எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சம்பந்தனை கைவிட மாட்டோம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் ஒன்றிணைந்து நாட்டில் எதிர்க்கட்சிக்கான பணியை சரியாக செய்யும். எதிர்க்கட்சியாக செயற்படும் போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சம்பந்தனை கைவிடமாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அவசியமான எல்லா சந்தர்ப்பங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணியினர் நேற்று கட்சித் தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர்…
