Headlines

இஸ்லாத்தை ஏற்றபோது பெற்ற மனஅமைதி இன்னும் விலகவில்லை

இஸ்லாத்தை ஏற்றபோது பெற்ற மனஅமைதி இன்னும் விலகவில்லை இஸ்லாத்தை ஏற்றபோது பெற்ற மனஅமைதி இன்னும் விலகவில்லை இன்ஷா அல்லாஹ், இனியும் விலகாது. லாரன் பூத் (Lauren Booth) – அரசியல் விமர்சகர், ஊடகவியலாளர்,பாலஸ்தீன மக்களுக்காக போராடியவர்/போராடிக்கொண்டிருப்பவர். இவற்றிற்கெல்லாம் மேலாக, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் நெருங்கிய உறவினர் என்ற அடையாளம். சென்ற ஆண்டு இவரது பெயரை உலகின் மூளைமுடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்த்தன ஊடகங்கள். அதற்கு காரணம், நம்மில் பெரும்பாலானோர் அறிந்ததுதான். ஆம், அவர் இஸ்லாமை தழுவிய…

Read More

இந்திய ரூபாய் நோட்டுகளில் நோய்க் கிருமிகள்!

இந்திய ரூபாய் நோட்டுகளில் அதிக ளவில் நோய்க் கிருமிகள் இருப்பதாகப் புதிதாக மேற் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் அதிகளவில் பரிமாறிக் கொள்ளப்படும் ரூபாய் நோட்டுகள், அதிக அளவில் நோய்க் கிருமி கடத்திகளாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மத்திய அறிவி யல் மற்றும் தொழில் ஆய்வு மையத்தின் கீழ் இயங்கும் `இன்ஸ் டிட்யூட் ஆஃப் ஜினோமிக்ஸ் அண்ட் இன்டக்ரேட்டிவ் பயாலஜி’ மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் இந்திய ரூபாய் நோட்டுகளை ஆராய்ந்தனர். இதற்காக…

Read More

வாரியபொல யுவதியால் தாக்கப்பட்ட இளைஞர் குற்றவாளியாக அறிவிப்பு

வாரியபொல யுவதியால் தாக்கப்பட்ட இளைஞர் குற்றவாளியாக அறிவிக்கப் பட்டுள்ளார். வாரியபொல நீதிமன்றமே அவரை குற்றவாளியாக இனங்கண்டது. தம்மை, ரொபட் தசன்லேகே சந்திர குமார என்ற இந்த இளைஞர், கேலி செய்ததாக கூறி திலினியால் வாரியபொல பேரூந்து நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டார். இந்த தாக்குல், சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பிரசாரப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் இது தொடர்பான வழக்கு இன்று இடம்பெற்றபோது குறித்த இளைஞரை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. பாலியல் ரீதியான துன்புறுத்தல் என்ற அடிப்படையிலேயே அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கான தண்டனை தீர்ப்பு…

Read More

கின்னஸ் சாதனை படைத்த இப்தார் நிகழ்ச்சி!

ரமழான்  மாதத்தின் இப்தார் ஏற்பாடுகள் சவூதி அரேபியாவின் ஜித்தா நகரத்தில் 1058 மீட்டர் நீளத்திற்கு செய்யப்பட்டு இருந்தது. சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்று உணவருந்தினர். இளவரசர் மஷல் பின் மஜீத் பின் அப்துல் அஜீஸ் ஆதரவுடன் அபியா இண்டர்நேசனல் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியை பார்வையிட்ட கின்னஸ் நிபுணர்கள் இதனை உலகின் மிகபெரிய இப்தாராக‌ அறிவித்து கின்னசில் இடம் பெற செய்தனர். மேலும், அதற்கான சான்றிதழையும் வழங்கினர்.

