Headlines

லலித் வீரதுங்கவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு  கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. ஸ்ரீ லங்கா தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் நிதியை முறைகேடான பயன்படுத்தியமை தொடர்பிலயே இவருக்கு இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

தொழிற்சாலை கழிவு அகற்றல் தொடர்பில் புதிய அரசாங்கம் முக்கியமான செயற்பாடுகளினை கொண்டுள்ளது!

“சூழல் சீர்கேட்டை தடுக்கும் வகையில், தொழிற்சாலை கழிவு அகற்றல் தொடர்பில் புதிய அரசாங்கம் முக்கியமான செயற்பாடுகளினை கொண்டுள்ளது. இலங்கையின் சூழல்நட்பு தொழிற்துறை கலாசார வளர்ச்சிக்கும் மற்றும் தொழில்துறை கழிவு அகற்றலுக்கும் அரசாங்கத்தின் இந்த முக்கிய செயற்பாடுகள் பாதுகாப்பாக அமையும்” என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கையில் முதன் முறையாக சர்வதேச தொழில்துறைகளின் “அபாயகரமான பொருட்களின் பாதுகாப்பு மீதான முகாமைத்துவத்தை நோக்கி” என்ற கருப்பொருளில் நேற்று (17) வியாழக்கிழமை ஹில்டன் ஹேர்ட்டலில் நடைபெற்ற…

Read More

அகமத் முகமதுவின், தன்னம்பிக்கை வார்த்தைகள்..!

விளைவுகளை பற்றி கவலைப்படாமல் நமது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று வெடிகுண்டு தயாரித்ததாக தவறுதலாக கைது செய்யப்பட்ட சிறுவன் தெரிவித்துள்ளான். அமெரிக்காவை சேர்ந்த அகமத் முகமது என்ற சிறுவன் தான் செய்த கடிகாரத்தை ஆசிரியரிடம் காண்பிப்பதற்காக பள்ளிக்கு எடுத்து சென்றுள்ளான். ஆனால் அதை வெடிகுண்டு என்று நினைத்த பள்ளி நிர்வாகம் பொலிசுக்கு தகவல் அளித்தது. இதையடுத்து அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு பின்னர் உண்மை தெரிந்ததும் விடுவிக்கப்பட்டான். இந்நிலையில் அகமத் முகமதுக்கு ஏராளமான மக்கள் தங்கள் ஆதரவை…

Read More

சிரியாவிலிருந்து வெளியேறிவரும் அகதிகள் மீது, ஹங்கேரி பொலிஸார் தாக்குதல்

ஹங்கேரி பொலிஸார் குடியேறிகள் மீது கண் ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீச்சியடித்தது குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். தஞ்சக்கோரிக்கையாளர்கள் மீது இவ்வாறு நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார். ஹங்கேரி-செர்பிய எல்லையில் இருக்கும் ஹொர்கோஸ்-ரொஸ்கே கடவையில் நேற்று முன்தினம் இந்த மோதல் ஏற்பட்டது.  இதன் போது ஆத்திரமடைந்த நுற்றுக்கணக்கானவர்கள் ஹங்கேரி எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் கம்பி வேலியை அகற்ற முயன்றுள் ளனர். இந்த பதற்றத்தில் இரு…

Read More

ஒபாமாவுடன் பேச்சுவார்த்தை நடாத்த, ஜனாதிபதி மைத்திரி திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவுடன் பேச்சுவார்த்தை நடாத்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்ட அமர்வுகளில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.இலங்கைப் படையினரை அதிகளவில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுத்த ஜனாதிபதி விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி மற்றும் ஏனைய உலகத் தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் ஹல் ஹ_செய்னை இலங்கைக்கு விஜயம்…

Read More

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முக்கியத்துவமிக்க பேச்சு..!

”குற்றம் இழைக்கப்பட்டுள்ளதா என ஆராய்ந்து பார்க்குமாறே ஐ.நா கூறியுள்ளது” உண்மையை தெரிந்து பொறுப்புடன் செயற்படவேண்டும்;; ஜே.ஆர். ஜேயவர்தனவின் நினைவு தின நிகழ்வு கொழும்பு ஜெயவர்தன கலாசார நிலையத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, அமைச்சர்கள் கயந்த கருணாதிலக்க, விஜயதாச ராஜபக்ஷ ஜோன் அமரதுங்க உட்பட அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்தும்…

Read More

ஜே.வி.பி.யின் அசத்தலான கோரிக்கைகள் (முழு விபரம் இணைப்பு)

இலங்கையின் துரித மறுசீரமைப்புக்கான முன்மொழிவுகள் என்ற தலைப்பில் மக்கள் விடுதலை முன்னணி, தேசிய அரசாங்கத்திடம் பிரதான 20 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.  ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அந்த முன்மொழிவுகளின் முழு வடிவம் இதோ, துரித மறுசீரமைப்புக்கான கோரிக்கைகள் ஜனாதிபதி ராஜபக்ஷாவின் ஒரு தசாப்த காலத்திற்கு அண்மித்த ஆட்சியின்போது நாட்டில் சமூக அரசியல் துறையில் புரையோடிப்போயிருந்த அஜீரணமான அரசியல் கலாசாரத்துக்குப் பதிலாக நல்லாட்சி கொள்கையின் அடிப்படையில் புதிய மக்கள் வரணை உருவாக்கி…

Read More

ஹெம்மாதகம பொலிஸ் நிலைய பொருப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் SLTJ புகார்

ஹெம்மாதகம பகுதியில் கடந்த 06.09.2015 ம் திகதி ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த மற்றுமத அன்பர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியில் அத்து மீறி நுழைந்து நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தி ஜமாஅத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராஸிக்கை தாக்க முயற்சி செய்து கொலை மிரட்டல் விடுத்து, அங்கிருந்த சகோதரர்களையும் தாக்க முயற்சி செய்து விற்பனைக்காக வைத்திருந்த மார்க்க புத்தகங்களையும் பலவந்தமாக பறித்து சென்ற பொது பல சேனா (BBS) அமைப்பினருக்கு எதிராக ஹெம்மாதகம பொலிஸ் நிலையத்தில்…

Read More

மரண தண்டனை இலங்கையில் அமுல்படுத்தப்படாது – மங்கள சமரவீர

மரண தண்டனை இலங்கையில் அமுல்படுத்தப்படாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவாவில் கூறியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொட்டாதெனிய சேயா என்ற சிறுமி படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தூக்கிலிடுமாறு பல்வேறு தரப்பினரும் கோரி வரும் நிலையில், வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். மரண தண்டனை சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கப்படும். மரண தண்டனைக்கு எதிராக ஜெனீவாவில் சர்வதேச நாடுகள் முன்வைத்த யோசனைக்கு அமைச்சர் மங்கள சமரவீரவும் இணங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, உலகின் பல நாடுகளில்…

Read More