Headlines

ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்துபசாரம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்துபசாரம் ஒன்றை வழங்கியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் நேற்று ஜனாதிபதியினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. எட்டாவது நாடாளுமன்றின் முதல் அமர்வுகள் நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி விசேட உரையொன்றினை நேற்று ஆற்றியிருந்தார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விசேட இராப்போசன விருந்துபசாரம் ஒன்றை வழங்கியிருந்தார். ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு இந்த விசேட விருந்துபசாரம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

புதிய சபாநாயகருக்கு பிரதமர் வாழ்த்து!

சபாநாயகர் பதவி என்பது இந்நாட்டு பாராளுமன்றின் உயரிய பதவியாகும். அதேபோல் நாட்டின் மூன்றாவது உயர்ந்த பதவியாகும் என புதிய சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கான வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். அவ்வாழ்த்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இரண்டு ஆண்டுகள் இணைந்து செயற்படவேண்டும். புதிய பாராளுமன்றம் முறையாக செயற்பட சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் வழங்கிய ஒத்துழைப்பு பாராட்டத்தக்கவை. நாம் அனைவரும் இணைந்து…

Read More

அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டத்தை கொண்டுவரும் பாராளுமன்றமாக இச்சபை அமைய வேண்டும் – றிஷாத் பதியுதீன்

கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்றும் பௌத்தம், இந்து, கத்தோலிக்கம், இஸ்லாம் என்று பிரிந்து கிடக்கின்ற உள்ளங்களை ஒன்று சேர்க்கின்ற நல்லதொரு தீர்வுத் திட்டத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டத்தை கொண்டுவருவதற்கான பாராளுமன்றமாக இது அமைய வேண்டும். …என 8வது நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதலாவது அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்  றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். (VIDEO)

Read More

மீனில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்

ஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதை விடவும் மீன் வகைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்… அது உண்மையும்கூட… மீனில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்களையும் சில பயன்களையும் பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம்… மீனின் மொத்த எடையில் சராசரியாக 18% புரதம் உள்ளது. ஏனைய புரதங்களைப் போன்றே மீன் புரதமும், உடலின் ஆற்றலுக்கு தேவையான சக்தியை அளிக்கவும், உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கு தேவையான அமினோ அமிலங்களைக்கொடுக்கவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை…

Read More

இன்று முதல் இலவச அஞ்சல் வசதி

தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட முத்திரை இலவச அஞ்சல் வசதி மீண்டும் இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக அஞ்சல் மா அதிபர் டி.எம்.பி.ஆர். அபயரத்ன தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 2015.06.26ஆம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியும் இரத்துச்செய்யப்பட்டிருந்தது. அதன்படி சகல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமது கடமையின் நிமித்தம் கடிதம் அனுப்புவதற்காக வழங்கப்பட்டிருந்த விசேட முத்திரையை பாவித்து கடிதம் அனுப்பும் வரப்பிரசாதம் நிறுத்தப்பட்டிருந்தது. புதிய நாடாளுமன்றத்துக்கு தெரிவு…

Read More

தேர்தல் பிரச்சார விளம்பர செலவுகளை வெளிப்படுத்தும் வகையில் சட்டம் அறிமுகம் செய்யப்பட வேண்டும்: மஹிந்த

எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும் தேர்தல்களின் போது இலத்திரனியல், அச்சு ஊடகங்களில் ஒளி, ஒலிபரப்பு மற்றும் பிரசூரிக்கப்படும் விளம்பரங்களுக்கான கட்டண விபரங்களை வெளியிடும் வகையில் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட வேண்டும். இலத்திரனியல் ஊடகமொன்றில் பிரச்சார விளம்பரம் ஒன்று ஒளி, ஒலிபரப்புச் செய்யப்படும் ஒவ்வொரு தடவையும் அதற்கான கட்டணத்தை வெளியிட வேண்டும். அச்சு ஊடகங்களில் பிரசூரம் செய்யும் போதும் இவ்வாறு கட்டண விபரங்கள் குறிப்பிடப்பட வேண்டும். தேர்தல்களின் போத சில வேட்பாளர்கள் பாரியளவில் பணத்தை செலவிட்டு விளம்பரம் செய்யும் அதேவேளை,…

Read More

உங்கள் செல்லப் பிள்ளைகளை சிறகைவிரித்து பறக்கவிடுங்கள்!

