Headlines

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவு




நேபாளத்தில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து மேற்காக 157 கி.மீ தொலைவில் உள்ள பரத்பூர் அருகே இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கம் காரணமாக சேதம் ஏதும் ஏற்பட்டதா என இதுவரை எவ்வித தகவலும் வரவில்லை. முன்னதாக கடந்த மாதம் 25-ந் தேதி நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தில் 8000க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்பதும், அதே போல் கடந்த 12-ந் தேதி நிகழ்ந்த நிலநடுக்கத்திலும் நேற்று வரை 125 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *