Headlines

வியாழக்கிழமை மக்காவுக்கு நேராக சூரியன் உச்சம்

எதிர்வரும் மே 28ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு நேரப்படி பி.ப 2:48 மணிக்கு மக்காவுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கின்றது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிவித்துள்ளது. இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு இணைப்பாளர் அஷ்-ஷைக் எம். அப்துல் வஹ்ஹாபினால் ஊடக அறிக்கையொன்றை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வருடத்தில் இரு தடவைகள் சூரியன் மக்காவுக்கு நேராக உச்சம் கொடுக்கிறது. அவை மே 28 மற்றும் ஜூலை 16…

Read More

போதைப்பொருள் வியாபாரிகள், சமூக விரோதிகளை நாடாளுமன்றத்தில் இருந்து அகற்றுவேன் – ஜனாதிபதி மைத்திரி

போதைப்பொருள் வியாபாரிகளையும், சமூகத்துக்கு வேண்டாதவர்களையும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுவதற்குத் தான் கடமைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமது இந்த இலக்கை அடைவதற்கு புதிய தேர்தல் முறை உதவும் என்றும் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்தவாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்  அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைப்படி நடக்குமா அல்லது விகிதாசாரமுறை மற்றும் தொகுதி முறை இணைந்த கூட்டு முறைப்படி நடக்குமா என்று உறுப்பினர்கள் சிலர் கேள்வி…

Read More

இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற இராணுவ வீரரின் இல்லத்திற்கு மைத்திரி விஜயம்

இரண்டாம் உலகப் போரின் போது இராணுவச் சிப்பாயாக கடமையாற்றிய தனது பழைய நண்பர் சோமவர்டன வீரசிங்கவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் சென்று நலம் விசாரித்தார்.பொலநறுவைக்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, தனது நண்பரான சோமவர்டன வீரசிங்கவின் இல்லத்திற்கு சென்று சந்திப்பை மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதியை ஆனந்தக்கண்ணீருடன் திரு.சோமவர்டன வரவேற்றார்.இதன்போது சில சுவாரஸ்யமான அனுபவங்களை ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் பகிர்ந்து கொண்டார்.

Read More

புத்தளம் காசிமிய்யாவில், சிங்கள மொழி கற்பிக்கும் பௌத்த தேரர்

முஹ்ஸி புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் இன்று (25.5.2015) இடம் பெற்ற காலைக் கூட்டத்தில் புத்தளம் கிழக்கு கிராம சேவகர்ப் பகுதியில் அமைந்துள்ள செம்மாந்தளுவ பௌத்த விகாரையின் தலைமை மதப் போதகர் “மஹனுவர திலகரத்ன தேரர்” கலந்து கொண்டு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பில் தான் அறிந்து வைத்துள்ள விடயங்கள் சிலவற்றை எளிமயான முறையில் தமிழிலும்,சிங்களத்திலும் பகிர்ந்து கொண்டார். இவர் புத்தளம் அல்மத்ரசத்துள் காசிமிய்யாவில் பகுதி நேரமாக மாணவர்களுக்கு சிங்கள மொழியை கற்பித்து வருகின்றார். பிரதேசத்தில் வாழும்…

Read More

பஸ் தரிப்பிட நிலையத்திற்கு அடிக்கல் நடும் வைபவம்

அஸ்ரப் ஏ சமத் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் 30 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கிட்டில் களுவாஞ்சிக்குடிக்கான புதிய பஸ் தரிப்பிட நிலையத்திற்கு அடிக்கல் நடும் வைபவம் 24.05.2015ம் திகதி (இன்று) கிராமத்தலைவரும், களுவாஞ்சிக்குடி அபிவிருத்திச் சங்கத்லைவருமான திரு.அ. கந்தவேல் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது . இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்து சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. பொன் செல்வராஜா, மாகாண சபை…

Read More

சுகைப் .எம். காசீம் எழுதிய “வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்”

– அஸ்ரப் ஏ சமத் – நூல் வெளியீட்டு விழா ஜூன் 6 கொழும்பில் தினகரன் வாரமஞ்சரி இணை ஆசிரியர் சுஐப் எம். காசிம் எழுதிய ஷவடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்| நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஜூன் மாதம் 6ம் திகதி சனிக்கிழமை (06.06.2015) மாலை 4.00 மணிக்கு கொழும்பு 10, டி. ஆர். விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறும். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த…

Read More

Breaking News.. ஞானசார தேரர் சற்றுமுன் கைது!

