Headlines

வாழ்வதற்கான வழிமுறைகளை அல்குர்ஆன் சொல்லித் தந்துள்ளது – ஒபாமா !

திங்கட்கிழமை(22) இரவு வெள்ளைமாளிகையில் இப்தார் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையில் நடைபெற்ற குறித்த இப்தார் நிகழ்வுக்கு 150 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். குறித்த நிகழ்வின்போது உரையாற்றிய ஒபாமா, “அல்குர்ஆன் மனிதன் பூமியில் வாழ்வதற்கான வழிமுறைகளை எமக்கு சொல்லித் தந்துள்ளது. நாங்கள் இப்போது ஒரு குடும்பமாக இருக்கிறோம். இதனையே அல்குர்ஆன் எமக்கு காட்டித் தந்துள்ளது. மேலும் ரமழானது பொறுமை,தியாகம்,முகாமைத்துவம் என எல்லாவற்றையும் கற்றுத் தந்துள்ளது” – எனவும் கருத்துத் தெரிவித்தார். குறித்த இப்தார்…

Read More

தகுதிச் சான்றிதழின்றி எவரும் தேர்தலில் போட்டியிட முடியாது….

தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டுச் சபையின் தகுதிச் சான்றிதழ் இன்றி எந்தவொரு நபரும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாதென அதன் தலைவர் டொக்டர் சமீர நிலங்க சமரசிங்க நேற்று தெரிவித்தார். இது குறித்த விபரங்களை திரட்டுவதற்காக நாடு முழுவதும் 200 குழுக்கள் நியமிக்கப்பட் டிருப்பதாவும் அவர் கூறினார். பெப்ரல் அமைப்பின் பிரகடனத்தின்படி வேட்பு மனு தாக்கல் செய்யும் ஒவ்வொரு நபரும் போதைக்பொருள் பாவனை, விற்பனை, விநியோகத்துடனான தொடர்பு, மதுபான விற்பனை நிலையம் மற்றும் எந்தனோல் இறக்குமதிக்கான…

Read More

நல்லாட்சியிலும் விஷப் பற்களோடு திரியும் பொதுபலசேனா

மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசை மக்கள் தோற்கடித்தமைக்கு மிகப் பிரதான காரணம் பொதுபலசேனா போன்ற சிங்கள இனவாத குழுக்ககள்தான் என்றால் அது மிகையாகாது. பொதுபலசேனா அமைப்பினர் மிக கூரிய விஷப் பற்களோடு அன்று முஸ்லிம்களுக்கு எதிராக ஆயிரம் அட்டுழியங்களை செய்தார்கள் ஹலால், ஹிஜாப் என்று தொடங்கி அவர்களது அட்டுழியங்களை கடைசியில் அளுத்கமையில் கொண்டு போய் முடித்தார்கள். அளுத்கமையில் முஸ்லிம்கள் பட்ட இன்னல்கள் கொஞ்சமல்ல இன்னும் பழைய நிலைக்கு…

Read More

இஸ்ரேலிய பேரீச்சம் பழம் ஹராம்!

இஸ்ரேலிய பேரீச்சம் பழங்களை விற்பனை செய்வது ஹராம் என சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் செயலாளர் கலாநிதி அஹ்மத் ரைசூனி தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் பேரீச்சம் பழங்கள் இஸ்ரேலுக்கு சொந்தமானது அல்ல, அவை பலஸ்தீன் மக்களின் நிலங்களை சூறையாடி பெற்றுக்கொண்டவை என்ற வகையில் அவற்றை விற்பனை செய்வது ஷரீஅத்தில் ஹராம் என குறிப்பிட்டுள்ளார்.

Read More

சிறுபான்மைச் சமுகங்களுக்கு அநீதி இழைத்து விடாதீர்கள் -அமீர் அலி

அஸ்ரப் ஏ சமத் 20வது அரசியல் திருத்தம் பற்றி இன்று பாராளுமன்றத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் – இந்த நாட்டில் இருக்கின்ற இரண்டு பிராதான அரசியல் கட்சிகளும் சேர்ந்து சிறுபான்மைச் சமுகத்தின் அரசியல் அபிலாசைகளை நசுக்கிவிடாதீர்கள். ஒரு நல்லாட்சி ஏற்பட வேண்டுமென்று ஒட்டு மொத்த சிறுபான்மைச் சமுகமும் ஒருங்கிணைந்து மைத்திரிபால சிறிசேனாவை இந் நாட்டுக்கு ஜனாதிபதியாக்கினார்கள். சிறுபான்மைச் சமூகம் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்காமையால் இதைக் காரணமாக வைத்துக்கொண்டு…

Read More

அப்துல் கலாம் இன்று இலங்கை வரு­கிறார்

இந்­திய முன்னாள் ஜனா­தி­பதி கலாநிதி அப்துல் கலாம் மூன்று நாள் விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இன்று இலங்கை வருகை தர­வுள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சின் ஊடகப் பேச்­சாளர் மஹி­ஷினி கோலோன் தெரி­வித்தார். இதற்­க­மைய, நாளை வெள்ளியன்று கலா­நிதி அப்துல் கலாம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும் சந்­திக்­க­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். வெளிவி­வ­கார அமைச்சில் நேற்று இடம்­பெற்ற வரு­டாந்த ஊட­க­வி­ய­லாளர் மாநாட் டின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டுகையில், மின்­சக்தி மற்றும்…

