Headlines

வெளிநாட்டு வேலை – பெருமையா? கொடுமையா?

– ஷான் – பையன் என்ன பண்றாரு…? ‘பயணத்துல இருக்காரு’ – என வெளிநாட்டு வேலையை பற்றி பெருமையாக சொல்ல கேட்கிறோம் . இன்னும் பலர் ‘camp -dubai’ என்று போட்டு மாப்பிள்ளையின் வேலை பற்றி திருமண அழைப்பிதழில் பெருமையாகப் போடுவதை காணலாம். இப்படிப்பட்ட வெளிநாட்டு வேலைக்காக, படிப்புக்காக ஆயிரக்கணக்கான  இளைஞர்கள் ஒவ்வோர் ஆண்டும் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ‘சொல்வது ஒன்று, செய்வது ஒன்று’ – பொதுவாக அரசியல்வாதிகளுக்குத்தான் இந்த கூற்று பொருத்தமாக இருந்தது. இப்போது வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் பொருந்தி வருகிறது. வேலைக்கு…

Read More

கூட்டம் கூட்டமாய் இஸ்லாத்தில் இணையும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள்!!

பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை இஸ்லாம் அதிவேகமாக கவர்ந்து வருகிறது சில தினங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவின் ஜித்த நகரில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் அழைப்பு மையத்த்தின் சார்பில் மாற்று மத நண்பர்களை சந்தித்து இஸ்லாத்தை விளக்கும் ஒரு நிகழ்ச்சி நடத்த பட்டது இந்த நிகழ்ச்சியில் பல பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்த முஸ்லிம் அல்லாதோருக்கு இஸ்லாத்தை பற்றி சிறு விளக்கம் கொடுக்க பட்டது அநத விளக்கத்தின் பலனாய் 23 இளைஞர்கள் இஸ்லாத்தில் இணைந்தனர் அந்த அழகான காட்சிக்கு சாட்சியாய் நிர்க்கும் புகைபடம்…

Read More

சவூதியில் வாஷிங் மெஷினுக்குள் விழுந்து சிக்கிய 3 வயது குழந்தை

சவுதி அரேபியாவில் விளையாடும்போது வீட்டில் இருந்த வாஷிங் மெஷினுக்குள் தவறிவிழுந்து சிக்கிக்கொண்ட 3 வயது பெண் குழந்தையை உயிருடன் காப்பாற்ற அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் நடத்திய போராட்டம், ‘வைரல்’ புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களை கலக்கி வருகின்றது. பலமணி நேர போராட்டத்துக்கு பின்னர், வாஷிங் மெஷினை வெட்டி அந்த குழந்தையின் உயிரை காப்பாற்றிய பாதுகாப்பு படையினருக்கு பாராட்டு மழையும், அந்த குழந்தைக்கு இந்தகதி ஏற்பட காரணமாக இருந்த தாயின் அஜாக்கிரதைக்கு வசை மழையும் பெருகி வருகின்றது. அந்த தாய்க்கு…

Read More

கஃபாவின் விரிவாக்கப் பணிகள் முடியும் தருவாயில்!

கஃபாவின் விரிவாக்கப் பணிகள் கிட்டத் தட்ட முடிவுறும் தருவாயை எட்டியுள்ளது. ஹாஜிகள் கஃபாவை வலம் வர நான்கு தளங்கள் தற்போது கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் கிட்டத் தட்ட 114000 ஹாஜிகள் கஃபாவை வலம் வர முடியும். 76000 ஸ்கொயர் ஃபீட்டில் இந்த விரிவாக்கப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. செப்டம்பர் ஒன்பதாம் தேதி அனைத்து விரிவாக்கப்பணிகளும் ஹாஜிகளுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். ஹஜ் கிரியைகள் முடிந்தவுடன் அக்டோபர் 14 முதல் வழக்கம் போல் விரிவாக்கப்…

Read More

அமெரிக்காவில் லஞ்சம் தந்த இந்தியர் கைது

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் மதுபானக்கடை திறக்க விரும்பிய முகுந்த்குமார் படேல்(52) என்பவர் உள்ளாட்சி நிர்வாகத்திடம் இதற்கான அனுமதிகோரி இந்தியாவை சேர்ந்த விண்ணப்பித்தார். இதனை பரிசீலிக்க தங்களுக்கு உரிமை இல்லை என கூறிய அதிகாரிகள், உள்ளாட்சியைச் சேர்ந்த மக்கள் பிரநிதியிடம்தான் இதற்கான அதிகாரம் உள்ளது என்றனர். இதைத்தொடர்ந்து, கிழக்கு கிளீவ்லேண்ட் பகுதியின் உள்ளாட்சிப் பிரதிநிதியைச் சந்தித்த முகுந்த்குமார் படேல் இந்த விண்ணப்பத்தை அங்கீகரித்து கையொப்பமிட்டால், இரண்டாயிரம் அமெரிக்க டாலர்களை அவருக்கு லஞ்சமாக கொடுப்பதாக ஆசை காட்டினார். இதற்கு, அந்த…

Read More

வாக்கெண்ணும் நடவடிக்கையில் முறைகேடுகள் எதுவும் இடம்பெறவில்லை : தேர்தல்கள் ஆணையாளர்

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கையில், எந்தவித முறைகேடுகளும் இடம்பெறவில்லையென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். விருப்பு வாக்குகள் எண்ணும்போது முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக அண்மைய நாட்களாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணமுள்ளன. இது குறித்து ஊடகமொன்றிற்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தேர்தல்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் நன்மதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவற்றை சீர்குலைக்கும் நோக்கில் இக்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். விருப்பு வாக்குகள் எண்ணும்போது வேட்பாளர்களின் முகவர்கள்…