சட்டவிரோத ஆர்பாட்டம் செய்ததற்காக நீதிமன்றில் ஆஜராக இருந்த நிலையில் நீதிமன்றுக்கு சமூகமளிக்காத பொதுபல சேன அமைப்பின் செயலாளர்  ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது அறிந்ததே, சுமார் ஒரு மாதத்துக்கு முன்னர் ஜப்பான் சென்ற அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அவர் நேற்று விமான நிலையம் ஊடாக நாடு திரும்பி இருந்தநிலையில், சற்றுமுன் கருவத் தோட்ட  பொலிசாரால் அவர் கைது செய்யபப்ட்டுள்ளதாக தெரிய வருகிறது.

Read More

மூன்று உயிர்களை எடுத்த பாரிய தீவிபத்து.. உடனடியாக ஸ்தலத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் றிஷாத்

மருதானை எல்பின்ஸ்ட்டன் பிரதேசத்தின் வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து அப்பிரதேசத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.இந்த தீ விபத்தினால் மூவர் பலியானதாக பொலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இடம் பெற்று ஒரு சில நிமிடங்களுக்குள் அப்பிரதேசத்துக்கு விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் பாதிப்புக்குள்ளான கடைத் தொகுதியினை பார்வையிட்டதுடன், இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொலீஸ் உயர் அதிகாரிகளிடத்தில் கேட்டுக்கொண்டார். இதே வேளை இந்த பிரதேசத்தில் தீ…

Read More

அனைவருக்கும் மேலாக ஶ்ரீசுக உரிமை எனக்கே உண்டு

அனைவருக்கும் மேலாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உரிமை தனக்கே உள்ளதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா – யக்கல வாராந்த சந்தையை திறந்து வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியின் ஒரு பிரிவையே வாக்காளர்கள் நிராகரித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் இன்று (25) திங்கட்கிழமை காலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என ஜப்பான் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கே சைத்தாமா என்ற பகுதியில் மையம் கொண்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் கட்டிடங்கள் சிறிது ஆட்டம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் இதுவரையில் இல்லை. கடல் அடியில் 51 கிலோ மீற்றர் ஆழத்தில்…

Read More

வித்தியாவின் கொலை தொடர்பிலான மக்களின் கோபமும் கொந்தளிப்பும் நியாயமானது : மாதுலுவாவே சோபித தேரர்

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் கொலை சம்­பவம் தொடர்பில் மக்­களின் கோபமும் கொந்­த­ளிப்பும் நியா­ய­மா­னதே. பாட­சாலை சிறு­மியை பாலியல் கொடு­மைக்கு உள்­ளாக்கி கொலை செய்த நபர்­களை மக்கள் தண்­டிக்க துடிப்­ப­தையும் ஆக்­ரோஷப்­ப­டு­வ­தையும் நாம் குறை­கூற முடி­யாது என சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் தலை­வரும் கோட்டே நாக விகா­ரையின் விகா­ரா­தி­ப­தி­யு­மான மாது­லு­வாவே சோபித தேரர் தெரி­வித்தார். மக்கள் தமது கோபத்தை வெளிப்­ப­டுத்த சட்­டத்தை கையில் எடுக்­க­வேண்டாம் என்றும் சட்டம் தன் கட­மையை சரி­யாக செய்­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். புங்­கு­டு­தீவு மாணவி…

Read More

புடாபெஸ்ட் பிரகடனத்தில் இலங்கைக்கு அங்கத்துவம்

புடாபெஸ்ட் சைபர் குற்றம் தொடர்பான பிரகடனத்தில் அங்கத்துவம் பெறும் முதலாவது தெற்காசிய வலய நாடு என்ற பெயரை இலங்கை பெற்றுள்ளது. இதற்கான தகுதியை இலங்கை பெற்றுள்ளதாகவும் சட்ட ஆவணத்தை ஐரோப்பிய கவுன்ஸிலுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப (ICTA) சட்டப் பணிப்பாளர் ஜயந்த பெனாண்டோ தெரிவித்துள்ளார். ஐரோப்பிய கவுன்ஸில் செயலாளர் நாயகம் இந்த உறுப்புரிமையை பெற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததற்கு அமைய குறுகிய காலத்தில் சட்ட ஆவணம் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இது இலங்கைக்கு…

Read More