Read More

உயிர்களை பாதுகாக்க ஐ.நா. தவறிவிட்டது – சயிட் அல் ஹூசெய்ன்

இலங்கையில் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு தவறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போரின் போது பொதுமக்களின் உயிர்கள் காவு கொள்ளப்படுவதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு தடுக்கத் தவறியதாகக் குறிப்பிட்டுள்ளார். பொஸ்னியா மற்றும் ஹெர்செகோவினா ஆகியன தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் கலந்துரையாடப்பட்ட போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் சிவிலியன் பாதுகாப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள்…

Read More

தந்தையாகும் மைக்கல் கிளார்க்

அவுஸ்திரேலிய டெஸ்ட கிரிக்கெட் அணி தலைவர் மைக்கல் கிளார்கின் மனைவி  கர்ப்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 34 வயதுடைய  மைக்கல் கிளார்க் கடந்த 2012 ஆம் ஆண்டு  மொடல் அழகியான கைலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிளார்க் நேற்று தனது ‘இன்ஸ்ட்ராகிராம்” சமூக வலைதளத்தில் தான் தந்தையாக போகும் செய்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

நோன்பு நோற்று  உம்ரா செய்து கொண்டிருந்த நிலையில் வபாத்தான சிறைவாசி!

சில நிகழ்வுகள் நமது நெஞ்சங்களில் நீக்கமற நிலை பெற்றுவிடும் அப்படி பட்ட நிகழ்வொன்று இன்று மக்காவில் நடை பெற்றது. ஆம், சவூதி, தம்மாம் நகரைச் சேர்ந்த 57 வயதை நிறைவு செய்த முதியவர். 57 ஆண்டுகள் இந்த உலகில் வாழ்ந்த பிறகும் அவருக்கு எட்டும் தொலைவில் இருக்கும் புனித மண்ணை பார்ப்பதர்கோ அங்கு ஹஜ் உம்றா செய்வதர்கோ சென்றதில்லை. இந்த மனிதர் ஒரு வழக்கில் அகபட்டு தண்டனை பெற்று தம்மாம் சிறையில் அடைக்க பட்டார். சிறையில் இருந்த காலங்களில் தனது கடந்த காலங்களை…

Read More

மயானமாக மாறிய நாடாளுமன்றம் – ரி.பி ஏகநாயக்க

அண்மைக் காலத்தில் பொரல்ல மயானமும் நாடாளுமன்றமும் ஒன்று போல் மாறியிருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரி. பி ஏகநாயக்க தெரிவித்துள்ளார். கல்கமுவ பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் கடந்த காலத்தில் நாடாளுமன்றம் பொரல்ல மயானம் போன்று இருந்ததுடன் நாட்டு மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Read More

இந்த இருவரும், அவசர உதவி கேட்கின்றனர்

ஜின்னாபுரம் ஆலங்குடா ஏத்தாளையில் வசித்துவரும் ஏ.எஸ்.கபூர் என்பவரின் இரு மகள்களான பாத்திமா றிகாஸா வயது 12, பாத்திமா றிமாஸா வயது 02 ஆகிய இருவரும் லியுகோமியா நோயினால் பீடிக்கப்பட்டு மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதற்கான சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள 25 இலட்சம் ரூபா செலவாகும் என மதுரை வைத்திய  நிபுணர் சிபார்சு செய்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன் இப்பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதுடன், வறுமைக் கோட்டில் வாழும் இவர்களின் தந்தை முச்சக்கரவண்டி ஓட்டி தனது குடும்பத்தை…

Read More

அம்பாறையில் அ.இ.ம.காவின் வாக்குகள்: புலனாய்வுப் பிரிவின் இரகசிய தகவல் கசிவு

முகம்மட்; அன்சார் – இறக்காமம் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முதன் முறையாக களமிறங்கவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆரம்ப கட்ட மக்கள் செல்வாக்கு சுமார் 25 ஆயிரம் என  புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரியவருகின்றது. புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அரசியல் விவகாரத்தை கையாளும் பிரிவின் அதிகாரி ஒருவர் தனக்கு நெருக்கமான ஒருவரிடம் இந்த தகவலை ஊர்ஜிதப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதன் பிற்பாடு குறிப்பாக 1994ம் ஆண்டுகளுக்கு பின்னர் முகாவின் அசைக்க முடியாத…

Read More

கல்பிட்டி பகுதியில் கிணற்றில் விழுந்து குழந்தை பலி

புத்தளம் – கல்பிட்டி  பகுதியில் குழந்தை ஒன்று வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவத்தில் 5 வயதுடைய குழந்தை  உயிரிழந்துள்ளது.  சடலம் பிரேத பரிசோதனைகளை அடுத்து தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read More

பொன்சேகா வேட்புமனு தாக்கல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி  தனித்து போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More