பெற்றோர்களே, குழந்தைகளிடம் நீங்கள் அன்பு காட்டுவது சரிதான்! அதற்காக அவர்களின் கையை விடாமல் அவர்களுடனே பயணிக்க எண்ணக்கூடாது. நம்மிடமிருந்து உருவானதால் அவர்களது வாழ்வை, வாழவிடாமல் நம் இசைக்கு அவர்களை ஆடவிட்டு நெருக்கக் கூடாது. நாம் சிறு வயதில் பாடக் கற்றிருக்கலாம், ஆடக் கற்றிருக்கலாம் என்கிற நமது ஆசைகளை குழந்தைகள் மீது சுமையாய் ஏற்றக் கூடாது. அவர்கள் குழந்தையாக சுற்றித் திரிய, தமது மனம் எந்தப் பக்கம் போக விரும்புகிறது என்பதை அறிவதற்காகவாவது அவர்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுக்க…

Read More

ஆன்மீக வளர்ச்சியே ஆத்ம திருப்தியளிக்கும் : ஜனாதிபதி

அனைத்து துறைகளிலும் நாம் வளர்ச்சியடைந்தாலும், ஆன்மீக வளர்ச்சியே ஆத்ம திருப்தியளிக்குமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க கண்டி எசல பெரஹராவின் இறுதி நிகழ்வு, நேற்று மகாவலி கங்கையில் இடம்பெற்ற நீர்வெட்டு சடங்குடன் நிறைவுக்கு வந்தது. இதனையடுத்து கண்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விசேட வைபவத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி, இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ‘கண்டி பல்லேகலயில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள சர்வதேச பௌத்த மையத்தைஇ மேலும் விஸ்தரித்து பௌத்த…

Read More

இலங்கைக்கு முழுமையான ஆதரவு வழங்கும் அவுஸ்திரேலியா

அபிவிருத்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு உட்பட பல அவற்றில் உள்ளடக்கப்படும் என் அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் ராபின் மூடி தெரிவித்துள்ளார். இருதரப்பு வர்த்தகம் பெறுமதி தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகின்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கல்வி துறையில் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் அதிக தொடர்புள்ளதாக அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

புதிய பாராளுமன்றில் அநுர குமார உருக்கமான பேச்சு

இரண்டு கோடி மக்களால் நிரப்ப முடியாத பாராளுமன்றம் அவர்கள் சார்பான 225 உறுப்பினர்களால் நிரப்பப் பட்டுள்ளது. எனினும், அப்பாராளுமன்றின் ஜனநாயகம் மற்றும் நன்னடைத்தை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டிய பொறுப்போடு புதிய சபாநாயகர் தெரிவாகியுள்ளார் என தெரிவித்தார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க. கடந்த பாராளுமன்றில் ஒரு சிலர் தமதுரைகளின் போது நடந்து கொண்ட விதங்களைப் பார்க்கும் போது பாராளுமன்றுக்குள் பாடசாலை மாணவர்களை இனியும் அனுமதிக்க முடியுமா எனும் கேள்வியெழுந்தது எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர்,…

Read More

பிரதம கொறடா கயந்த, அவைத் தலைவர் கிரியெல்ல

ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலகவும் லக்ஷ்மன் கிரியெல்ல அவைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலகவும் லக்ஷ்மன் கிரியெல்ல அவைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Read More

குழுக்களின் பிரதித் தலைவராக செல்வம் அடைக்கலநாதன்

8ஆவது பாராளுமன்றத்தின்  குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை 8 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரியவும் பிரதி சபாநாயகராக  திலங்க சுமதிபாலவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலகவும் லக்ஷ்மன் கிரியெல்ல அவைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை சபை அமர்வுகள் பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More