Headlines

5 வயதில் குர்ஆனை முழுமையாக மனனம் செய்த சிறுவன்!

சையது அலி பைஜி  நீங்கள் படத்தில் பார்க்கும் சிறுவனின் பெயர் சல்மான் சவுதி அரேபியாவின் ஜித்தா நகரை சார்ந்தவன் வெறும் ஐந்து வயதை மட்டுமே நிறைவு செய்துள்ள அந்த சிறுவன் இறைவனின் வேதமான திருகுர்ஆனின் 30 பாகங்களை தனது மனதில் உறுதியாக பதிய வைத்து சாதனை படைத்துள்ளான் ஜந்து வயதிலேயே திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து சாதனை படைத்துள்ள அந்த சிறுவனை உர்ச்சாக படுத்தும் விதத்தில் ஜித்தவில் அவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது அவனது ஆசிரியர்கள்…

Read More

16 நாட்களில் 14 மில்லியன் முஸ்லிம்கள் மக்காவுக்கு வருகை!

இந்த ஆண்டு நடைபெற்று வரும் மாதத்தின் கடந்த 16 நாட்களில் 14 மில்லியன் முஸ்லிம்கள் பல்வேறு உம்ரா செய்வதற்க்காக மக்காவுக்கு வந்து சென்றுள்ளனர். இது சென்ற ஆண்டுகளை ஒப்பிடுகையில் 40 சதவீதம் அதிகமாகும். மேலும் இந்த நாட்களில் 6 லட்சத்து 50 ஆயிரம் வாகங்கள் மக்கா நகருக்கு வந்து சென்றுள்ளன. இந்த கணக்கெடுப்புகளை இளவரசர் காலித் அல் ஃபைசல் அறிவித்தார். மேலும் இந்த ரமலானில் 25 மில்லியன் மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.

Read More

ராஜிவ் காந்தியை தாக்கியவர்தான், பொதுபல சேனாவின் தலைமை வேட்பாளர்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியைத் தாக்கிய இலங்கை கடற்படையின் முன்னாள் சிப்பாய் விஜித் ரோகண விஜேமுனி கம்பஹா மாவட்டத் தலைமை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார். பொது பல சேனாவின் அரசியல் கட்சியான பொது ஜன பெரமுன (பி.ஜே.பி) சார்பிலேயே இவர் கம்பஹா மாவட்ட தலைமை வேட்பாளராக போட்டியிடுகிறார். அதேவேளை, BJP கட்சியின் தேசிய அமைப்பாளர் வண.விதாரந்தெனிய நந்த தேரர், கொழும்பு மாவட்டத்தில் தலைமை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார்.

Read More

இலங்கை- சீன நட்புறவுச் சங்கத்தினால் நடத்தப்படும் பேச்சுப் போட்டி

அஸ்ரப் ஏ. சமத் இலங்கை- சீன நட்புறவுச் சங்கத்தினால்  சீனா  -உலகத்தின் கவனத்தை ஈத்த” பட்டுப பாதை வா்த்தக வட்டாரத்தை மற்றும் 21ஆம் நுாற்றாண்டு கடற் பட்டுப்பாதையை ஒன்றாய் கட்டி எழுப்புவதற்கான திட்டம்” என்ற தலைப்பில்  இலங்கையில் உள்ள பாடாசலை மாணவா்கள், பல்கலைக்கழக மாணவா்களுக்கிடையே மும் மொழிகளிலும்  பேச்சுப் போட்டி ஒன்றை ஒழுங்கு படுத்தியுள்ளது. மேற்படி விடயமாக இலங்கை – சீன நட்புரவுச் சங்கத்தின்  ஊடக மாநாடு கொழும்பு ஹட்டன் நஷனல் வங்கியின் தலைமையக மாநாட்டு மண்டபத்தில்…

Read More

அனைவரும் கைகோர்க்க வேண்டும் – ஜனாதிபதி

பொறாமை, கோபம், குரோதம் என்பவற்றை ஒதுக்கிவிட்டு நட்புறவுடனும் கூட்டொருமைப்பாட்டுடனும் நாட்டை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வதற்கு அனைவரும் கைகோர்த்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற  இப்தார் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.vk

Read More

விக்­ர­ம­பாகு வைத்தியசாலையில்..!