Read More

பாகிஸ்தானில் வெயில் பலிகளைத் தடுக்க பொதுவிடுமுறை

பாகிஸ்தானில் தொடரும் கடும் வெயில் காரணமாக இதுவரை 700 பேருக்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கும் பின்னனியில், மேலதிக உயிர்பலிகளை தடுக்கும் நோக்கில் சிந்த் பிராந்திய அரசாங்கம் இன்று (24) புதன்கிழமை கராச்சியில் பொதுவிடுமுறை அறிவித்திருக்கிறது. பொதுமக்கள் வெயிலில் வெளியில் உலவாமல் தத்தம் வீடுகளுக்குள் இருந்தபடி தம்மை இந்த வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. தகிக்கும் வெயிலோடு மோசமான மின்வெட்டும் சேர்ந்துகொள்வதால், மின்விசிறிகள் மற்றும் குளிரூட்டிகளைப் பயன்படுத்தி பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க…

Read More

ஒலிம்பிக் போட்டிகளுக்கு சிக்கலாம்

ஒலிம்பிக் (2016) போட்­டிக்­கான பல்­வேறு மைதா­னங்கள் இன்னும் தயா­ரா­காமல் உள்­ளன. உலக விளை­யாட்டு திரு­விழாவான ஒலிம்பிக் போட்டி. நான்கு ஆண்­டுக்கு ஒரு­மு­றை நடக்கின்றது. கடை­சி­யாக 2012இல் இங்­கி­லாந்தில் இப்­போட்டி நடந்­தது. அடுத்து 2016இல் 31ஆவது ஒலிம்பிக் போட்டி பிரே­சிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்­க­வுள்­ளது. இதற்­காக மொத்தம் 14 புதிய மைதா­னங்களை கட்­டு­வது, புதுப்­பிப்­பது என, ரூ.120 ஆயி­ரத்து 518 கோடி வரை பிரேசில் அரசு செல­வி­டு­கி­றது. போட்டி ஆரம்பிக்க இன்னும் 13 மாதங்கள் மட்டுமே மீத­முள்ள நிலையில்…

Read More

அநாதைகளுடன் இரண்டற கலந்த அற்புதமான தலைவர் (படங்கள் இணைப்பு)

ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹமட் பின் ர்ஷீட் அல் மக்தூம் அவர்களால் சுமார் 156 மில்லியன் திர்ஹம் செலவில் அநாதைகளுக்கென அமைக்கப்பட்ட “Family Village” இன்று திறந்து வைக்கப்பட்ட பின்னர் அங்குள்ள அநாதை சிறார்களுடன் மிக அன்பாக அன்னி யோன்னியமாக பழகும் காட்சியே இது…..

Read More

சு.க.வை பிரபாகரன் காப்பாற்றியிருந்தார்

புதிய தேர்தல் முறைமை தொடர்பில் பிர­தான கட்­சி­க­ளுக்கும் சிறு மற்றும் சிறு­பான் மைக் கட்­சி­க­ளுக்கும் இடையில் வித்­தி­யா­ச­மான கருத்து வேறுபாடுகள் இருக்­கின்­றன. எனவே பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அனைத்து சமூகப் பிர­தி­நி­தி­க­ளி­ன தும் மக்­க­ளி­னதும் கருத்­துக்­களை அறிய வேண்­டிய தேவை ஜனா­தி­ப­திக்கு இருப்­ப­தா­லேயே 20ஆவது திருத்தம் தொடர்பில் விவாதிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. என்று பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க நேற்று சபையில் தெரி­வித்தார். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யா­னது எஸ். டப்ளியூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்­க­வினால் ஸ்தாபிக்­கப்­பட்­ட­தாகும். அக்­கட்­சி­யா­னது பல சந்­தர்ப்­பங்­களில் ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க…

Read More

இலங்கையில் மெகி நூடில்ஸ் தடை?

அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் மொனோ சோடியம் குளுட்டாமேட் காணப்படுவதால் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மகி நூடில்ஸ் உள்ள சரக்குகளை இறக்குமதியாளர்களுக்கு வழங்குவதை நிறுத்துமாறு இலங்கை சுங்க திணைக்களத்திடம்  நுகர்வோர் அதிகார சபை நேற்று கோரியுள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மகி நூடில்ஸை தடை செய்யுமாறு இலங்கைக்கான இந்திய தூதரகம் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

20; சிறிய கட்சிகளை அழிக்கும்

தேர்தல் தொடர்பான 20ஆவது திருத்தத்துக்கு ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த திருத்தமானது, நாட்டில் உள்ள சிறிய ஜனநாயக கட்சிகளை அழிக்கும் செயற்பாடு என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் நாட்டில் உள்ள சிறிய கட்சிகளுக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. இந்நிலையில் புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டால், அந்தக் கட்சிகளின் பிரதிநிதித்துவங்கள் இல்லாமல் போய்விடும். இதனை ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் உணர்வார்கள் என்று கெக்கிராவையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்….

Read More