Headlines

அமெரிக்க சிறந்த ஆடை தேர்வில் முஸ்லிம் பெண் முதலிடம்!

ஹிஜாபை வெறுத்து அரைகுறையை ஆடையை ரசித்து ருசித்து பார்க்கும் கலியுகத்தில் ஓர் ஆச்சர்யம்..! மாஷா அல்லாஹ்! பலஸ்தீனத்தை பூர்வீகமாக கொண்ட அஃப்ரார் ஸஹின் என்னும் மாணவிக்கு சிறந்த ஆடை அணிந்த பெண் எனும் கெளரவ பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், பல்லின நாட்டு, பல்லின மதங்களை சேர்ந்த 1000 கணக்கான மாணவிகள் கல்வி கற்கும் Clifton high school ல் நடந்த சிறந்த ஆடை அணியும் தேர்வில்தான் அஃப்ரார் ஸஹின் எனும் பலஸ்தீன மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். “ஹிஜாபை…

Read More

இதுதான் வளைகுடா வாழ்க்கை! (கவிதை)

நீங்கள் பஞ்சு மெத்தையில் படுக்கவேண்டும் . என்பதற்காக, நான் பாலைவனத்தில் படுக்குறேன் .. நீங்கள் குளிரும் மின்காற்றில் படுக்கவேன்டும் என்பதற்காக நான் அனல் காற்றில் படுக்குறேன் . உங்களின் நினைவுகள் என் கனவுகள். என் தோல்கள் மிரத்துப் போகுறது என் பாதங்கள் பிளந்து போகிறது. என் தலைமுறை வளர வேண்டும் என்பதற்காக… வெந்நீரால் என் வயதுடன் என் முடிகூட உதிர்ந்து போகிறது. – தமீம் –

Read More

மஹிந்தவின் முடிவு தேர்தல் களத்தை உற்சாகப்படுத்தும்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தேர்தலில் போட்டியிட எடுத்திருக்கும் தீர்மானம் தேர்தல் களத்தை உற்சாகப்படுத்தியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி விமர்சித்துள்ளது. மக்களால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகள் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் போட்டியிடுவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடனான வெற்றியை இலகுவில் பெற்றுத்தருமென்றும் ஐ.தே.க. பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். பல்வேறு ஊழல் மோசடி தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை தம்வசம் வைத்திருக்கும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருக்கு ஆதரவு வழங்கும் உறுப்பினர்களை மக்கள் நிராகரிப்பது…

Read More

இறந்தபோன தாத்தாவுடன் செல்பி; மதீனாவில்

கேமரா மூலம் தன்னைத்தானே போட்டோ எடுத்துக்கொள்வதுதான் ‘செல்பி’ (Selfie) எனப்படுகிறது. பெரும்பாலும் டிஜிட்டல் கேமரா அல்லது கேமரா உள்ள மொபைல் போன்கள் மூலம் ‘செல்பி’ எடுக்கப்படுகிறது. இன்றைக்கு ‘செல்பி’ ஒரு தொற்று நோய் போல எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. அதிலும் குறிப்பாக இளம் வயதினரிடையே அது ஒரு ‘டிஜிடல் புற்று நோய்’ போல விரைந்து பரவுகிறது. ஸ்மார்ட் போன்கள் செல்பி ஆசைக்கு எண்ணை வார்க்கிறது, சமூக வலைத்தளங்கள் அதைப் பற்ற வைக்கின்றன. சமூக வலைத்தளங்களில் கண் சிமிட்டும்…

Read More

பலசேனா நாக பாம்பு தலைதூக்காமலிருக்க, முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும் – விஜித்த தேரர்

நாட்டிலுள்ள முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாகவும் ஏனைய கட்சிகளுடனும் சேர்ந்து போட்டியிடுவதைவிட, ஒன்றுபட்டு ஒரே அணியில் போட்டியிடுவதன் மூலம் பலமான சக்தியாக உருவெடுப்பதுடன் பொதுபல சேனாவையும் எதிர்கொள்ள முடியுமென வட்டரக்க விஜித்த தேரர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் எதிர்வரும் 6 ஆம் திகதிக்கு முன்னர் உலமா சபை, முஸ்லிம் அரசியல்வாதிகளுடனும் கலந்துரையாட உள்ளேன். சிறுபான்மையினரை சீண்ட பொதுபல சேனா இப்போது நாகப்பாம்பு வடிவத்தில் உருவேடுத்துள்ளது. இந்த விசம் நிறைந்த பாம்பு தலைது!க்காமலிருக்க வேண்டுமென்றால் முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

Read More

குயின்ஸ்லாந்தில் முஸ்லிம் மாணவர்களின் போராட்டம்!

கல்லூரியில் தொழுகைக்கு அனுமதி மறுத்ததால் கொட்டும் மழையில் கல்லூரி வளாகத்தில் தொழுகையை நிறை வேற்றும் குயீன்ஸ்லாந்து பல்கலைகழக முஸ்லிம் மாணவர்கள்.. இவர்களின் இந்த நியாயமான கோரிக்கை நிறை வேற நாமும் பிரார்த்திப்போம். இந்த மாதம் நவம்பர் 1 ம் தேதியிலிருந்து இவர்கள் வெட்ட வெளியில் தொழுகிறார்கள்.