Read More

இலங்கையிலிருந்து நாளை புறப்படும் முதலாவது ஹஜ் குழு

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்படும் முதலாவது யாத்திரிகர்கள் குழு நாளை  புனித மக்கா நகர் நோக்கி புறப்படவுள்ளதுடன் இவர்களை முஸ்லிம் கலாசார பணிப்பாளர் உட்பட அதிகாரிகள் வழியனுப்பி வைக்கவுள்ளனர். ஸ்ரீலங்கன் ஏயார்லைன் மூலம் புறப்படவுள்ள ஹஜ் குழுவினர் அமானத் டிரவல்ஸ், ஸாஹியா டிரவல்ஸ் மற்றும் எம்.டி.எஸ். டிரவல்ஸ் ஆகிய முகவர்கள் ஊடாகவே செல்வதாக அகில இலங்கை ஹஜ் பிரயாண இயக்குநர் சங்கத் தலைவரும் சேப்வே டிரவல்ஸ் அதிபருமான எம்.ஆர்.எம். பாறூக் தெரிவித்துள்ளார்.

Read More

கோட்டாபயவிடம் விசாரணை எது குறித்து தெரியுமா?

ரக்னா லங்கா நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் நிதியை கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து, கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக, பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த நிறுவனத்தின் 500 ஊழியர்கள் மற்றும் 60 இலட்சம் ரூபாய் நிதி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தப்பட்டமை குறித்தே கோட்டாபயவிடம் வினவப்பட்டதாக, அந்த ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டீ சில்வா குறிப்பிட்டுள்ளார். இன்று காலை ஜனாதிபதி விசாரணை…

Read More

புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் இன்று வெளிநாடு பயணம்

புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட மங்கள சமரவீர, டி.எம்.சுவாமிநாதன், விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் இன்று  சுவிட்சர்லாந்து பயணமாகவுள்ளனர். சர்வதேச மாநாடுகளில் கலந்துகொள்ளும் நோக்கில் குறித்த மூவரும் நேற்று ( ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தமது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில்இ வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றுள்ள மங்கள சமரவீர ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டிலும்இ மீள்குடியேற்ற அமைச்சராக பதவியேற்றுள்ள டி.எம்.சுவாமிநாதன் அகதிகளுக்கான சர்வதேச மாநாட்டிலும் கலந்து கொள்ளவுள்ளனர். அத்துடன் சர்வதேச தொழிலாளர்…

Read More

உடன் பிறப்புகளை இழந்த சகோதரனின் கதறல்

– புகழேந்தி – பாடசாலைக்கு சென்ற எனது சகோதரன் மாலையாகியும் வீடு திரும்பாததையிட்டு பலஇடங்களிலும் தேடினோம் . இறுதியில் எனது சகோதரனின் சடலத்தினை அன்றைய தினம் சந்திவெளி பாலையடித்தோனா எனும் இடத்தில் கிடப்பதாக அறிந்தோம் என கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த ந.சிவலிங்கம் தமது சகோதரர் தொடர்பான விடயத்தினை கண்ணீர்மல்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இவ்வாறு தெரிவித்தார். களு­வாஞ்­சி­குடி மற்றும் வெல்­லாவெளியில் இடம்பெற்ற காணா­மல் ­போ­ன­வர்­களை கண்­ட­றியும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணையின் போது 255 புதிய முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­பட்­டன….

Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் 250 புதிய முறைப்பாடுகள்

களு­வாஞ்­சி­கு­டியில் நடத்­தப்­பட்ட காணா­மல் ­போ­ன­வர்­களை கண்­ட­றியும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணையின் போது 250 புதிய முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஆணைக்­குழு அறி­வித்­துள்­ளது. வெல்­லாவெளி மற்றும் களு­வாஞ்­சி­குடி பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வு­க­ளுக்­காக காணா­மல் ­போ­ன­வர்­களை கண்­ட­றியும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைகள் களு­வாஞ்­சி­குடி பிர­தேச செய­ல­கத்தில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்­றது. இதன்­போது ஆணைக்­குழு முன்­பாக காணா­மல் ­போ­ன­வர்­களின் உற­வி­னர்கள் சாட்­சி­யங்­களை அளித்­து­ வந்­தனர். வெல்­லாவெளி மற்றும் களு­வாஞ்­சி­குடி ஆகிய பிர­தேச செய­ல­கத்­துக்­குட்­பட்ட பகு­தி­களில் இருந்து 315 பேர் சாட்­சியம் அளிக்க அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர்….

Read More

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை எட்ட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது

தமிழ் பேசும் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை எட்­டு­வ­தற்­கான நல்­ல­தொரு சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. அதைப் பயன்­ப­டுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­துடன் கைகோர்க்க வேண்டும். அதேபோல் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் ஆத­ரவும் அவ­சி­ய­மா­னது என கோட்டே நாக­வி­கா­ரையின் விக­ரா­தி­ப­தியும் சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் தலை­வ­ரு­மான மாது­லு­வாவே சோபித தேரர் தெரி­வித்தார். வென்­றெ­டுத்த ஜன­நா­ய­கத்தை குழப்­பி­ய­டிக்க அதி­கார மோகம் கொண்ட ஒரு அணி தொடர்ந்து செயற்­பட்டு வரு­கின்­றது. அதற்கு இட­ம­ளிக்க வேண்டாம் எனவும் அவர் குறிப்­பிட்டார்….

Read More