Headlines

திஸ்ஸ மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!

பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் போலி ஆவணம் தயாரித்ததாகத் தெரிவித்து திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அத்துடன், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும்…

Read More

ஜனாதிபதி இன்று கட்சித் தலைவர்களுடன் அவசர சந்திப்பு

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைய அமைக்கப்படவிருக்கும் அரசியலமைப்புப் பேரவையை அமைக்கும் விடயத்தில் எதிரணிகள் குந்தகமாகச் செயற்பட்டு பாராளுமன்றத்தின்  அங்கீகாரத்துக்குத் தடையாகச் செற்பட்டதையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி நடவடிக்கைளிலிறங்குவதற்குத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. . இதனடிப்படையில் எந்த வேளையிலும் பாராளுமன்றம் கலைக்கப்படக் கூடியச சாத்தியம் அதிகரித்து வருவதாகவும் அறியவருகின்றது. அரசியலமைப்புப் பேரவையை அங்கீகரித்ததன் பின்னர் எதிர்வரும்  9 ஆம் திகதி தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான  20 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்த…

Read More

களவு பிடிபட்டது!

அஸ்ரப் ஏ சமத் இலங்கை வெளிநாட்டு அமைச்சின் ஊடக பணிப்பளரும் ஊடகப் பேச்சாளருமான – மகேசினி கொலோன் இன்று ஊடக மாநாட்டில் தெரிவித்த கருத்துக்கள்.. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உறவினரான உதயங்க வீரதுங்க கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயுத கிடங்கு கொண்ட கொள் கலனை உக்ரைனுக்கு கொண்டுவருவதற்கு கடந்த வாரம் முயற்சித்துள்ளார். இந் நடவடிக்கையை வெளிநாட்டு அமைச்சினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இவர் உலகில் எந்த நாடுகளில் இருந்தாலும் அவரை கைது செய்து இலங்கைக்கு கொண்டுவர…

Read More

எதிர்ப்ப‌வர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் (கட்டுரை)

இஸ்ஸதீன் றிழ்வான் வடக்கு முஸ்ளிம்களின் மீள்குடியேற்றம் கேள்விக்குறியான போதுதான் சில மீடியாககளும் இனவாதிகளும் வில்பத்து விடயத்தை தூசுதட்டி பேசுபொருளாக்கினர். இப்போது சர்வதேச சமூகம் மரிச்சிக்கட்டிக்கும் வடக்கு மக்களுக்கும் குரல்கொடுக்கும் அளவு விடயம் வீரியமடைந்திருக்கிறது. இலங்கை அரசு வடக்கு மீள்குடியேற்றத்தை ஆமை வேகத்தில் நகர்த்தி, கவனித்துவந்தபோது இந்த வில்பத்தை பாதுகப்போம் என்ற தொனி உயர்ந்திருப்பது எமக்கு சாதகமாக அமைந்துவிட்டது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். காரணம் வடக்கு மீள்குடியேற்றத்தை உத்தியோகபூர்வமாகவும் துரிதமாகவும் முன்னெடுக்க மைத்திரி அரசு ஒரு அமைச்சர்…

Read More

யூன் 15ற்கு முன்னர் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பியுங்கள்

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் சரத் குமார அறிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சையில் நாடு முழுவதிலும் பாடசாலைகளினூடாக 4 இலட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு முறையாக விண்ணப்பங்களை நிரப்பி யூன் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவேண்டும்….

Read More

இலங்கை – ஜப்பான் ஊடக அமைச்சர்கள் சந்திப்பு!

அண்மையில் ஜப்பானுக்கு விஜயம் செய்த ஊடக மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக்க அந்நாட்டு ஊடகத்துறை அமைச்சர் சனா டாகாச்சியை சந்தித்து கலந்துரையாடினார். இவ்விஜயத்தின் போது மேலும் பல உயரதிகாரிகளை சந்தித்து அமைச்சர் கலந்துரையாடினார். இச்சந்தர்ப்பத்தில் ஐ.தே.க டோக்கியோ கிளை தலைவர் யசேந்திர சமரசேக்கர மற்றும் செயலாளர் சந்தரன விக்கிரமசிங்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Read More

இலங்கையில் மரணதண்டனையை மீள நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எதிர்ப்பு

இலங்கையில் எந்தக் காரணத்திற்காகவும் மரணதண்டனையை மீள நடைமுறைப்படுத்துவதை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக எதிர்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது நிலைப்பாட்டை பலமுறை தெளிவாக தெரிவித்துள்ளது, இந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை,என  ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மரணதண்டனையை நிறைவேற்றுவது குறித்து சிந்தித்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

சிங்கப்பூருக்கு அழைப்பு வந்தது: ஆனால் செல்லமாட்டேன் : கோத்தா

நான் ஒருபோதும் நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூருக்கு செல்ல மாட்டேன் என்பதை உறுதிப்பட தெரிவித்து கொள்கின்றேன் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், ‘தன்னை சிங்கப்பூருக்கு வருமாறு அழைப்பிதல் வந்தமை தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து பலர் கவலை தெரிவித்து எனக்கு செய்திகளை அனுப்பி இருந்தார்கள். நீங்கள் என் மீது கொண்டுள்ள நம்பிக்கையை நான் மதிக்கின்றேன்….

Read More

தேஸ்ரன் கல்லூரி நீச்சல் தடாகத்திலிருந்து சடலம் மீட்பு

கொழும்பு தேஸ்ரன் கல்லூரியின் நீச்சல் தடாகத்தில் இருந்து 50 வயது மதிக்கத்தக்க நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பாடசாலையின் பழைய மாணவரொருவரின் சடலமாக இருக்கலாமென தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கண் தொற்று நோய் தீவிரம் பொதுமக்கள் அவதானம்

ஜுனைட் . எம். பஹ்த் நாட்டின் பலபிரதேசங்களில் புதிய கண் நோயொன்று தற்போது பரவி வருவதாக காத்தான் குடி சுகாதார வைத்திய அதிகாரி  U.L.M.நஸ்ருத்தீன்  பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர் . “வைரல் கண் ஜக்டிவைடிஸ்” என இந்நோய் பெயரிடப்பட்டுள்ளது.  இந்த நோய்குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் இது ஒருவகை வைரஸ் இனால் ஏற்படுகின்றன கண் சிவத்தல், கண்ணில் நீர் வடிதல் என்பன இந்நோயின் அறிகுறிகளாக காணப்படுகின்றது. இந்த அடையாளங்கள் கண்ணிலாவது காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கோ அல்லது அருகிலுள்ள அரச…

Read More

சஜின் வாஸ் மீண்டும் 17ம் திகதிவரை விளக்கமறியலில்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர் செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 17ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More