Headlines

பொசன் பண்டிகையை முன்னிட்டு வடமத்திய மாகாணங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை!

பொசன் பண்டிகையை முன்னிட்டு வடமத்திய மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு ஜுன் முதலாம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தகவல் வௌியிட்டுள்ளது. இதன்படி, அனுராதபுரம் மத்திய மாகாண வித்தியாலயம், வலிசிங்க ஹரிச்சந்திர கல்லூரி, சாஹிரா கல்லூரி (அநுராதபுரம்), மிஹிந்தல மகா வித்தியாலயம், தந்திரமலை ஞானவிமலா வித்தியாலயம் நிவன்த-கச்சதிய கல்லூரி, சுவர்ணபாலி மகளிர் கல்லூரி, ஸ்ராவஸ்திபுர திஸ்ஸ மற்றும் தேவாநம்பியதிஸ்ஸபுர வித்தியாலயம், உட்பட 12 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மருதானையில் உள்ள ஹோட்டலில் தீ; மூவர் எரிந்து மரணம்

மருதானை கலீல் தனியார் வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள ஹோட்டலில் இன்று நண்பகல் ஏற்பட்ட தீயினால் அந்தஹோட்டலில் அகப்பட்ட மூன்று பேர்  எரிந்து இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறந்தவர்களின் உடல்கள் தற்போது தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.பெயர் விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை. இத்தீயினால் முன்னர் செயற்பட்ட அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பழைய கட்டிடம் முற்றாக எரிந்துள்ளடன்  மருதானையில் பாரிய போக்குவரத்தும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Read More

விமான நிலையத்தில் அதிகரித்துள்ள கைதுகள்.. இது ஐக்கிய அரபு எமிரேட்சிற்கு வருகை தருவோரின் கவனத்திற்கு

-Razana Manaf- சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்சின் Dubai சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய சில பயணிகள் கைது செய்யப்பட்டிருந்தனர் கைது செய்யப்ட்ட பயணிகள் அனைவரும் உலகின் பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிட்டு காட்டவேண்டிய விடயம். விமான நிலைய அதிகாரிகள் இவர்களின் பயண பொதியை சோதனையிட்ட போது விலங்குகளின் தோல்கள், விலங்குகளின் எலும்புகள், இறந்த விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட சில உடற்பாகங்கள், மனிதனின் உரோமம், இரத்த குப்பி, சில வகை மரத்தினுடைய இலைகள்,…

Read More

சவூதி அரேபியா குண்டு வெடிப்பில் தொடர்புடைய பலர் கைது : மன்னர் சல்மான் அறிவிப்பு…..!!

சவூதி அரேபியாவிலிருந்து மௌலவி செய்யது அலி ஃபைஜி சவூதி அரேபியாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது…. குண்டுவெடிப்பு சம்பந்தமாக வெடிகுண்டு நிபுணர்களின் ஆய்வுகளை வைத்து காவல்துறை மற்றும் உளவுத்துறையின் அதிரடி வேட்டையில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, குண்டுவெடிப்பிற்கு திட்டம் தீட்டியவர்கள், பின்னணியில் இருப்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் அடையாளம் காட்டப்படுவார்கள். இறைவனோ,…

Read More

பாடசாலைகளின் சிற்றுண்டிச்சாலைகள் பதிவு

கொழும்பு மாநகர சபை நிர்வாக எல்லைக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளினதும் சிற்றுண்டிச்சாலைகளை உத்தியோகபூர்வமான பதிவு செய்யும் நடவடிக்கை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர சபையின் பிரதான சுகாதார மருத்துவ அதிகாரி ருவன் விஜேமுனி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். சில பாடசாலைகளில் உள்ள சிற்றுண்டிச் சாலைகள் முறையான சுகாதார தன்மைகளை கொண்டிருக்கவில்லை என முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதற்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Read More

இஸ்லாம் அழகானது அதை பயங்கரவாத மார்க்கமாக சித்தரிக்க முனைபவர்கள் அதர்கு உரிய தண்டனையில் இருந்து தப்பமுடியாது சவுதி மன்னர் சல்மான் சூழுரை!