Read More

பம்பலப்பிட்டியில் ஏற்பட்ட அதிர்வு தொடர்பாக ஆராய்வு

கொழும்பு பம்பலபிட்டி பகுதியை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட அதிர்வு , நிலநடுக்கமா என்பது தொடர்பில் கண்டறிவதற்கான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பம்பலபிட்டி பகுதியில் நேற்று மாலை நான்கு மணியளவில் மூன்று தடவைகள் அதிர்வுகள் ஏற்பட்டதை தாம் உணர்ந்ததாக அப் பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். அதிர்வுகள் உணரப்பட்டதை அடுத்து பாதுகாப்பான இடத்திற்கு தாம் சென்றதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய…

Read More

மஹிந்த வந்தால் முஸ்லிம்களை பழிவாங்குவார் – ஹரீன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, தனது வாய் காரணமாக மீண்டும் ஒரு முறை வாங்கிக் கட்டிக்கொள்ளப் போவதாக ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மஹிந்த அரசியல் சண்டியராக மாற முயற்சித்து வருவதாகவும், தவறுதலாகவேனும் மஹிந்த ஆட்சிக்கு வந்தால், இந்த நாட்டில் உள்ள தமிழ் முஸ்லிம் முற்போக்கு கட்சிகளிடம் பழிவாங்குவார் என்பது நிச்சயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மஹிந்த இல்லாமல் போயுள்ளதாகவும், மஹிந்தவுடன் இணைந்து கொள்ள மைத்திரிக்கு தார்மீக ரீதியான உரிமை கிடையாது எனவும் அவர்…

Read More

தேர்தல் விசாரணைப் பிரிவு நாளை முதல் இயக்கம்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை இலக்கு வைத்து தேர்தல் விசாரணைப் பிரிவு இன்று முதல் இயங்க உள்ளதாக அறிவிக்கப்படுகிறது. தேர்தல் திணைக்களத்தில் இந்த பிரிவு நாளை முதல் இயங்க உள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாவட்டச் செயலகங்களில் தேர்தல் விசாரணைப் பிரிவு இந்த மாதம் 6ம் திகதி முதல் இயங்க உள்ளது. தேர்தல் விசாரணைப் பிரிவுகள் பிரதேச செயலக மட்டத்தில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் அந்தந்த…

Read More

119 வயதிலும் நோன்பு நோற்கும் பெண்மணி !

அமெரிக்கா ஆர்கனாஸ் என்ற பகுதியில் வசிக்கும் கெர்ட்ரூட் வேவர் (117 வயது)என்ற பெண் தான் உலகில் அதிக வயதான பெண் என்று உலகில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மலேசியாவில் கம்போங் ஜானின்,குவாலா நெராங் என்ற பகுதியில் வசிக்கும் புவான் அஹ்மது என்ற இந்த மூத்த வயோதிக பெண்ணின் வயது 119 என்று மலேசிய பதிவு இலாகாவால் வழங்கப்பட்ட ஆதாரம் கூறுகிறது. இந்த பெண் தனது எம்புன் (90)என்ற சகோதரியுடன் வசித்து வருகிறார். இவர் இத்தனை தள்ளாத வயதிலும்…

Read More

சுதந்திர கட்சி என்னை துரோகி என கவனித்தது

நவம்பர் 21ம் திகதி தொடக்கம் ஜனவரி 8ம் திகதிவரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தன்னை ஒரு துரோகி என கவனித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து தான் வெளியேறியமை 37 வருடங்களாக செய்ய முடியாத நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அதிகாரங்களை குறைக்கவே என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் தலைவர்கள் அதனை செய்யவில்லை எனினும் தனக்கு அதிகாரம் கிடைத்ததும் அதனை செய்து முடித்ததாக அவர் கூறினார். 19வது திருத்தச் சட்டத்தை எப்படியாவது…

Read More

தர்கா நகரில் நடந்தது என்ன..?

தர்கா நகரில் 30.06.2015 சிங்கள முஸ்லிம் இளைஞர்களிடையே கைகலப்பொன்று ஏற்பட்டுள்ளது இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் விரைந்துசென்று பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தர்கா நகர் பிரதேசத்தில் கடந்தவருடம் இடம்பெற்ற கலவரத்தின் போது தீக்கிரையாக்கப்பட்ட மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலுக்கு அருகில் தராவீஹ் தொழுகை இடம்பெற்றபோது, சிங்கள இளைஞரொருவர் முச்சக்கர வண்டியின் வானொலி பொட்டியில் சத்தமாக பாடல் ஒலிபரப்பியுள்ளனர். இதனை நிறுத்துமாறு முஸ்லிம் இளைஞர்கள் தெரிவித்தும் நிறுத்தாமையினால் முஸ்லிம் இளைஞர்களினால் குறித்த நபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்….

Read More