Headlines

பிரதமரின் நேற்றைய பாராளுமன்ற உரை

20ஆவது திருத்தச்சட்டமூலத்தை தாமதப்படுத்தும் எந்த நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை. சகல தரப்பினரதும் அபிப்பிராயங்களைப் பெற்று தேர்தல் மறுசீரமைப்பொன்றுக்குச் செல்லவே 20ஆவது திருத்தம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துகின்றோம். இந்த விவாதத்தில் ஆராயப்படும் விடயங்களின் அடிப்படையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி அடுத்த நகர்வுக்குச் செல்லவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் =நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தமிழ்த்…

Read More

கடல் நடுவே விமான நிலையம்!

– என்.மல்லிகார்ஜுனா – சுற்றிலும் கடல், நடுவில் விமான நிலையம். அதுவும், நம் நாட்டில்தான் இருக்கிறது என்றால், ஆச்சர்யமாக இருக்கிறதா? விமானம் தரை இறங்கச் சற்று நிமிடங்களுக்கு முன், விமானத்தில் இருந்து பார்த்தால், கடல்தான் தெரியும். முதன் முதலாகப் பார்ப்பவர்கள் மெர்ஸ்ஸலாயிடுவாங்க. ஆனால், அடிக்கடி சென்று வருபவர்கள் மட்டும் கடலின் அழகை ரசிப்பார்கள். சுற்றிலும் கடல் நீர் சூழ்ந்திருக்கும் இந்த ரன்வே, லட்சத்தீவில் உள்ள அகட்டி (Agatti) விமான நிலையமாகும். அதிசயமான விமான நிலையங்களில் இதுவும் ஒன்று….

Read More

அரசியலில் ஓய்வு பெற தயார் இல்லை – மஹிந்த

அரசியலுக்கு வந்தது தொடக்கம் இதுவரை தான் ஓய்வு எடுத்துக் கொண்டதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தன்னை ஓய்வுபெறச் செய்ய பலர் முயற்சி எடுத்த போது தான் அதற்கு தயார் இல்லை என அவர் கூறியுள்ளார். ஊவா பரணகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Read More

12 ஓ.ஐ.சிகளுக்கு இடமாற்றம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 12 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்கள ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More

 நூடில்ஸ்களுக்கு இரசாயன சோதனை

சகல வகையான நூடில்ஸ்களையும் இரசாயன சோதனைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியிலிருந்து சேகரிக்கப்படும் நூடில்ஸ்களின் மாதிரிகள் கைதுதொழில் தொழிற்நுட்ப நிறுவகத்துக்கு சோதனைக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Read More

திருட்டு வானுடன் மூவர் கைது

வான் ஒன்றை கொள்ளையிட்டு கொண்டு சென்ற சந்தேகநபர்கள் மூவரை புத்தள குடாஓய பிரதேசத்தில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தள உணாவட்டுன பிரதேசத்தில் வீடொன்றுக்கு முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வானை, குறித்த சந்தேகநபர்கள் திருடிச்சென்றுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள், வெல்லவாய மற்றும் பெல்வத்த பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸர் கூறினர்.

Read More

உணவு ஒவ்வாமையால் 100 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (22) மாலை உட்கொண்ட உணவு இவ்வாறு ஒவ்வாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (23) காலை வயிற்றுவலி, மயக்கம் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் தென்பட்ட நூறுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

KFC வழங்கிய பர்கரில் 3 இஞ்ச் நீள இரும்பு தகடு!

பிரிட்டனில் உள்ள சப்போல்க் பகுதியில் வசிக்கும் 29 வயதான லூசியா ரிச்சர்ட்சன் என்ற பெண்மணி, கடந்த சனிக்கிழமையன்று மார்ட்லேஷாமில் உள்ள கே.எப்.சி. உணவகத்தில் ஜிஞ்சர் பர்கரை வாங்கினார். இதை அவர் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, 3 அடி நீளத்தில் ஒரு பொருள் இருப்பதை கண்டார். எலும்பு துண்டாக இருக்கும் என நினைத்த அவர், அதை கடித்தபோதுதான், அது எலும்பு துண்டல்ல, இரும்புத்துண்டு என்பதை கண்டுபிடித்தார். இதற்குள் ஐந்து முறை சிறு சிறு துண்டுகளாக அவர் பர்கரை உட்கொண்டிருந்தார். இதையடுத்து உடனடியாக…

Read More

நேர்மையின் மறுப்பெயர் முஸ்லிம்: இது தான் இஸ்லாம்.!

