புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது குறித்து, அடுத்த நாடாளுமன்ற அமர்வில் முடிவெடுக்கப்படுமென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன், யாரும் எதிர்பார்க்காத ஒருவரே எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுவாரெனவும், இந்த முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் குறித்த சர்ச்சை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அதனை தீர்மானிக்கும் பொறுப்பை எதிர்க்கட்சிகளிடமே ஜனாதிபதி வழங்கியுள்ளமை …

Read More

இஸ்ரேல் ராணுவத்தின் கோர முகம் (வீடியோ இணைப்பு)

Israeli soldier scuffles with Palestinian boy https://www.youtube.com/watch?v=R9f_hNviSOQ இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய 11 வயது பாலஸ்தீன சிறுவனை வெறித்தனமாக இஸ்ரேல் ராணுவ “வீரர்” ஒருவர் கைது செய்யும் வீடியோ காட்சி உலகை உலுக்கி வருகிறது. இஸ்ரேல்- காசா எல்லைப்பகுதியின் அருகாமையில் உள்ள மேற்கு கரையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக கடந்த 28-ந் தேதியன்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், சிறுவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் மிகவும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியது. இதில்…

Read More

பாதிரியார் உட்பட 480 பேர் இஸ்லாத்தை தழுவினர்

ருவாண்டா நாட்டில் கிறிஸ்த்துவ பாதிரியாரோடு சேர்த்து மொத்தம் 480 பேர் நேற்று முன்தினம் ( 31-08-2015) இஸ்லாத்தை ஏற்றனர். மேலும், தங்களது கிருஸ்துவ வழிபாட்டு தளத்தை பள்ளிவாசலாக மாற்றினர். அல்லாஹ் இவர்களின் இம்மை மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைக்கட்டும் ஆமீன். அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும், மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும், உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக –…

Read More

அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆக வரையறை

தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆகவும், ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 48 ஆகவும் வரையறுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்கள் 45 பேரையும், பிரதி அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் பொறுப்புக்களுக்கு 48 பேரையும நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆளும் கட்சியின் இந்த யோசனை உத்தியோகபூர்வமாக நேற்று நாடாளுமன்ற செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கையை நாடாளுமன்றின் ஊடாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென 19ம் திருத்தச் சட்டத்தில்…

Read More