வெள்ளியன்று சவுதி அரேபியாவின் தம்மாம் அருகே உண்டான கதீஹ் நகரில் வெள்ளி கிழமை ஜீம்ஆ தொழுகையின் போது தற்கொலை குண்டு தாரி தாக்குதலை அரங்கேற்றினான் இந்த தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் உட்பட பலர்கள் உயிர் இழந்தது மிக பெரிய சோகத்தை உருவாக்கியது இந்த குண்டு வெடிப்பு தொடர்ப்பானா விசாரணையை விரைவு படுத்திய சவுதியின் உளவுதுறை மற்றும் காவல் துறையினர் சம்பவத்தோடு தொடர்ப்புடைய பலர்களை கைது செய்துள்ளனர் இது தொடர்ப்பாக சவுதி மன்னர் சல்மான் நேற்று குறிப்பிடும் போது…

Read More

நீதிமன்றத்தின் மீதான தாக்குதல்; விசாரணைகளுக்காக 15 பேர் கொண்ட சி.ஐ.டி குழு யாழ் விரைவு!

யாழ் நீதிமன்ற கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தை (சிஐடி) சேர்ந்த 15 பேர் கொண்ட குழு யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். யாழ் குடாநாட்டில் அமைதியின்மையை தோற்றுவிப்பதற்காக ஏதேனும் தேசவிரோத சக்திகள் இந்த சம்பவத்தின் பின்னணியிலிருந்து செயற்படுகிறதா என்பதனை மையப்படுத்தியதாகவே இதன் விசாரணைகள் அமையுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விசாரணைகளின் முதல் கட்டமாக, நீதிமன்ற கட்டடத் தொகுதியின் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட தனிநபர்களின்…

Read More

முஸ்லிம்களுக்கு எதிராக புதிய இனவாத நாடகம் அரங்கேற்றம் : அமைச்சர் றிஷாத் குற்றச்சாட்டு

முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசங்களை மூடி மறைத்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர் றிஷாத் பதியூதின், பெரும்பான்மை இன ஊடகங்கள் சில முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்திற்கு தூபமிடுகிறது என்றும் அமைச்சர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாத் பதியூதீன் மேலும் தெரிவிக்கையில், பெரும்பான்மை இன ஊடகங்களும் சில இனவாத சக்திகளும் இணைந்து இன்று புதியதொரு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளனர்….

Read More

மருதானையில் பாரிய தீ விபத்து

மருதானையில் (டெக்னிக்கல் சந்திக்கு அருகில்) அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ ஏற்படுள்ளதாக தெரிய வருகிறது. தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படையினர் ஸ்தலத்துக்கு விரைந்துள்ளதாக   தெரிவிக்கப்படுவதுடன்,  சேத விபரங்கள் இதுவரை தெரியவில்லை.

Read More

காலையில் செய்யக்கூடாத 8 விஷயங்கள் !! கண்டிப்பாக படியுங்க பயனுள்ளாதாக இருக்கும் !!

1. தினமும் காலையில் எழுவது என்பது மந்தமான செயலாகும். பொதுவாக காலையில் எழும் போது, கை, கால்களை முறித்து விடுவது இயல்பாகும். அவ்வாறு முறிக்கும் போது மெதுவாக செயல்பட வேண்டும். காலையில் எழும்போது, வலதுபக்கம் திரும்பி பின்னர் படுக்கையில் இருந்து எழும்ப வேண்டும் என்கிறார். இதன்மூலம் அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். 2. பொதுவாக காலையில் எழும் போது, தமது தசைப்பிடிப்புகளை எடுத்து விடுவது இயல்பான செயலாகும். அவ்வாறு செய்யும் போது…

Read More

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 4 இல் ஆரம்பம்

க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டுக்கான பரீட்சைகளே ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகி ஓகஸ்ட் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Read More

இன்ப்ளூவன்சா ஏ.எச்.1 என்.1 வைரஸினால் கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதிப்புக்கள் அதிகம்

நாட்டில் பரவிவரும் இன்ப்ளூவன்சா ஏ.எச்.1 என்.1 வைரஸினால் கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.வைரஸ் தொற்று அதிகரிக்கும் நிலையில், நிமோனியா ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அமைச்சின் தொற்றுநோய், ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பபா பலிஹவடன கூறினார். இந்த வைரஸ் தொற்று ஏற்படுமிடத்து, தடிமன், காய்ச்சல், தொண்டை வலி மற்றும் தலைவலி போன்ற நோய் அறிகுறிகள் காணப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.கொழும்பு, பதுளை, கேகாலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் இன்ப்ளூவன்சா ஏ.எச்.1…

Read More