நவ­சம சமா­ஜக்­கட்­சியின் தலைவர் கலா­நிதி விக்­ர­ம­பாகு கரு­ணா­ரட்­ன திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 ஆம் திகதி முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

Read More

மீண்டும் ஹஜ் சர்ச்சை: கோட்டா மீள் பகிர்வுக்கு முகவர்கள் ஆட்சேபனை

ஹஜ் குழு­வினால் நேற்று உயர் நீதி­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்ட முக­வர்­க­ளுக்­கி­டை­யி­லான கோட்டா மீள்­ப­கிர்வு பட்­டி­ய­லிலும் முறை­கே­டுகள் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறி ஹஜ் கோட்டா மீள் பகிர்­வுக்கு முக­வர்கள் ஆட்­சே­பனை தெரி­வித்­துள்­ளனர். 2012 ஆம் ஆண்டு உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் வழங்­கிய ஹஜ் வழி­காட்­டல்கள்(Guide Lines SCFR 500/2012) மீண்டும் மீறப்­பட்­டுள்­ள­மை­யினால் கோட்டா பகிர்­வினை ஏற்றுக் கொள்ள முடி­யா­தென பெரும்­பா­லான ஹஜ் முக­வர்கள் மறுப்புத் தெரி­வித்­துள்­ளனர். இதனால் இலங்­கை­ய­ருக்­கான ஹஜ் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. ஹஜ் முக­வர்­க­ளுக்­கான நேர்­மு­கப்­ப­ரீட்சை ஒரு சுயா­தீனக் குழு­வினால் நடாத்­தப்­பட்­டாலும்…

Read More

ஓகஸ்ட் 5, 6ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு

ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஓகஸ்ட் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் 3ஆம் திகதி வாக்களிக்கலாம் என்று மேலதிக தேர்தகள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.

Read More

சிங்களவன் அநாதையாகியுள்ளான்; கண்டுபிடித்த ஞானசாரர்

சிங்களவன் பிறந்த மண்ணில் அநாதையாகியுள்ளான் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இப்போதேனும் நாம் அவர்களை எழுப்ப வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் நாட்டை ஆட்சி செய்து வருகின்றனர். அதிகார மோகம் காரணமாக ஆட்சியாளர் அதற்கு இடமளித்துள்ளார். றிஷாத் பதியூதின் கடந்த அரசாங்கத்திலும் அமைச்சர் இந்த அரசாங்கத்திலும் அமைச்சர். காலத்தை விரயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மஹிந்தவின் வாக்குகளை உடைக்க நாம் வரவில்லை. நாம் யாருடைய வாக்குகளையும் சிதறடிக்க முயற்சிக்கவில்லை. அரசியல்வாதிகளினால் நாட்டுக்கு உரிய சேவை…

Read More

20 பேருக்கு போட்டியிட தடை: ஜனாதிபதி தீர்மானம்

கடந்த ஆட்சிக் காலத்தில் ஊழல், மோசடி மற்றும் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருக்கும் 20 பேரின் வெட்புரிமையை தடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று செவ்வாய் இரவு நடைபெற்ற விஷேட சந்திப்பில் இந்த முடிவுகள் எடுக்கபட்டதாக அரசியல் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாக இவர்களுக்கு வேட்புமனு வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி.க்களான மேர்வின் சில்வா, துமிந்த சில்வா,…

Read More

அ.இ.ம.கா.வின் இறுதித் தீர்மானம் நாளை

-எம்.எஸ்.எம். ஹனீபா எதிர்வரும் பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டியிடுவது தொடர்பாக ஆராயும் அரசியல் அதியுயர் பீடம், அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் நாளை வியாழக்கிழமை (09) கூடி, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிலைப்பாடு தொடர்பாக கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய…

Read More

உரி­மை­யா­ளரை சுட்­டுக்­கொன்­று­விட்டு தங்கநகைக்கடையில் கொள்ளை

மினு­வாங்­கொடை – கொழும்பு வீதியில் உள்ள பழைய சந்தை கட்­ட­டத்­தொ­கு­தி யின் கீழ் மாடியில் அமைந்­துள்ள தங்க நகை கடையில் நேற்று மாலை பாரிய கொள் ளைச் சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது. நகைக்­க­டையின் உரி­மை­யா­ளரை சுட்­டுக்­கொன்று விட்டு பெருந்தொகை­யான நகை­களை கொள்­ளை­யர்கள் கொள்­ளை­யிட்டு சென்­றுள்­ள­தா­கவும் இதன் போது கொள்­ளை­யர்­களின் துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­காகி கடையின் சேவை­யாளர் ஒருவர் படு­கா­ய­ம­டைந்­துள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கேச­ரிக்கு தெரி­வித்தார். கொள்­ளை­யர்கள் நால்வர் இந்த கொள்­ளைக்­காக இரு…

Read More