– மௌலவி செய்யது அலி ஃபைஜி – உலகத்தில் பணத்தின் தேவைகள் இல்லாதவர்களே கிடையாது, அதனால் பணத்தின் மீது ஆசை வைக்காதவர்களை பார்க்க முடியாது. ஆனால் இஸ்லாம் அந்த ஆசைக்கும் அணை போடுகிறது. பணத்தை மனிதன் விரும்பலாம், அது அவனுக்கு உரியதாக இருக்க வேண்டும், அவன் உழைத்து உருவாக்கியதாக இருக்க வேண்டும், அனுமதிக்கபட்ட முறையில் அவனுக்கு அது கிடைத்ததாக இருக்க வேண்டும். தாம் சம்பாதிக்காத பணத்தை தவிர ஏனைய பிறரின் பொருளாதாரத்தை இஸ்லாம் புனிதமாக கருத சொல்கிறது. இறைத்தூதர்…

Read More

மதினா அமீர் ஃபைஸல் சாமான்யர்களோடு நோன்பு திறப்பு!

புனித மதினாவின் அமீர் ஃபைஸல் பின் சல்மான் செக்யூரிடி நபர்களோடு ஒன்றாக அமர்ந்து நோன்பு திறந்த காட்சி. சவுதி ஆட்சியாளர்கள் அனைவரும் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பயணிப்பது மக்களோடு மக்களாக. மக்களாட்சியோ மன்னராட்சியோ எந்த வகை ஆட்சியாக இருந்தாலும் அதனால் மக்கள் பயன் பெற வேண்டும். நம் நாட்டில் நடப்பது மக்களாட்சியாக இருந்தாலும் அதனால் சாமான்யன் எந்த பலனையும் அடைய முடியவில்லை. அரசியல் வாதிகளின் வாரிசுகள்தான் கோடி கோடியாக சொத்து சேர்க்கின்றனர். தகவல் உதவி…

Read More

பெண்ணுரிமையால் கவரபட்டு இஸ்லாத்தில் இணைந்த சகோதரி!

இஸ்லாத்தில் பெண்ணுரிமை என்ற தலைப்பில் ஹாங்காங் நாட்டில் ஒரு மார்க்க அறிஞர் உரை நிகழ்த்தி கொண்டிருந்தார் அவர் தனது உரையில் இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமைகளை பட்டியலிட்டார் அந்த மார்க்க அறிஞரின் உரையும் இஸ்லாத்தில் பெண்களுக்கு வழங்கபட்டுள்ள முக்கியத்துவமும் வீதியில் உரையை செவியுற்ற ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணின் சிந்தனையை கவர்கிறது சிறிதும் தாமதிக்காமல் அந்த உரை முடியும் முன்பே உரை நிகழ்த்தியவரின் முன்னிலையில் அந்த பெண் வந்து தான் இஸ்லாத்தில் இணையவிரும்புவதாக தனது விருப்பத்தை தெரிவித்து தன்னை…

Read More

ஆட்சியமைக்க விடமாட்டேன்: ரணில்

மக்களினால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீளவும் ஆட்சிப்பீடத்திற்கு ஏற்றவே தற்போதைய பாராளுமன்றம் முயற்சிக்கின்றன. எனவே மக்களின் ஆணையை இழந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கம் இனிமேல் ஏற்படுவதற்கு நான்  ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலின் போது பெறப்பட்ட புரட்சிகரமான வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு புதிய பாராளுமன்றம் அவசியமாகும். எனவே அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கையை கருத்திற் கொண்டாவது பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்றும்…

Read More